செய்திகள் :

ஹரியானா: `குடிபோதையில் ரகளை' காரை நடுரோட்டில் நிறுத்தி வாக்குவாதம் செய்த பெண் செவிலியர்

post image

ஹரியானா மாநிலம் ஹிசார் என்ற இடத்தில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நெருக்கடி மிகுந்த ரோட்டில் பெண் ஒருவர் தனது காரை கொண்டு வந்து நிறுத்தினார். காரை ஓட்டி வந்த அப்பெண் குடிபோதையில் இருந்திருக்கிறார். அப்பெண் நடுரோட்டில் காரை நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்திலிருந்து இறங்கி வந்து காரில் இருந்த பெண்ணிடம் காரை அங்கிருந்து எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அப்பெண் தனது காரை எடுக்க மறுத்ததோடு அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பெண்ணைச் சுற்றி மக்கள் கூட்டம் கூடியது. ஆனால் அதனைப்பற்றி கவலைப்படாமல் தன்னுடன் பேசியவர்களிடம் அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அவர் காரில் இறங்க முயன்றார். ஆனால் குடிபோதையில் அவரால் முடியவில்லை. இதனால் கார் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அதன் பிறகு எப்படியோ காரில் இருந்து இறங்கி வெளியில் வந்து அங்கு நின்று கொண்டிருந்தவர்களுடன் வாக்குவாதம் செய்தார்.

அங்கு நின்றவர்களிடம் தனது வேலை குறித்தும், தான் வாங்கும் சம்பளம் குறித்தும் பெரிதாகப் பேசினார். அதோடு தனது காரை போலீஸார் பறிமுதல் செய்தாலும் தன்னால் வேறு கார் வாங்க முடியும் என்று அப்பெண் தெரிவித்தார்.

நடுரோட்டில் கூட்டம் கூடி நிற்பதை ரோந்துக்கு வந்த போலீஸார் பார்த்து அங்கு சென்றனர். அவர்கள் வந்து அப்பெண்ணிடம் காரை அங்கிருந்து எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். அப்படி இருந்தும் அப்பெண் காரை எடுக்க மறுத்து ரகளை செய்து கொண்டிருந்தார். இதனால் 20 நிமிடத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பெண்ணை போலீஸார் போராடி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவரிடம் உரிய ஆவணங்களும் இல்லை. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்பெண் ரோட்டில் ரகளை செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. அப்பெண்ணிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் ராஜஸ்தானில் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றுவது தெரிய வந்தது.

`பேய் நடமாட்டம்' - மாநகராட்சி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் - சிவசேனா அமைச்சர்

மகாராஷ்டிரா மாநிலம் சிவசேனா சார்பாக அமைச்சராக இருப்பவர் சஞ்சய் சிர்சாத். இவர் சத்ரபதி சாம்பாஜிநகர் மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் இருக்கிறார். சாம்பாஜி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசு... மேலும் பார்க்க

`மராத்தி தெரியாவிட்டால் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் லைசென்ஸ் ரத்து'- புது கெடுவால் டிரைவர்கள் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் மும்பை, நாசிக், புனே போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் இயக்கப்படுகின்றன. இந்த டாக்ஸி மற்றும் ஆட்டோக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தாலும், பொதுமக்கள் பயணம் செய... மேலும் பார்க்க

`நினைவு குறைந்துவிட்டது' முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு மூளை பக்கவாதம் - நண்பர் தகவல்

கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி 1990களில் அதிக அளவில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். சச்சின் தெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் என்று கருதப்படும் வினோத் காம்ப்ளி, மும்பையில் பாந்த்ரா பகுதியில் வசி... மேலும் பார்க்க

`பீஃப் உண்ணுங்கள்; நமாஸ் செய்யுங்கள்'- TCS-ல் மத மாற்ற முயற்சி; Undercover sketch-ல் சிக்கிய கும்பல்

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீஸ் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தொடர்பாக 8 பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், 9 வழக்குகள்... மேலும் பார்க்க

கைநழுவிய வேட்டை... கால் நழுவிய சிங்கம்! 15 அடி ஆழக் கிணற்றில் ஒரு மணி நேரத் திக் திக்! | Viral Video

வேட்டைக்காகப் பாய்ந்த வேகம், அடுத்த நொடியே ஒரு சிங்கத்தின் வாழ்வா சாவா போராட்டமாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில், ஒரு எருமை மாட்டை வேட்டையாட அந்த ஆசிய சி... மேலும் பார்க்க

`பிரேக்-அப்பை விடவும் அதிக வலி...'- 60 நிமிடங்களில் கைநழுவிய வாடகை வீடு; இளம்பெண்ணின் வைரல் பதிவு!

இது பெங்களூரு பாஸ்... இங்கே ஆள விடுறதை விட வீடு போனா வலி அதிகம்! - வாடகை வீட்டின் மறுபக்கத்தை பகிர்ந்த பெண்ணின் குமுறல்!இந்தியாவின் சிலிக்கான் வேலி, கனவுகளின் தலைநகரம் என பல பெயர்களில் அழைக்கப்படும் ப... மேலும் பார்க்க