செய்திகள் :

`நண்பர்கள் மஞ்சள் மாத்திரை கொடுத்தார்கள்' இசை நிகழ்ச்சியில் போதை; மாணவர்கள் உயிரிழப்பு

post image

மும்பை கோரேகாவ் நெஸ்கோ கண்காட்சி மையத்தில் ''999999999 Music Concert” என்ற பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இதில் தென் மும்பை கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் திரளாக வந்திருந்தனர். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது மாணவர்கள் சேர்ந்து ஆடினர். அப்போது அவர்கள் உற்சாகமாக ஆட மாணவர்களுக்கு ஏதோ ஒரு மாத்திரையை கொடுத்தகாகத் தெரிகிறது. அந்த மாத்திரையை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு மாணவர்கள் அதிகாலை வரை நடனமாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். அவர்கள் அனைவரும் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களால் வாக்குமூலம் கொடுக்க முடியாத நிலையில் இருந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தவர்களில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார்கள்.

அவர்கள் தென்மும்பை கல்லூரியில் எம்.பி.ஏ.படித்து வந்தனர்.

இதில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு மாணவி நடந்த சம்பவம் குறித்து கூறுகையில்,'' என்னுடன் படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து இசை நிகழ்ச்சியின் போது நாங்கள் சேர்ந்து நடனமாடிக்கொண்டிருந்தோம். அப்போது சக மாணவர்கள் மஞ்சள் கலர் மாத்திரை ஒன்றைக் கொடுத்துச் சாப்பிட சொன்னார்கள். என்னுடன் இருந்த மற்ற மாணவர்களும் சாப்பிட்டனர். கடைசியாக நான் அவளை ( இறந்த மாணவி) பார்த்தபோது நடனமாடிக்கொண்டிருந்தார். அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை''என்று தெரிவித்தார்.

போலீஸார் இது குறித்து நடத்திய விசாரணையில் MDMA எனப்படும் ஒரு வித போதைப்பொருள் கலந்த மாத்திரை விநியோகம் செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது. தென்மும்பை கல்லூரி மாணவர்கள் 25 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். மாணவர்களிடம் விசாரணை நடத்தி போதைப்பொருள் மாத்திரையை சப்ளை செய்த இரண்டு மாணவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைநழுவிய வேட்டை... கால் நழுவிய சிங்கம்! 15 அடி ஆழக் கிணற்றில் ஒரு மணி நேரத் திக் திக்! | Viral Video

வேட்டைக்காகப் பாய்ந்த வேகம், அடுத்த நொடியே ஒரு சிங்கத்தின் வாழ்வா சாவா போராட்டமாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில், ஒரு எருமை மாட்டை வேட்டையாட அந்த ஆசிய சி... மேலும் பார்க்க

`பிரேக்-அப்பை விடவும் அதிக வலி...'- 60 நிமிடங்களில் கைநழுவிய வாடகை வீடு; இளம்பெண்ணின் வைரல் பதிவு!

இது பெங்களூரு பாஸ்... இங்கே ஆள விடுறதை விட வீடு போனா வலி அதிகம்! - வாடகை வீட்டின் மறுபக்கத்தை பகிர்ந்த பெண்ணின் குமுறல்!இந்தியாவின் சிலிக்கான் வேலி, கனவுகளின் தலைநகரம் என பல பெயர்களில் அழைக்கப்படும் ப... மேலும் பார்க்க

சம்பளப் பிரச்னை; போர்க்களமாக மாறிய நொய்டா; போராட்டத்தில் ஈடுபட்ட 300 தொழிலாளர்கள் கைது

டெல்லி அருகில் உள்ள நொய்டாவில் மாருதி காருக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் அதிக அளவில் இருக்கின்றன. இதுதவிர நொய்டா மற்றும் காசியாபாத்தில் அதிக அளவில் கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ப... மேலும் பார்க்க

டொனால்டு ட்ரம்ப்பின் சரச்சைப் பதிவு; படத்தை நீக்கியதற்கு விளக்கமளித்த ட்ரம்ப்

அமெரிக்கா மத்திய கிழக்கில் உள்ள ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு உலக நாடுகள் ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டன. இஸ்ரேலும், அமெரிக்காவும் இப்போரில் பின்னடைவைச் சந்தித்ததாகவே உலக நாடுகள் கருதுகின்றன. மற்றொருப... மேலும் பார்க்க

ஜனநாயகன் படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய உள்ளூர் தொலைக்காட்சி – உரிமையாளர் கைது, அலுவலகத்திற்கு சீல்!

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் மத்திய தணிக்கை சான்று பெறாமல் நிலுவையில் இருந்து வரும் நிலையில், சட்ட விரோதமாக ஆன்லைனில் கசிந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்... மேலும் பார்க்க

Asha Bhosle: மறைந்த இசை அரசி; அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட ஆஷா போஸ்லே உடல்!

இந்தி உட்பட 20க்கும் மேற்பட்ட மொழிப் படங்களில் பாடியிருக்கும் பாடகி ஆஷா போஸ்லே நேற்று மும்பை மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். மறைந்த இசைக்குயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரா முத... மேலும் பார்க்க