செய்திகள் :

CSK: "இந்த அணிக்காக விளையாடுவதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்!"- ஆட்ட நாயகன் சஞ்சு சாம்சன்

post image

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.23) ஆட்டத்தில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதின.

இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால், மும்பை அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசிய சஞ்சு சாம்சன், " வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்தது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது.

csk
csk

இது எனக்கும், எனது அணிக்கும் சிறந்த தருணம். ஆடுகளத்தின் தன்மையை மட்டுமே கவனித்து விளையாடுகிறேன். நாங்கள் இடைவிடாமல் விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தோம்.

எப்போதெல்லாம் அதிரடியாக ஆட நினைத்தோமோ, அப்போதெல்லாம் விக்கெட்டுகளை இழந்தோம். எனவே, நிலைத்து நின்று ஆடும் ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை இருப்பது மிகவும் முக்கியம் என்று நினைத்தேன்.

அதை நான் முயற்சித்தேன். ஆட்டமே மைதானத்தில் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும். நீங்கள் ஒரு முன்முடிவோடு வர வேண்டிய அவசியமில்லை.

எனது அனுபவத்தின்படி, எப்போதும் அணிதான் எனக்கு முதன்மையானது. 'நான் இப்படித்தான் ஆடுவேன், அவுட் ஆனாலும் கவலை இல்லை' என்று சொல்லலாம்.

ஆனால், என் மீது வைக்கப்பட்டுள்ள பொறுப்பு மற்றும் அனுபவத்தின் காரணமாக, ஆட்டத்தின் சூழ்நிலையையும் அணியின் தேவையையும் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறு எனது ஆட்டத்தை திட்டமிடுவது எனது கடமை.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

இந்த வெற்றியின் மூலம் கிடைத்துள்ள உத்வேகத்துடன் நாங்கள் தொடர்ந்து முன்னேற விரும்புகிறோம். ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது என்பது எங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு அணியும் மிகுந்த தீவிரத்துடன் விளையாடும்.

எனவே நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும், இந்தத் தருணத்தை ரசித்து விளையாட வேண்டும். நான் முதல்முறையாக மஞ்சள் நிற சீருடை அணிந்துள்ளேன். இது எனக்கு மிகவும் புதிய அனுபவம்.

வான்கடே மைதானத்தில் என் வாழ்நாளில் இவ்வளவு மஞ்சள் நிறத்தை நான் பார்த்ததே இல்லை. இந்த அணிக்காக விளையாடுவதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

"பவர்-பிளேல விக்கெட்டை விட்டதுதான் பெரிய அடி!" - தோல்விக்குப் பின் ஹர்திக்!

ஐபிஎல் 2026-ன்நேற்றைய (ஏப்ரல் 23)எல்-கிளாசிகோ ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்தது. 208 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி, சீரான இடைவெளியில... மேலும் பார்க்க

நாதன் எல்லிஸுக்கு பதிலாக இணைந்த ஆஸி., வீரர் ஸ்பென்சர் ஜான்சன்! - சிஎஸ்கே-வுக்கு கைக்கொடுப்பாரா?

த் த் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ரசிகர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை. சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சொதப்பி வருகிறது. வழக்கமாக புள்ள... மேலும் பார்க்க

SRH vs DC: "கேமராவை என் அப்பா பக்கம் திருப்பி அவர் ரியாக்ஷனைப் பாருங்க" - ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல் 21) ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.அபிஷேக் சர்மாவின் அதிரடி சதமே சன்ரைசர்ஸ் அணியின் ... மேலும் பார்க்க

SRH Vs DC: "பீல்டிங் மட்டும் கைகொடுத்திருந்தால் மேட்ச் மாறியிருக்கும்"– தோல்வி குறித்து அக்சர் படேல்

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 21) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் போராடித் தோல்வியடைந்தது. அபிஷேக் சர்மா மற்றும் கிளாசனின் அதிரடி ஆட்டத்தால் ஹைதராபாத் இ... மேலும் பார்க்க

IPL: கேன்வாஸ் ஷுவில் பயிற்சி; சைக்கிளில் பயணம்; மும்பை அணியில் அசத்தும் அஸ்வனி குமார் - யார் இவர்?

'எப்போதெல்லாம் விளையாட வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நினைப்பேன்' என உத்வேகமாக பேசிய மும்பை அணியின் இளம் வீரரான அஸ்வனி குமார் குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய (ஏப்... மேலும் பார்க்க

GT vs MI: "ஹர்திக் பாயுடன் இணைந்துதான் திட்டமிட்டேன்" - மும்பையின் கம்பேக் வெற்றி குறித்து அஸ்வனி

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்20) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை அணியும் மோதின.இதில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் புள்ளி... மேலும் பார்க்க