செய்திகள் :

மேற்கு Vs மத்திய குழு; சிம்பன்சிகளிடையே வெடித்த `சிவில் வார்!' - உகாண்டாவில் அதிர்ச்சி!

post image

சுமார் 25 ஆண்டுகளாக உகாண்டாவின் ங்கோகோ (Ngogo) காடுகளில் உலகின் மிகப்பெரிய சிம்பன்சி சமூகம் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தது.

சுமார் 200 சிம்பன்சிகளைக் கொண்ட இந்த மாபெரும் கூட்டம், ஒரு முன்மாதிரி சமூகமாக அறியப்பட்டது. ஆனால், கடந்த 2015-ம் ஆண்டு முதல் இந்த ஒற்றுமை சிதைந்து, ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்த சிம்பன்சிகள் இரண்டு பகைக் குழுக்களாகப் பிரிந்து தங்களுக்குள்ளேயே ஒரு கொடூரமான போரைத் தொடங்கியுள்ளன.

AI

கூட்டத்தை வழிநடத்திய வலிமையான தலைவர்களின் மரணம் மற்றும் அவர்களுக்குப் பின் யார் அடுத்த தலைவர் என்பதில் ஏற்பட்ட போட்டியே இந்த விரிசலின் தொடக்கம் என நம்பப்படுகிறது.

மேலும், குழுக்களுக்கு இடையே சமாதான பாலமாக இருந்த முதிய சிம்பன்சிகளின் இறப்பும், 2017-ல் பரவிய ஒரு சுவாச நோய்த்தொற்று பல சிம்பன்சிகளைக் கொன்றதும் இந்தச் சமூகக் கட்டமைப்பை முற்றிலுமாகச் சிதைத்துவிட்டது. இதனால் 'மத்திய குழு'  மற்றும் 'மேற்கு குழு' எனப் பிரிந்த இவை, அன்று முதல் ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்க்கத் தொடங்கின.

2015 முதல் இன்று வரை சுமார் 24 சிம்பன்சிகள் இந்தக் குழுப் போரில் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளன. இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், கொல்லப்பட்ட17 சிம்பன்சிகள் பச்சிளம் குட்டிகள். மேற்கு குழுவைச் சேர்ந்த சிம்பன்சிகள் திட்டமிட்டு மத்திய குழுவின் எல்லைக்குள் ஊடுருவுகின்றன. ஒருமுறை 13 சிம்பன்சிகள் சேர்ந்து "பேசி" (Basie) என்ற வயதான சிம்பன்சியைத் தாக்கி அழித்த சம்பவம், ஆராய்ச்சியாளர்களை உலுக்கியது. 

AI

சிம்பன்சிகளின் இந்த நடத்தை மனித குலத்திற்கு ஒரு எச்சரிக்கையாகவும் பாடமாகவும் பார்க்கப்படுகிறது. சிம்பன்சிகள் மனிதர்களுக்கு 98% மரபணு ரீதியாக நெருக்கமானவை என்பதால், அவற்றின் செயல்பாடுகள் நமது ஆதி வரலாற்றைப் பிரதிபலிக்கின்றன.  இயற்கை நமக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டுவது ஒன்றைத்தான்: அது எவ்வளவு பெரிய சமூகமாக இருந்தாலும், எவ்வளவு நெருக்கமான உறவுகளாக இருந்தாலும், அங்கு அன்பும், நம்பிக்கையும் இல்லாதபோது வன்முறை மட்டுமே எஞ்சியிருக்கும்.

விராட் கோலி போட்ட லைக்; இணையத்தில் வைரலாகும் LizLaz - யார் இவர்?

இன்ஸ்டாகிராமில் தென்னாப்பிரிக்கா இன்ப்ளூயன்சர் ஒருவரின் புகைப்படத்திற்கு விராட் கோலி லைக் போட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்ப... மேலும் பார்க்க

ஹரியானா: `குடிபோதையில் ரகளை' காரை நடுரோட்டில் நிறுத்தி வாக்குவாதம் செய்த பெண் செவிலியர்

ஹரியானா மாநிலம் ஹிசார் என்ற இடத்தில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நெருக்கடி மிகுந்த ரோட்டில் பெண் ஒருவர் தனது காரை கொண்டு வந்து நிறுத்தினார். காரை ஓட்டி வந்த அப்பெண் குடிபோதையில் இருந்திருக்கிறார். அ... மேலும் பார்க்க

`பேய் நடமாட்டம்' - மாநகராட்சி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் - சிவசேனா அமைச்சர்

மகாராஷ்டிரா மாநிலம் சிவசேனா சார்பாக அமைச்சராக இருப்பவர் சஞ்சய் சிர்சாத். இவர் சத்ரபதி சாம்பாஜிநகர் மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் இருக்கிறார். சாம்பாஜி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசு... மேலும் பார்க்க

`மராத்தி தெரியாவிட்டால் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் லைசென்ஸ் ரத்து'- புது கெடுவால் டிரைவர்கள் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் மும்பை, நாசிக், புனே போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் இயக்கப்படுகின்றன. இந்த டாக்ஸி மற்றும் ஆட்டோக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தாலும், பொதுமக்கள் பயணம் செய... மேலும் பார்க்க

`நினைவு குறைந்துவிட்டது' முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு மூளை பக்கவாதம் - நண்பர் தகவல்

கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி 1990களில் அதிக அளவில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். சச்சின் தெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் என்று கருதப்படும் வினோத் காம்ப்ளி, மும்பையில் பாந்த்ரா பகுதியில் வசி... மேலும் பார்க்க

`பீஃப் உண்ணுங்கள்; நமாஸ் செய்யுங்கள்'- TCS-ல் மத மாற்ற முயற்சி; Undercover sketch-ல் சிக்கிய கும்பல்

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீஸ் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தொடர்பாக 8 பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், 9 வழக்குகள்... மேலும் பார்க்க