செய்திகள் :

PBKS vs LSG: "வரும் போட்டிகளில் சிறந்த அணியாக வலிமையுடன் செயல்படுவோம்!"-கேப்டன் ரிஷப் பண்ட்

post image

ஐபில் தொடரில் நேற்று ( ஏப்ரல் 19) நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் vs லக்னோ அணிகள் மோதின.

இதில் லக்னோ அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் அசைக்க முடியாத அணியாக அமந்துள்ளது பஞ்சாப் அணி. லக்னோ அணி அதே 8வது இடத்தில் நீடிக்கிறது.

போட்டிக்கு பிறகு தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரிஷப் பண்ட், "தோல்விக்கான காரணத்தை ஒரு குறிப்பிட்ட சூழலை மட்டும் சுட்டிக்காட்டி விவரிப்பது கடினமான ஒன்றாகும்.

PBKS Vs LSG
PBKS Vs LSG

பந்துவீச்சாளர்கள் ஓரளவிற்குச் சிறப்பான பங்களிப்பையே வழங்கினார்கள். இருந்தாலும் நாங்கள் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சில பலவீனமான இடங்கள் இருக்கவே செய்கின்றன.

அதே வேளையில், இப்போட்டியின் மூலம் நாங்கள் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்களும் உண்டு. பேட்டிங் குறித்து நாங்கள் ஆலோசித்த சில விஷயங்கள் களத்தில் நடப்பதை இன்று காண முடிந்தது.

இந்த சாதகமான விஷயங்களை எடுத்து சென்று, வரும் போட்டிகளில் ஒரு சிறந்த அணியாக இன்னும் வலிமையுடன் செயல்படுவோம்.

ஆயுஷ் பதோனியை எவ்வித அழுத்தமுமின்றித் சுதந்திரமாக விளையாடச் செய்ய வேண்டும் என்பதே எங்களது திட்டம் .

இது திடீரென எடுக்கப்பட்ட முடிவு இல்லை அவர் தொடக்க வீரராகக் களமிறங்க வேண்டும் என்பது முதலிலே திட்டமிடப்பட்டது. அதை நாங்கள் மறைமுகமாக வைத்திருந்தோம்.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

எங்களின் அணியினரின் திறமை மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அதே சமயம், தற்போதைய பஞ்சாப் அணியினரின் அபாரமான ஆட்டத்திற்கு நாம் உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.

அவர்கள் அத்தனை நேர்த்தியான கிரிக்கெட்டை இன்று விளையாடினார்கள்." என்று பேசியிருக்கிறார்.

PBKS vs LSG: `தேன் கூட்டில் கை வைத்த ரிஷப் பன்ட்' - அடித்து ஆடிய பஞ்சாப்; அடி வாங்கிய லக்னோ!

ஐ.பி.எல்-இல் இப்போதைய நிலையில் அசைக்கவே முடியாத அணியாக, புள்ளி பட்டியலில் தோல்வியே காணாமல் முதலிடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியும், எப்படியாவது மேலே வந்து விட மாட்டோமா? என்ற எண்ணத்தில் 8வது இடத்தில் ... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸ்: "கேப்டன் பதவியிலிருந்து ஹர்திக் விலக வேண்டும்" - காரணம் சொல்லும் மனோஜ் திவாரி

ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் மோசமான செயல்பாடுகளைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். ஹர்திக் தனது பதவியை ராஜினாமா செய்துவிட... மேலும் பார்க்க

MI vs PBKS: 'என்னங்க சிவாஜி இப்படி ஆயிடுச்சு...' - பரிதாப மும்பை இந்தியன்ஸ்!

ஐ.பி.எல். தொடரில் தொடர்ந்து நான்காவது தோல்வியைப் பதிவு செய்து, ஒன்பதாவது இடத்திலேயே நீடிக்கிறது ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.De kockநேற்று மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேய... மேலும் பார்க்க

2026 FIDE: மகுடம் சூடிய வைஷாலி: வெற்றியைத் தொடர்ந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

இந்திய செஸ் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை கிராண்ட் மாஸ்டர் வைஷாலி ரமேஷ்பாபு எழுதியுள்ளார்.சைப்ரஸில் நடைபெற்ற 2026 பிடே (FIDE) மகளிர் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், உலக செஸ் மகுடத்தி... மேலும் பார்க்க

ஆண்களின் கால்பந்து சாம்ராஜ்யத்தில் ஒரு பெண்: வரலாறு படைத்த மேரி-லூயிஸ் எட்டா!

கால்பந்து உலகில் `டாப் 5 லீக்ஸ்' (இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ்) என்பது மிகவும் கடினமான மற்றும் சவாலான களமாகக் கருதப்படுகிறது. இதுவரை இந்தப் போட்டிகளின் பயிற்சியாளர் இடத்தில் ஒரு ப... மேலும் பார்க்க

சுமார் மூஞ்சி குமாரு vs ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு - பந்தயம் அடித்த CSK! - எப்படி வென்றது?

ருத்துராஜின் இயற்பெயர் என்ன, அவரின் பூர்விகம் என்னவென்பதை சென்னை அணி நிர்வாகம் ஒரு தனிப்படை அமைத்து விசாரிக்க வேண்டுமென நினைக்கிறேன். ஹம்சா அலி மசாரி போல ஒரு ஸ்பையாக இருப்பாரோ எனும் சந்தேகம் வலுவாக எழ... மேலும் பார்க்க