செய்திகள் :

MI vs CSK: 'இந்த வெற்றியை நான் அவருக்கே அர்ப்பணிக்கின்றேன்' - கேப்டன் ருதுராஜ் உருக்கம்

post image

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்23) சென்னை vs மும்பை அணிகளுக்கு இடையிலனா போட்டி ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் மும்பை அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி. இந்த அபார வெற்றிக்கு பின்னர் பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ``முகேஷ் சவுத்ரிக்கு இது கொஞ்சம் கடினமான சூழல்தான். இந்த வெற்றியை நான் அவருக்கே அர்ப்பணிக்கிறேன். இந்த பெருமை அனைத்தும் அவரையே சாரும்.

ருதுராஜ் கெய்க்வாட்
ருதுராஜ் கெய்க்வாட்

அனைவரும் சிறப்பாக விளையாடி அவருக்காக இந்த வெற்றியைப் பெற்றுத்தர நினைத்தோம். வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. டாஸ் வென்றதும் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதுதான் எனது உள்ளுணர்வாக இருந்தது. நானும் சஞ்சுவும் பேசிக்கொண்டபோது, பந்து பேட்டிற்கு அவ்வளவு சுலபமாக வரவில்லை என்று நினைத்தோம். அணியில் எல்லோருமே நன்றாகப் பங்களித்தனர். பேட்டிங்கில் வந்த 20 ரன்கள் கூட வெற்றிக்கு உதவியது.

சஞ்சு ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். நாங்கள் நன்றாக விளையாடி வருகிறோம். இப்போதுதான் அனைத்தும் சரியாக அமையத் தொடங்கியிருக்கிறது. எல்லாத் துறைகளிலும் குறைகளைச் சரிசெய்யப் பார்க்கிறோம். முகேஷ், குயிண்டன் டி காக்கை அவுட் செய்தது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அது ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது. அகீல் ஹொசைன் மற்றும் நூர் அகமது போன்றவர்கள் அணியில் இருப்பது ஒரு வரம். அனைவரும் இப்போது செட்டில் ஆகிவிட்டனர். எல்லோரும் நிதானமாகவும் அமைதியாகவும் இருக்கிறார்கள். நாங்கள் ஒவ்வொரு போட்டியையும் பூஜ்ஜியத்தில் இருந்தே தொடங்குகிறோம். ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்துச் செயல்படுகிறோம்." என்றார்.

'வந்துருச்சு...வந்துருச்சு மாற்றம் வந்துருச்சு!' - லோனேஷ் லனகராஜின் கூற்றை உண்மையாக்கிய CSK!

சென்னை அணிக்கு நேற்றைய போட்டியை வென்று கொடுத்தது அகீல் ஹூசைனும் நூர் அகமதுவுமே. இருவருமே சரமாரியாக விக்கெட்டுகளை எடுத்துவிட்டு முகத்தை மூடிக் கொண்டு வித்தியாசமாக செலிப்ரேட் செய்கிறார்கள். 'நீங்க ஏன் ம... மேலும் பார்க்க

'அடேயப்பா... மிரட்டிட்டிங்களே!' - மாஸ் காட்டிய ராஜஸ்தான் பௌலர்கள்; வீழ்ந்த லக்னோ

டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்ல டி20-களுமே பௌலர்கள் ஆதிக்கம் செலுத்தும் பொழுதுகளில் அழகாகின்றன.பவர்பிளேல எந்தளவு ஒரு பௌலிங் படை சேதாரத்தை சந்திச்சுருக்குன்ற அடிப்படையில தான் டி20-ன் சுவாரஸ்யம் எப்போதும் அண... மேலும் பார்க்க

CSK: 'சோதனை மேல் சோதனை'; காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகிய ஆயுஷ் மாத்ரே!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நூலிழையில் தோல்வியைச் சந்தித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த சீசன் முழுக்கவே நல்ல பெர்பாமென்ஸைச் சிஎஸ்கே-வின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே வெளிப்படுத்தியி... மேலும் பார்க்க

ஆப்கன் வீரருக்கு இந்தியக் குடியுரிமை? - BCCI சொன்ன விஷயம்; ரஷீத் கான் அதிர்ச்சித் தகவல்!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் ரஷீத் கான் தனது சுயசரிதைப் புத்தகத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள், கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் குஜராத்... மேலும் பார்க்க

PBKS vs LSG: "வரும் போட்டிகளில் சிறந்த அணியாக வலிமையுடன் செயல்படுவோம்!"-கேப்டன் ரிஷப் பண்ட்

ஐபில் தொடரில் நேற்று ( ஏப்ரல் 19) நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் vs லக்னோ அணிகள் மோதின. இதில் லக்னோ அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் அசைக்க முடியாத... மேலும் பார்க்க

PBKS vs LSG: `தேன் கூட்டில் கை வைத்த ரிஷப் பன்ட்' - அடித்து ஆடிய பஞ்சாப்; அடி வாங்கிய லக்னோ!

ஐ.பி.எல்-இல் இப்போதைய நிலையில் அசைக்கவே முடியாத அணியாக, புள்ளி பட்டியலில் தோல்வியே காணாமல் முதலிடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியும், எப்படியாவது மேலே வந்து விட மாட்டோமா? என்ற எண்ணத்தில் 8வது இடத்தில் ... மேலும் பார்க்க