செய்திகள் :

டொனால்டு ட்ரம்ப்பின் சரச்சைப் பதிவு; படத்தை நீக்கியதற்கு விளக்கமளித்த ட்ரம்ப்

post image

அமெரிக்கா மத்திய கிழக்கில் உள்ள ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு உலக நாடுகள் ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டன. இஸ்ரேலும், அமெரிக்காவும் இப்போரில் பின்னடைவைச் சந்தித்ததாகவே உலக நாடுகள் கருதுகின்றன. மற்றொருபுறம் இந்த போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அடிக்கடி தெரிவிக்கும் கருத்துக்கள் அமெரிக்காவிற்கே தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கிறது. ஈரான் மற்றும் லெபனான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதல் குறித்து போப் ஆண்டவர் லியோ XIV  தெரிவித்த கருத்துக்கும் டொனால்டு ட்ரம்ப் கடுமையாக பதிலடி கொடுத்து இருந்தார்.

தற்போது டொனால்டு ட்ரம்ப் தன்னை ஏசுநாதராகவே சித்தரித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார். ட்ரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட ஏ.ஐ தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் ட்ரம்ப் ஏசுநாதர் வடிவத்தில் நோயாளி ஒருவரை குணப்படுத்துகிறார்.

இப்படம் வெளியானவுடன் நெட்டிசன்கள் டொனால்டு ட்ரம்பை கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். ஒரு பயனர் தெரிவித்துள்ள கருத்தில், ட்ரம்பை பின்பற்றுபவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர் நினைக்கிறார்." என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர் வெளியிட்ட பதிவில்,, "அவர் இயேசுவை அங்கீகரிக்கவில்லை, ஆனால் உடனடியாக தன்னை ஏசுவை போன்று அடையாளப்படுத்திக்கொண்டார். உங்கள் ஆதரவாளர்கள் உங்களை ஒரு இரட்சகராக நடத்தும்போது இதுதான் நடக்கும் - நீங்கள் அதை நம்பத் தொடங்குகிறீர்கள்." என்று தெரிவித்துள்ளார். ட்ரம்ப் வெளியிட்ட பதிவு பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அந்த பதிவை ட்ரம்ப் நீக்கி விட்டு அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதொடு இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,'' அது சித்தரிக்கப்படவில்லை.

அது நான்தான். நான் தான் அதை பதிவிட்டேன். ஒரு மருத்துவராக என்னை நினைத்தேன். அது நாங்கள் ஆதரிக்கும் செஞ்சிலுவைச் சங்கத்துடன் தொடர்புடையது. இது என்னைக் ஒரு மருத்துவராகக் காட்டுவதற்காக உருவாக்கப்பட்டது, நான் மக்களைக் குணப்படுத்துகிறேன், உண்மையில் நான் மக்களைக் குணப்படுத்துகிறேன். நான் மக்களை மிகச் சிறப்பாகக் குணப்படுத்துகிறேன்," என்று அதிபர் டொனால்ட் டிரம்ப், இயேசுவைப் போன்ற ஒரு AI புகைப்படத்தைப் பற்றியும், அதை யார் பதிவிட்டது என்பது பற்றியும் கேட்கப்பட்டபோது கூறினார். டொனால்டு ட்ரம்ப் தன்னை ஏசுநாதராக காட்டிக்கொண்டது கிறிஸ்தவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கைநழுவிய வேட்டை... கால் நழுவிய சிங்கம்! 15 அடி ஆழக் கிணற்றில் ஒரு மணி நேரத் திக் திக்! | Viral Video

வேட்டைக்காகப் பாய்ந்த வேகம், அடுத்த நொடியே ஒரு சிங்கத்தின் வாழ்வா சாவா போராட்டமாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில், ஒரு எருமை மாட்டை வேட்டையாட அந்த ஆசிய சி... மேலும் பார்க்க

`பிரேக்-அப்பை விடவும் அதிக வலி...'- 60 நிமிடங்களில் கைநழுவிய வாடகை வீடு; இளம்பெண்ணின் வைரல் பதிவு!

இது பெங்களூரு பாஸ்... இங்கே ஆள விடுறதை விட வீடு போனா வலி அதிகம்! - வாடகை வீட்டின் மறுபக்கத்தை பகிர்ந்த பெண்ணின் குமுறல்!இந்தியாவின் சிலிக்கான் வேலி, கனவுகளின் தலைநகரம் என பல பெயர்களில் அழைக்கப்படும் ப... மேலும் பார்க்க

சம்பளப் பிரச்னை; போர்க்களமாக மாறிய நொய்டா; போராட்டத்தில் ஈடுபட்ட 300 தொழிலாளர்கள் கைது

டெல்லி அருகில் உள்ள நொய்டாவில் மாருதி காருக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் அதிக அளவில் இருக்கின்றன. இதுதவிர நொய்டா மற்றும் காசியாபாத்தில் அதிக அளவில் கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ப... மேலும் பார்க்க

`நண்பர்கள் மஞ்சள் மாத்திரை கொடுத்தார்கள்' இசை நிகழ்ச்சியில் போதை; மாணவர்கள் உயிரிழப்பு

மும்பை கோரேகாவ் நெஸ்கோ கண்காட்சி மையத்தில் ''999999999 Music Concert” என்ற பெயரில்இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இதில் தென்... மேலும் பார்க்க

ஜனநாயகன் படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய உள்ளூர் தொலைக்காட்சி – உரிமையாளர் கைது, அலுவலகத்திற்கு சீல்!

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் மத்திய தணிக்கை சான்று பெறாமல் நிலுவையில் இருந்து வரும் நிலையில், சட்ட விரோதமாக ஆன்லைனில் கசிந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்... மேலும் பார்க்க

Asha Bhosle: மறைந்த இசை அரசி; அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட ஆஷா போஸ்லே உடல்!

இந்தி உட்பட 20க்கும் மேற்பட்ட மொழிப் படங்களில் பாடியிருக்கும் பாடகி ஆஷா போஸ்லே நேற்று மும்பை மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். மறைந்த இசைக்குயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரா முத... மேலும் பார்க்க