செய்திகள் :

சிவகாசியில் வாகை சூடும் கே.டி. ராஜேந்திர பாலாஜி!

post image

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கணிசமாக வாக்குகளைப் பெற்று வெற்றிபெறுவார் என்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள் விவரப்புள்ளிகள். இந்நிலையில் சிவகாசி தொகுதியின் களநிலவரம் குறித்து களமிறங்கி விசாரித்தோம்.

விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க-வின் முகமாகத் திகழும் கே.டி. ராஜேந்திர பாலாஜி, 2011, 2016 ஆகிய சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். வெற்றிபெற்ற இரண்டு முறையும் அவருக்கு அமைச்சர் பொறுப்பை வழங்கி சிறப்பித்தார் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா.

தற்போதைய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நன்மதிப்பைப் பெற்ற ராஜேந்திர பாலாஜி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் சிவகாசி தொகுதியில் களமிறங்குகியிருக்கிறார்.

'தி.மு.க அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதோடு சிவகாசி தொகுதியை மேம்படுத்துவேன்' என்ற புள்ளியில் பரப்புரை மேற்கொள்ளும் பாலாஜி தேர்தல் களத்தில் முந்தி நிற்கிறார்!

ராஜேந்திர பாலாஜி - எடப்பாடி பழனிசாமி
ராஜேந்திர பாலாஜி - எடப்பாடி பழனிசாமி

சிவகாசி தொகுதி நிலவரம் குறித்துப் பேசும் விவரப்புள்ளிகள், "தி.மு.க கூட்டணி சார்பில் சிவகாசியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி-யும் சரி, சிவகாசி எம்.எல்.ஏ-வும் சரி தேர்தலுக்குப் பிறகு தொகுதியைத் திரும்பிக்கூட பார்க்காததால், காங்கிரஸ் கட்சிமீது கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் சிவகாசி மக்கள்.

பட்டாசுத் தொழிலில் தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும் வெடி விபத்தைத் தடுப்பதற்கு எந்த முயற்சியையும் ஆளும்தரப்பு எடுக்கவில்லை. சிவகாசியைச் சுற்றியுள்ள ஊராட்சிப் பகுதிகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. மறுமுனையில், சிவகாசியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தி, எக்கசெக்க நலத்திட்டங்களைக் கொண்டுவந்த ராஜேந்திர பாலாஜிக்கு தொகுதிக்குள் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுக்கிறார்கள்.

பட்டாசு தொழிலுக்கு இன்னல் வந்தபோது 20 எம்.பிக்களுடன் டெல்லி சென்று முறையீட்டு அந்தத் தொழிலாளர்களின் நலன்களைக் காத்தவர் என்பதை தொகுதி மக்கள் நினைவுக் கூறுகிறார்கள்.

ராஜேந்திர பாலாஜி - எடப்பாடி பழனிசாமி
ராஜேந்திர பாலாஜி - எடப்பாடி பழனிசாமி

சமூக ரீதியாக பார்த்தால், முக்குலத்தோர், பட்டியல் சமூகம், ஆசாரி சமூகம் மற்றும் இஸ்லாமியர்கள் என அனைத்து சமூகங்களில் ஆதரவுபெற்ற வேட்பாளராக இவர்தான் இருக்கிறார். அதேபோல் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில் வளர்ச்சிக்குப் பாடுபடுவேன், குடிநீர் விநியோகத்தை உடனடியாகச் சீர்செய்வேன் போன்ற அவரது வாக்குறுதிகள் தொகுதிக்குள் எடுபட்டுவருகின்றன.

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்கள்" என்றனர்.

சிவகாசி தொகுதி மக்களிடம் பேச்சுக் கொடுத்தோம். "பெண்களுக்கான பாதுகாப்பின்மை, கஞ்சா போதைப் புழக்கம், சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு, தலைவிரித்தாடும் விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மீண்டும் தி.மு.க கூட்டணிக்கு நாங்கள் வாக்களிக்கப் போவதில்லை.

மண்ணின் மைந்தராக இருந்து தொகுதி நலன் குறித்து சட்டமன்றத்தில் குரல்கொடுக்கும் ராஜேந்திர பாலாஜிக்கே எங்கள் வாக்கு. மற்றவர்கள் டெபாசிட் தொகையே பறிபோகும்" என்றனர்.

சிவகாசியில் உறுதியாக மலர்கிறது 'இரட்டை இலை!'

ஈரான் 'ஏஜென்ட்' ஆக மாறிய அமெரிக்கப் பெண்: கோடிக்கணக்கில் ஆயுத பேரம் - சிக்கியது எப்படி?

ஈரான் அரசுக்காக ரகசியமாகச் செயல்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கடத்த உதவியதாக ஈரானைப் பூர்வீகமாகக் கொண்ட ஷமிம் மாஃபி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘ஹை-ஃபிளையிங்’ (High-Flying) பிச... மேலும் பார்க்க

தி.நகர் தொகுதிக்குத் திருப்பம் தரும் 6 அம்ச திட்டம்! பட்டியலிடும் ராஜா அன்பழகன்

"நம் மாநில நலன், சமூகநீதி, மொழி உரிமை ஆகியவற்றில் சுதந்திரமற்ற தன்மையை உண்டாக்கி மதச்சார்பின்மை கொள்கையைச் சீர்குலைய செய்யும் நோக்கில் ஒன்றிய பி.ஜே.பி அரசு செயல்படுகிறது. அதன் பிடியிலிருந்து நமது நாட்... மேலும் பார்க்க

ஆவடி தொகுதி: “ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’’ - அமைச்சர் சா.மு.நாசர் உறுதி

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “ஆவடி தொகுதியின் தி.மு.க வேட்பாளரும் அமைச்சர் சா.மு.நாசரை ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள்” என்று கூறியுள்ளார். இதையடுத்து ஆவடி தொகுதி வேட்பாளரு... மேலும் பார்க்க

TOUSKA: எச்சரிக்கையை புறக்கணித்த ஈரான்; விளைவு, கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா - சம்பவத்தின் பின்னணி?

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், தற்போது ஈரானின் கப்பல் ஒன்றை அமெரிக்கா பிடித்து வைத்துள்ளது. ட்ரம்ப் பதிவு இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது... மேலும் பார்க்க

"எல்லாருக்கும் சமமான சந்தை வேண்டும்; இல்லையென்றால், மிகப்பெரிய இழப்பைச் சந்தியுங்கள்" - ஈரான்

ஈரான் போர் எதற்கு தொடங்கியது என்று மறந்து, இப்போது 'ஹார்முஸ் ஜலசந்தி'யை மையமாக வைத்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் போர் தொடங்கியதில் இருந்து மூடப்பட்டிருந்த ஹார்முஸ் ஜலசந்தி, இப்போது திறப்பு... ம... மேலும் பார்க்க

"மக்களுக்கு என்மீதிருக்கும் நம்பிக்கைதான் எனக்கான வெற்றி"- குன்னம் தொகுதியைத் தக்கவைக்கும் சிவசங்கர்

தமிழ்நாட்டில் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு சேகரிப்புப் பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன. தி.மு.க-வின் வேட்பாளராக அங்கு களமாட... மேலும் பார்க்க