செய்திகள் :

வால்பாறை: சுற்றுலா வேன் கவிழ்ந்து கொடூர விபத்து – 7 பேர் உயிரிழந்த சோகம்!

post image

கோவை மாவட்டம் வால்பாறை முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. வால்பாறை செல்லும் மலைப்பாதையில் மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த நிலையில் கோழிக்கோட்டில் இருந்து வால்பாறைக்கு 16 பேருடன் ஒரு சுற்றுலா வேன் சென்றுவிட்டு, மீண்டும் கோழிக்கோடு செல்வதற்காக பொள்ளாச்சி நோக்கி மீண்டும் இறங்கி வந்துள்ளது. அப்போது 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன், கவிழ்ந்து விழுந்தது. மேலும் மலைச்சரிவில் உருண்ட அந்த வேன், நேராக 10வது கொண்டை ஊசி வளைவு சாலையில் விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து குறித்து அவ்வழியாக சென்ற பயணிகள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தனர். இதில் மேலும் பலர் உயிரிழக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லர் வெடிப்பு: 10 பேர் பலி?; 40 பேர் படுகாயம்

சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள சிங்கிதாரி கிராமத்தில் அமைந்துள்ளது வேதாந்தா மின் உற்பத்தி நிலையம் (Vedanta Power Plant), இந்த மின் உற்பத்தி நிலையத்தில் இன்று மதியம் ஏற்பட்ட பயங்கர பாய்லர் ... மேலும் பார்க்க

மண்டபம் அருகே டூ வீலர்கள் மோதல்; காய்ச்சல் சிகிச்சைக்குச் சென்ற சிறுமி உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு

மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை பகுதியைச் சேர்ந்தவர் கவுசல்யா. இவரின் மகள் நபியாஶ்ரீ (6). நபியாஶ்ரீக்கு காய்சல் அடித்ததால் மருத்துவரிடம் சிகிச்சை பெற தன் தம்பி கபில்தேவ் முருகன் (17) உடன் மூவரும் டூவீலரில... மேலும் பார்க்க

டாக்சி மீது டேங்கர் மோதி ஒரே பெரும் விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 11 பேர் பலி

மும்பை அருகில் உள்ள கல்யான் என்ற இடத்தில் இருந்து முர்பாட் என்ற இடத்திற்கு டாக்சி சேவை இயக்கப்படுகிறது. இந்த வழிதடத்தில் பஸ் குறைந்த அளவில் இயக்கப்படுவதால் ஷேர் டாக்சி அதிக அளவில் இயக்கப்படுகிறது. நேற... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ட்ரக்கிங் சென்ற மாணவர்கள்; வெடித்த ராக்கெட் லாஞ்சர் - என்ன நடந்தது?

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி பயிற்சி மையம் அமைந்துள்ள அனுமந்தபுரம் மலைப்பகுதிக்கு அனுமதியின்றி கல்லூரி மாணவர்கள் 6 பேர் டிரக்கிங் சென்றிருக்கின்றனர். அங்கி... மேலும் பார்க்க

ஐதராபாத்: காங்கிரீட் கலவை டேங்கர் விழுந்து விபத்து; BMW காரில் சிக்கி வழக்கறிஞர் பலி

ஐதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்ரீனிவாஸ் ராவ் தனது பி.எம்.டபிள்யூ காரில் ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தார். கார் காஞ்சிகச்சேர்லா என்ற இடத்தில் இருக்கும் டோல்கேட் அருகில்... மேலும் பார்க்க

நீலகிரி: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து; தவெக வேட்பாளரின் உறவினர்கள், தொண்டர்கள் காயம்|Photos

பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவ... மேலும் பார்க்க