செய்திகள் :

அச்சுறுத்தும் Claude Mythos: சைபர் பாதுகாப்பை உறுதிசெய்ய நிர்மலா சீதாராமன் ஆலோசனை

post image

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில் நுட்பம் மிகப்பெரிய அளவில் தொழில் துறையில் புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வந்த பிறகு மனிதர்கள் செய்யவேண்டிய வேலையின் அளவு வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் வேலை வாய்ப்புகளும் குறைந்து வருகிறது. புதிதாக ஆந்த்ரோபிக் என்ற நிறுவனம் மிகவும் சக்திவாய்ந்த Claude Mythos என்ற ஏ.ஐ மாடல் ஒன்றை அறிமுகம் செய்து இருக்கிறது. இது சைபர் பாதுகாப்பில் மிகச்சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது. மனிதர்களால் கண்டறிய முடியாத ஆயிரக்கணக்கான சைபர் பாதுகாப்பு குறைபாடுகளை Mythos கண்டறிந்து வருகிறது.

மனிதர்களால் பல ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாத மென்பொருள் பிழைகளை இது கண்டறிந்துவிடுகிறது. அதோடு மனிதர்கள் பல நாட்கள் செய்ய வேண்டிய வேலையை, இந்த மாடல் சில நிமிடங்களில் முடித்துவிடுகிறது. இதில் பல பாதுகாப்பு குறைபாடுகளும் இருக்கிறது.

இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி ஹேக்கிங் செய்துவிட முடியும் என்ற ஆபத்து இருக்கிறது. எனவேதான் இதன் ஆபத்து கருதி, ஆந்த்ரோபிக் நிறுவனம் இதனைப் பொதுமக்களுக்கு வெளியிடாமல், ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற ஒரு சில முன்னணி நிறுவனங்களுக்கு மட்டுமே சைபர் பாதுகாப்பு பணிகளுக்காக வழங்கியுள்ளது.

சைபர் பாதுகாப்பில் மிகவும் மேம்பட்ட திறன்களைக் கொண்டுள்ள Claude Mythos, வங்கிகளின் பழைய மென்பொருள் அமைப்புகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்த ஏ.ஐ. மூலம் போதிய கணினி அறிவு இல்லாத ஒரு சாதாரண நபர் கூட, எந்த ஒரு கணினி அமைப்புகளையும் ஹேக்கிங் செய்ய முடியும். எனவே இது பொதுமக்களுக்கு கிடைத்தால் அவர்களால் எளிதில் எதையும் ஹேக்கிங் செய்ய முடியும்.

இந்த ஏ.ஐ இப்போது இந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்திய வங்கிகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருப்பதால் எதாவது ஒரு இடத்தில் ஹேக்கிங் செய்யப்பட்டால் அது ஒட்டுமொத்த நிதி அமைப்பையும் சீர்குலைக்க வாய்ப்புள்ளது.

இதையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகள், நிதிநிறுவனங்களின் தலைவர்களை அழைத்து இது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி இருக்கிறார். இக்கூட்டத்தில் மத்திய தகவல் தொழில் துறை அமைச்சரும் கலந்து கொண்டார்.இதில் வங்கிகள் தங்கள் பாதுகாப்பு அமைப்புகளை உடனடியாகத் தணிக்கை செய்ய வேண்டும் என்றும், தகவல் தொழில்நுட்பக் கண்காணிப்பை வலுப்படுத்த போதிய நிபுணர்களை நியமிக்க வேண்டும் என்றும், சைபர் அச்சுறுத்தல்கள் குறித்து உடனுக்குடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தில் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் புதிதாக வந்துள்ள ஏ.ஐ மூலம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், அதன் தவறான பயன்பாட்டைத் தடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. Mythos போன்ற AI கருவிகள் மனிதர்களை விட வேகமாகப் சைபர் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து அதன் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என்றாலும், அவை தவறானவர்களின் கைகளில் கிடைத்தால் சைபர் தாக்குதல் நடத்தும் அபாயமும் இருக்கிறது.

ஏ.ஐ மூலம் சைபர் பாதுகாப்பு மட்டுமல்லாது, ஹேக்கிங் செய்வதற்கும் பயன்படுத்த முடியும் என்பதால் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் கவலை அடைந்துள்ளன. இதையடுத்து எஸ்பிஐ வங்கி தலைவர் சல்லா ஸ்ரீனிவாசுலு செட்டி தலைமையிலான இந்திய வங்கிகள் சங்கம் இத்தகைய அச்சுறுத்தல்களைச் சமாளிக்க ஒரு புதிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளன. அதோடு இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பிற ஒழுங்குமுறை ஏஜென்சி அதிகாரிகள் இணைந்து புதிய ஏ.ஐ. நாட்டின் நிதி நிலை மற்றும் இணையப் பாதுகாப்பை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பது குறித்து தனியாக ஆய்வு செய்து வருகின்றனர்.

600 ஊழியர்கள், தினமும் 4000 சப்பாத்தி: சமையல்காரருக்கு ரூ.24 லட்சம் சம்பளம் கொடுக்கும் அம்பானி

தொழிலதிபர் முகேஷ் அம்பானி இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்காரராக திகழ்கிறார். அவரது வீடு மும்பையின் தென்பகுதியில் இருக்கிறது. அண்டிலியா என்ற அந்த வீடு மும்பையில் அனைவராலும் பார்க்க விரும்பும் ஒரு இடமா... மேலும் பார்க்க

தயாராகும் 11,000 வீடுகள்: மும்பை தாராவி கட்டடங்களில் வசிப்பவர்களுக்கு 754 சதுர அடி வீடு

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவியில் உள்ள குடிசைகள் அனைத்தையும் அகற்றிவிட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பொறுப்பு அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த... மேலும் பார்க்க

"தான் உயிரியல் தந்தை இல்லை என்றால் குழந்தைக்கு பராமரிப்புத் தொகை கொடுக்கவேண்டாம்" - சுப்ரீம் கோர்ட்

கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் போது ஆண்கள் தங்களது மாஜி மனைவி மற்றும் குழந்தைகளுக்குப் பராமரிப்புத் தொகை கொடுக்க வேண்டும். சில நேரங்களில் குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று கூறி ஆ... மேலும் பார்க்க

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: "யாரும் குற்றவாளிகள் இல்லை" - கடைசியாக இருந்த 4 பேரும் விடுதலை

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நடந்த நான்கு குண்டு வெடிப்பில் 31 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மசூதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இக்க... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாகப் பேரணி; பாஜக அமைச்சரை நடுரோட்டில் வறுத்தெடுத்த இளம் பெண்

சமீபத்தில் மக்களவையில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது. இதையடுத்து எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பா.ஜ.கவினர் மும்பையில் போராட்டம் நடத்தினர். மும்பையில் பா.ஜ.க அமைச்சர் கிரீஷ் மகாஜன்... மேலும் பார்க்க

பெங்களூரு: `வெயில் தாங்க முடியலை' - ஹோட்டலில் ஏ.சி அறை வாடகைக்கு எடுத்து வெப்பத்தை தணித்த பெண்

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. காலை 10 மணிக்கு மேல் மக்களால் வெளியில் வர முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்டு பருவ மழையும் குறைவாகவே இருக்கும்... மேலும் பார்க்க