செய்திகள் :

டாக்சி மீது டேங்கர் மோதி ஒரே பெரும் விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 11 பேர் பலி

post image

மும்பை அருகில் உள்ள கல்யான் என்ற இடத்தில் இருந்து முர்பாட் என்ற இடத்திற்கு டாக்சி சேவை இயக்கப்படுகிறது. இந்த வழிதடத்தில் பஸ் குறைந்த அளவில் இயக்கப்படுவதால் ஷேர் டாக்சி அதிக அளவில் இயக்கப்படுகிறது. நேற்று டாக்சி ஒன்று கல்யானிலிருந்து முர்பாட் நோக்கி சென்றுகொண்டிருந்த போது எதிரில் வந்த சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது மோதியது. இதில் டாக்சி மீது சிமென்ட் கலவை டேங்கர் விழுந்ததில் டாக்சி அப்படியே அப்பளம் போன்று நொறுங்கியது. இந்த விபத்தில் டாக்சியில் இருந்த 11 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். போலீஸாரும், உள்ளூர் மக்களும் விரைந்து வந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.

உள்ளூர் எம்.எல்.ஏ.கிஷன் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். இந்த விபத்தில் அஞ்சனா என்றவர் தன் 3 பிள்ளைகளை இழந்துள்ளார். அஞ்சனாவின் மகள்கள் நேகா(19), மான்சி(22), மகன் பிரதமேஷ்(15) ஆகியோர் முர்பாடில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.

உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்

ஏற்கனவே அஞ்சனாவின் கணவர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். இதனால் அஞ்சனா வீட்டு வேலை செய்து தனது குழந்தைகளை காப்பாற்றி வந்தார்.

இதே போன்று இந்த விபத்தில் கணபதி என்ற விவசாயியும் உயிரிழந்தார். கணபதி தனது மனைவிக்காக கல்யான் சென்று மருந்து வாங்கிக்கொண்டு வந்து கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழக்க நேரிட்டது. கணபதி குடும்பத்தில் அவர் மட்டும் தான் உழைத்துக்கொண்டிருந்தார். தற்போது அவர் இறந்துவிட்டதால் இனி அவரது குடும்பத்தை யார் காப்பாற்றுவது என்ற கேள்வி எழுந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 8 பேர் ஆண்கள். மூன்று பேர் பெண்கள். உயிரிழந்தவர்களில் 6 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து முர்பாட் துணை காவல் கண்காணிப்பாளர் அனில் லாட் கூறுகையில், "இரு வாகன ஓட்டுநர்களின் அதிவேகம் மற்றும் கவனக்குறைவே இச்சம்பவத்திற்குக் காரணம் என சந்தேகிப்பதாகத் தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் டாக்சி டிரைவர் பிரசாந்த் செண்ட்னேவும் (21) ஒருவர். அதே வேளையில், சிமெண்ட் கலவை வாகனத்தின் ஓட்டுநர் தலைமறைவாக உள்ளார். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்யான் மற்றும் முர்பாட் சாலையில் எப்போதும் வாகனங்கள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

செங்கல்பட்டு: ட்ரக்கிங் சென்ற மாணவர்கள்; வெடித்த ராக்கெட் லாஞ்சர் - என்ன நடந்தது?

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி பயிற்சி மையம் அமைந்துள்ள அனுமந்தபுரம் மலைப்பகுதிக்கு அனுமதியின்றி கல்லூரி மாணவர்கள் 6 பேர் டிரக்கிங் சென்றிருக்கின்றனர். அங்கி... மேலும் பார்க்க

ஐதராபாத்: காங்கிரீட் கலவை டேங்கர் விழுந்து விபத்து; BMW காரில் சிக்கி வழக்கறிஞர் பலி

ஐதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்ரீனிவாஸ் ராவ் தனது பி.எம்.டபிள்யூ காரில் ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தார். கார் காஞ்சிகச்சேர்லா என்ற இடத்தில் இருக்கும் டோல்கேட் அருகில்... மேலும் பார்க்க

நீலகிரி: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து; தவெக வேட்பாளரின் உறவினர்கள், தொண்டர்கள் காயம்|Photos

பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவ... மேலும் பார்க்க

மகாராஷ்டிராவில் கிணற்றுக்குள் விழுந்த கார்; 7 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி; விபத்து நடந்தது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகில் உள்ள தீண்டோரி சிவாஜி நகரில் கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி விபத்துள்ளானது. கார் சாலையோர தடுப்பை மீறி அருகில் இருந்த கிணற்றுக்குள் விழுந்தது. கிணறு முழுக்க த... மேலும் பார்க்க

மும்பை: நடுக்கடலில் உள்ள ஒ.என்.ஜி.சி எண்ணெய் கிணற்றில் தீவிபத்து - 10 பேர் காயம்

மும்பை கடல் பகுதியில் ஒ.என்.ஜி.சிக்கு சொந்தமான எண்ணெய் கிணறு இருக்கிறது. இந்த எண்ணெய் கிணற்றில் நேற்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனே அவசர நிலை அறிவிக்கப்பட்டு பணியாளர்கள் அனைவரும் ... மேலும் பார்க்க

பீகார்: கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் உயிரிழப்பு; 12 பேர் காயம்; விபத்து ஏற்பட்டது எப்படி?

பிகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஷெரீப் என்ற இடத்திற்கு அருகில் உள்ள மெஹ்ரா என்ற கிராமத்தில் ஷீட்லாஷ்டமி கோயில் இருக்கிறது. வட இந்தியர்களின் சைத்ரா மாதத்தில் இன்று கடைசி செவ்வாய்கிழமை என்பதால்... மேலும் பார்க்க