ஓட்டு கேட்க கிளம்பிய நடிகை, கேட்டை திறக்காத தலைவர்; கட்சியில் சேர்ந்ததும் நடிகரு...
ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறந்த ஈரான்; எப்போது வரை இந்தக் குட் நியூஸ்?
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் அறிவித்த பின்னும், ஈரான் முழுமையாக ஹார்முஸ் ஐலசந்தியைத் திறக்கவில்லை.
இதற்கு காரணம், இஸ்ரேல் லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது ஆகும்.
இந்த இரு தரப்பின் பேச்சுவார்த்தை கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 13) நடந்ததையொட்டி, இன்று முதல் 10 நாள்களுக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை முன்னிட்டு தற்போது ஹார்முஸ் ஐலசந்தியை முழுமையாகத் திறந்துள்ளது ஈரான்.

ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் முடியும் வரை இருக்கும் என்று ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அப்படிப் பார்த்தால், வரும் 27-ம் தேதியோடு இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம் முடிகிறது. அநேகமாக, அராக்சியின் அறிவிப்பின் படி, அன்று வரை ஹார்முஸ் ஐலசந்தி முழுமையாகத் திறந்திருக்கும்.













