செய்திகள் :

Doctor Vikatan: நடிகைகளின் ஃபிட்னெஸ் வீடியோக்கள்... தீவிர பயிற்சிகள் அவசியமா, ஆபத்தா?

post image

Doctor Vikatan: நடிகைகளின் உடற்பயிற்சி வீடியோக்கள்  எப்போதும் வைரலாகின்றன. அவர் தீவிரமான, கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்வது சிலருக்கு ஊக்கமளிப்பதாக இருந்தாலும், 'இது மிக அதிகம்' என்று சில உடற்பயிற்சி நிபுணர்கள் சொல்வதையும் கேட்கிறோம்.

சாதாரண உடற்பயிற்சிகள் மூலமே நல்ல முடிவுகளைப் பெற முடியும் என்பதால், இவ்வளவு தீவிரமான முயற்சி தேவையில்லை என்றும் அவர்கள்  சொல்கிறார்கள். இதுபோன்ற வீடியோக்களைப் பார்த்துவிட்டு அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ்.

 ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்
ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்

நடிகர், நடிகைகள், பிரபலங்கள் வொர்க் அவுட் செய்கிற வீடியோக்கள் எப்போதுமே சோஷியல் மீடியாவில் டிரெண்ட் ஆகும். அவர்களின் ஃபிட்னெஸ் டிரெய்னர்கள், சம்பந்தப்பட்டவர்களால் கடுமையான உடற்பயிற்சிகளை, வித்தியாசமான உடற்பயிற்சிகளைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் அவர்களைச் செய்ய வைக்கிறார்கள். சாமானிய மக்கள் அதையெல்லாம் பார்த்து இன்ஸ்பையர் ஆக வேண்டியதே இல்லை. 

பிரபலங்கள் செய்கிற உடற்பயிற்சிகளைக் கண்மூடித்தனமாக நீங்களும் செய்தால், தேவையின்றி காயங்கள்தான் ஏற்படும். பல பிரபலங்களும் செய்கிற உடற்பயிற்சிகளைப் பார்க்கும்போது, தேவையில்லாமல், இவ்வளவு கடினமான வொர்க் அவுட்டுகளைச் செய்வதாகவே தோன்றுகிறது. அந்தப் பயிற்சிகளை எல்லாம் சாமானியர்கள் செய்தால் முதுகுப் பகுதியில் பிரச்னைகள் வரும். அப்படிப்பட்ட பயிற்சிகள் அவசியமும் இல்லை. 

பார்ப்பதற்குக் கடினமாகத் தெரிகிற உடற்பயிற்சிகள்தான் பலன் தரும், அப்படிச் செய்வதுதான் சரியானது என்ற எண்ணமே தவறு. உடற்பயிற்சி என்பதன் அர்த்தத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். வீட்டில், தரையில் உள்ள பெட்டியையோ, பொருளையோ தூக்கி, பரணில் வைப்போம். அதுதான் ஜிம்மில் 'ஓவர்ஹெட் ப்ரெஸ்' என்ற பெயரில் செய்யப்படும்.

கீழிருந்து கனமான பொருளைத் தூக்குவதை, ஜிம்மில், 'டெட் லிஃப்ட்' என்ற பெயரில் செய்வீர்கள். அப்படி சாதாரணமாக வீட்டில் நாம் செய்கிற அசைவுகளைத்தான் உடற்பயிற்சிகளாக ஜிம்மில் செய்கிறோம்.

மிதமான ஜாகிங், வேகமான நடை போன்றவற்றை வாரத்தில் 3-4 நாள்கள் செய்யலாம்.

அந்தப் பயிற்சிகளைச் செய்யும்போது காயம் ஏற்படாமல், அடி படாமல் இருக்க வேண்டும் என்பதைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும். உடற்பயிற்சியில் 'ஹெச்ஐஐடி' (High-Intensity Interval Training) என்று ஒரு பிரிவு உண்டு. அதாவது, 40 நொடிகள் ஜம்ப்பிங் ஜாக்ஸ் செய்தால், 20 நொடிகள் பிரேக் எடுப்பீர்கள். அடுத்து மீண்டும் 40 நொடிகளுக்கு மிதமான ஜாகிங் செய்வீர்கள். 20 நொடிகள் பிரேக் எடுப்பீர்கள். அதாவது உடற்பயிற்சியின் தீவிரத்தைக் குறைத்து, கூட்டி, ஓய்வெடுத்துச் செய்வது. இதில் இதயத்துடிப்பின் அளவானது எப்போதுமே சற்று அதிகமாகவே இருக்கும்.

