செய்திகள் :

நடிகர் அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன்?- வெளிப்படையாக சொன்ன அமர்க்களம் இயக்குநர்

post image

சரண் இயக்கத்தில் அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அமர்க்களம்’.

நேற்று (ஏப்ரல் 24) அஜித்குமார், ஷாலினி திருமண நாளை முன்னிட்டு 4K தொழில்நுட்பத்தில் அமர்க்களம் திரைப்படம் வெளியானது.

ஷாலினி - அஜித்| அமர்க்களம்
ஷாலினி - அஜித்| அமர்க்களம்

இந்நிலையில் அஜித்தை வைத்து அதிகப் படங்களை இயக்கிய இயக்குநர் சரண், அஜித் ஏன் தனது ரசிகர் மன்றத்தை கலைத்தார் என்பது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார்.

இதுதொடர்பாக பேசிய அவர், " அஜித்தைப் பொறுத்தவரை அவர் தனது ரசிகர்களை வெறும் ரசிகர்களாகப் பார்க்காமல், அவர்களை மிகவும் மதிக்கக்கூடியவர்.

'அமர்க்களம்' படம் வெளியான அன்றைய இரவே சுமார் 25,000-க்கும் மேற்பட்ட ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. அந்த அளவிற்கு அவருக்குப் பிரம்மாண்டமான வரவேற்பு இருந்தது.

ரசிகர் மன்றங்கள் பெருகிய போது, அவற்றுக்குள் தேவையற்றப் பதவிச் சண்டைகளும், அரசியல் மோதல்களும் உருவாவதை அஜித் கவனித்தார். மன்றப் பதவிகளுக்காக ரசிகர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்வதும், சண்டையிட்டுக் கொள்வதும் அஜித்திற்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.

ரசிகர்கள் அவர்களுக்குள் மோதிக்கொள்வதை அவர் ஒருபோதும் விரும்பவில்லை. இதில் எனக்கு உடன்பாடில்லை என்று அவர் என்னிடம் பலமுறை கூறியுள்ளார்.

இயக்குநர் சரண்
இயக்குநர் சரண்

ரசிகர்கள் தங்களது குடும்பம், வேலை மற்றும் எதிர்காலத்தைக் கவனிக்க வேண்டும் என்பதே அஜித்தின் விருப்பமாக இருந்தது. ரசிகர்கள் நன்றாக இருக்க வேண்டும், அவர்களுக்குள் எந்த மோதலும் இருக்கக் கூடாது என்று சொல்லித்தான் அவர் தனது ரசிகர் மன்றத்தை கலைத்தார்.

அவர் எப்போதும், 'நீங்கள் உங்கள் வாழ்க்கையை பாருங்கள். என்னுடைய படம் பிடித்திருந்தால் வந்து பாருங்கள்' என்றுதான் சொல்வார். புகழுக்காகவும், மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காகவும் அவர் பேசமாட்டார்" என்று கூறியிருக்கிறார்.

Riythvika: 'திட்டமிட்டப்படி நடக்கவில்லை' - திருமணம் பற்றி மனம் திறந்த 'பிக் பாஸ்' ரித்விகா

'மெட்ராஸ்', 'கபாலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை ரித்விகா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டவர் டைட்டிலையும் வென்றார். ரித்விகாகடந்தாண்டு இவரி... மேலும் பார்க்க

"கவனக் குறைவே காரணம்!" - 'ஜனநாயகன்' பட எடிட்டரை இடைநீக்கம் செய்த படத்தொகுப்பாளர்கள் சங்கம்!

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர வேண்டியது. ஆனால், படத்திற்குச் சென்சார் கிடைக்கத் தாமதமானதால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது. இன்று வரை அப்படத்திற்குச் சென்சார் சான்றிதழ் வழங்... மேலும் பார்க்க

Priyanka Mohan: "தென் கொரியா அதிபர் என் படத்தை பார்த்து..." - ராஷ்டிரபதி பவனில் பிரியங்கா மோகன்

இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக வந்திருந்த தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங்கிற்கு (Lee Jae-myung) ஏப்ரல் 20-ம் தேதி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அர... மேலும் பார்க்க

"அதனால்தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்" - சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஷால்!

தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்றிரவு முதல் வாக்களிக்க மக்கள் பலரும் சொந்த ஊருக்குக் கிளம்பியிருக்கிறார்கள். TN Assembly Elections 2026அப்படி நேற்று ப... மேலும் பார்க்க

TN Assembly Elections 2026: 'ரஜினி, அஜித், PR, த்ரிஷா..' - ஜனநாயகக் கடமையாற்றிய பிரபலங்கள்! | Photos

TN Assembly Elections 2026: விறுவிறுப்பு குறையாத வாக்குப்பதிவு; 2021 சாதனை முறியடிக்கப்படுமா? | TN Polling Live Updates மேலும் பார்க்க