செய்திகள் :

தொகுதி மறுவரையறை: ``இறுதியில் ஓர் அரசியல் மதிப்பிழப்பு நடவடிக்கையாகவே முடியும்" - எம்.பி சசி தரூர்

post image

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேசங்களின் தொகுதி மறுவரையறை மசோதான் என மூன்று மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது. மாலை 4 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் உரையாற்றியபோது, ``மகளிர் இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைப்பதானது, இந்தியப் பெண்களின் கனவுகளை நம் வரலாற்றிலேயே மிகவும் சர்ச்சைக்குரிய அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றிற்குப் பிணைக் கைதியாக ஆக்குவதற்குச் சமமாகும்... எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள தொகுதி மறுவரையறையின் மூலம், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிய மாநிலங்களுக்குக் கூடுதல் அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டு அவர்கள் வெகுமதியளிக்கப்படுவார்கள்.

எம்.பி சசிதரூர்
எம்.பி சசிதரூர்

'சிறந்த ஆளுமை என்பது அரசியலில் உங்களைப் பொருளற்றதாக்கிவிடும்' என்ற செய்தியையா நாம் சொல்ல விரும்புகிறோம் என்று நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் நீங்கள் காட்டிய அதே அவசரத்தை, இப்போது இந்தத் தொகுதி மறுவரையறை முன்மொழிவிலும் காட்டுகிறீர்கள். துரதிர்ஷ்டவசமாக, அந்த அவசரம் நாட்டிற்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்தத் தொகுதி மறுவரையறை என்பது இறுதியில் ஒரு 'அரசியல் பணமதிப்பிழப்பு' நடவடிக்கையாகவே முடியும். இதைச் செய்யாதீர்கள்." எனத் தெரிவித்திருக்கிறார்.

"சினிமாவில் இருக்கக்கூடிய அதே சத்யராஜ், பிரகாஷ் ராஜ் போன்ற கூத்தாடிகள் தானே.!"- குஷ்பு ஆவேசம்

மதுரை மத்திய தொகுதி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பரப்புரை மேற்கொண்டிருந்தார். அந்த பரப்புரையில் "வேட்பாளராக ஆக்கப்படுவதற்கு மூன்று நாட்... மேலும் பார்க்க

தமிழகம் சந்தித்த தொங்கு சட்டசபைகள், விஜயகாந்த் வழியில் 'மைனாரிட்டி' ஆட்சிக்கு பாதை போடுகிறாரா விஜய்?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கே நாட்கள்தான் இருப்பதால் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன அரசியல் கட்சிகள்.தமிழகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆளப் போவது எந்தக் கட்சி? யார் முதல்... மேலும் பார்க்க

”ராகுல்காந்தி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை”- நெகிழ்ந்த பட்டுக்கோட்டை காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக துறையூர் உள்ளிட்ட தொகுதிகளில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ராகுல்காந்தி பிரசாரம் செய்தார். இதற்காக பல மாவட்டங்களைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

'10 வருஷமா உங்க மனைவிக்கு கிடைக்காத சீட், உங்களுக்கு எப்படி.?'- சுந்தர் சியை சாடிய பிரகாஷ் ராஜ்

மதுரை மத்திய தொகுதி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பரப்புரை மேற்கொண்டிருக்கிறார். அந்தப் பரப்புரையில் சுந்தர் சி குறித்து பேசிய பிரகாஷ் ர... மேலும் பார்க்க

வேஷ்டி - சட்டையில் பிரதமர் கோவையில் பிரசாரம் | Photo Album

தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல்... மேலும் பார்க்க

"மற்ற நாடுகளை அச்சுறுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை" - ட்ரம்பை சாடிய பிரேசில் அதிபர் லூலா

மற்ற நாடுகளை அச்சுறுத்த அமெரிக்க அதிபருக்கு எந்த உரிமையும் இல்லை என பிரேசில் அதிபர் லூலா ட்ரம்பை சாடியிருக்கிறார். வர்த்தகம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய விவகாரங்களில் பிரேசில் அதிபர் லூலாவ... மேலும் பார்க்க