வாரத்தில் 3 நாள்கள் ஸ்ட்ரென்த் டிரெயினிங் பயிற்சிகளையும் (குறிப்பாக, பெண்களுக்கு 3-4 நாள்கள் இது அவசியம்) ஹெச்ஐஐடி பயிற்சிகளை வாரத்தில் ஒன்றிரண்டு நாள்களும் செய்யலாம். மிதமான ஜாகிங், வேகமான நடை போன்றவற்றை வாரத்தில் 3-4 நாள்கள் செய்யலாம். ஒருவேளை ஹெச்ஐஐடி பயிற்சிகளை வாரத்தில் 3 நாள்கள் செய்தால், ஸ்ட்ரென்த் டிரெய்னிங் பயிற்சிகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் உடல்வாகுக்கு ஏற்ற, உங்களுக்குத் தேவையான பயிற்சிகளைத் தெரிந்துகொண்டு செய்வதுதான் சரி. பிரபலங்களைப் பார்த்து எதையும் பின்பற்ற வேண்டாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

Doctor Vikatan: பிரபலங்களால் டிரெண்டாகும் 'மைக்ரோ பிளேடிங்'... புருவங்களை அடர்த்தியாக்குமா?

Doctor Vikatan: சமீபகாலமாக சோஷியல் மீடியாவில் பிரபலங்களும் டாக்டர்களும் மைக்ரோ பிளேடிங் என்ற டெக்னிக் பற்றி அதிகம் பேசுகிறார்கள். புருவங்களில் முடி வளர்ச்சி இல்லாதவர்களுக்கு அடர்த்தியான புருவங்களைக் க... மேலும் பார்க்க

Doctor Vikatan: பீரியட்ஸின் முதல் நாளில் அளவுக்கதிக ப்ளீடிங்... சாதாரணமானதா, பிரச்னையா?

Doctor Vikatan: என் வயது 38. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடமாக எனக்கு பீரியட்ஸின்போது முதல் நாளன்று ப்ளீடிங் மிக அதிகமாக இருக்கிறது. பெரிய நாப்கின்கள் நான்கு உபயோகிக்க வேண்டியிருக்கி... மேலும் பார்க்க

டிரெண்டாகும் 'மறு உலைக்கஞ்சி...' ஆறு மாதங்கள் வைத்திருந்து சாப்பிடுவது மருந்தா, ஆபத்தா?

கோடைக்காலம் தொடங்கிவிட்டது... பழைய சோறு, நீராகாரம் பற்றிய அறிவுரைகள் இந்த வருடமும் தவறாமல் நம்மிடம் வரும். நட்சத்திர ஹோட்டல்களில் இவையெல்லாம் இடம்பெறும். இந்நிலையில், 'மறு உலைக் கஞ்சி' என்ற பெயரில் ஓர... மேலும் பார்க்க

Doctor Vikatan: 50 ப்ளஸ் வயதில் பால் அலர்ஜி... தற்காலிகமானதா? நிரந்தரமாகத் தொடருமா?

Doctor Vikatan: என் வயது 50. இத்தனை வருடங்களாக நான் பால் மற்றும் பால் உணவுகள் சாப்பிட்டு வந்திருக்கிறேன். திடீரென ஏற்பட்ட வயிற்றுக் கோளாறுக்காக மருத்துவரை அணுகியபோது, பால் அலர்ஜி என்று சொல்லி, பால், ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: கோடையிலும் விடாமல் வாட்டும் இருமல்... தேன் சாப்பிட்டால் சரியாகுமா?

Doctor Vikatan: என் வயது 50. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் கோடைக்காலம் ஆரம்பித்தது முதல் எனக்கு இருமல் விடாமல் தொடர்கிறது. வைரஸ் காயச்சல் வந்து சரியாகிவிட்டது. ஆனால், இருமல் மட்டும் நின்றபாடில... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஆரோக்கியமான உடல்வாகு; ஆனாலும், அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம்; சாதாரணமானதா?

Doctor Vikatan:எனக்கு 43 வயதாகிறது. உடல் அளவில் மிகவும் ஆரோக்கியமாகவே இருக்கிறேன். ஆனாலும் எனக்கு சிறிதுநேரம்கூட சிறுநீரை அடக்க முடியாது. வெளியிடங்களுக்குச் சென்றாலும் என்னால் நீண்ட நேரத்துக்கு சிறுநீ... மேலும் பார்க்க