செய்திகள் :

`நினைவு குறைந்துவிட்டது' முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு மூளை பக்கவாதம் - நண்பர் தகவல்

post image

கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி 1990களில் அதிக அளவில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். சச்சின் தெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் என்று கருதப்படும் வினோத் காம்ப்ளி, மும்பையில் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வந்த வினோத் காம்ப்ளி மது பழக்கத்திற்கு அடிமையாகி, தனது உடல் நலத்தை கெடுத்துக்கொண்டார். கடந்த ஆண்டு வினோத் காம்ப்ளிக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டு மும்பை அருகில் உள்ள தானே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

ஆனால் அவர் இன்னும் முழுமையாக குணமாகவில்லை. அவருக்கு மூளையில் ரத்தக்கட்டி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதோடு மூளையில் பக்கவாதம் ஏற்பட்டு இருப்பதாகவும் வினோத் காம்ப்ளியின் நண்பர் மார்கஸ் அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "அவருடைய நண்பர்கள், பெரும்பாலும் கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய ஒரு வாட்ஸ்அப் குழுவை நான் உருவாக்கியுள்ளேன்.

பெயர்களைக் குறிப்பிடாமல் சொல்வதென்றால், அவர்கள் நிதி ரீதியாக நிறைய பங்களிக்கிறார்கள். அவருடைய ஞாபகசக்தி நன்றாக இல்லை. ஆனால் கடந்த ஆறு மாதங்களாக அது குறையவும் இல்லை. அவரால் அதிகம் நினைவில் கொள்ள முடியாது. ஆனால் ஏதாவது நினைவுக்கு வந்தால், அது அவருக்குப் புரிந்துவிடும். இல்லையென்றால், அவருக்குச் சிரமமாகிவிடும். வினோத்தின் மூளையில் ரத்தக்கட்டி உள்ளது, அவர் ஆரம்பத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால் அதை அகற்ற முடியவில்லை. மேலும், அவருக்கு மூளை பக்கவாதம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர் கூறியுள்ளார்'' என்று கூறினார்.

வினோத் காம்ப்ளி இப்போது குடிப்பதை நிறுத்திவிட்டார், ஆனால் சில சமயங்களில் கீழே விழும்போது, ​​வழிப்போக்கர்களிடம் புகைப்பிடிக்க உதவுமாறு கேட்பார். அவர் ஆட்டோ ஓட்டுநர்களிடம் சிகரெட் கேட்பார். அவர்களும் 'வினோத் காம்ப்ளி'க்கு உதவுவதாக நினைத்து மகிழ்ச்சியுடன் கொடுப்பார்கள். ஆனால் அவர்கள் என்ன தீங்கை ஏற்படுத்துகிறார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இப்போது பாதிப்பு அவரது மூளைக்குத்தான் என்று பிரபல நரம்பியல் டாக்டர் ஆதில் சாக்லா தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் வினோத் காம்ப்ளி வேலையும் இல்லாமல் சிரமப்பட்டார்.

`மராத்தி தெரியாவிட்டால் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் லைசென்ஸ் ரத்து'- புது கெடுவால் டிரைவர்கள் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் மும்பை, நாசிக், புனே போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் இயக்கப்படுகின்றன. இந்த டாக்ஸி மற்றும் ஆட்டோக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தாலும், பொதுமக்கள் பயணம் செய... மேலும் பார்க்க

`பீஃப் உண்ணுங்கள்; நமாஸ் செய்யுங்கள்'- TCS-ல் மத மாற்ற முயற்சி; Undercover sketch-ல் சிக்கிய கும்பல்

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீஸ் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தொடர்பாக 8 பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், 9 வழக்குகள்... மேலும் பார்க்க

கைநழுவிய வேட்டை... கால் நழுவிய சிங்கம்! 15 அடி ஆழக் கிணற்றில் ஒரு மணி நேரத் திக் திக்! | Viral Video

வேட்டைக்காகப் பாய்ந்த வேகம், அடுத்த நொடியே ஒரு சிங்கத்தின் வாழ்வா சாவா போராட்டமாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில், ஒரு எருமை மாட்டை வேட்டையாட அந்த ஆசிய சி... மேலும் பார்க்க

`பிரேக்-அப்பை விடவும் அதிக வலி...'- 60 நிமிடங்களில் கைநழுவிய வாடகை வீடு; இளம்பெண்ணின் வைரல் பதிவு!

இது பெங்களூரு பாஸ்... இங்கே ஆள விடுறதை விட வீடு போனா வலி அதிகம்! - வாடகை வீட்டின் மறுபக்கத்தை பகிர்ந்த பெண்ணின் குமுறல்!இந்தியாவின் சிலிக்கான் வேலி, கனவுகளின் தலைநகரம் என பல பெயர்களில் அழைக்கப்படும் ப... மேலும் பார்க்க

சம்பளப் பிரச்னை; போர்க்களமாக மாறிய நொய்டா; போராட்டத்தில் ஈடுபட்ட 300 தொழிலாளர்கள் கைது

டெல்லி அருகில் உள்ள நொய்டாவில் மாருதி காருக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் அதிக அளவில் இருக்கின்றன. இதுதவிர நொய்டா மற்றும் காசியாபாத்தில் அதிக அளவில் கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ப... மேலும் பார்க்க

டொனால்டு ட்ரம்ப்பின் சரச்சைப் பதிவு; படத்தை நீக்கியதற்கு விளக்கமளித்த ட்ரம்ப்

அமெரிக்கா மத்திய கிழக்கில் உள்ள ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு உலக நாடுகள் ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டன. இஸ்ரேலும், அமெரிக்காவும் இப்போரில் பின்னடைவைச் சந்தித்ததாகவே உலக நாடுகள் கருதுகின்றன. மற்றொருப... மேலும் பார்க்க