செய்திகள் :

கோவை: தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை; கூட்டத்தோடு சேர்க்க வனத்துறை முயற்சி!

post image

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

குறிப்பாக சிறுமுகை வனப்பகுதியில் அதிக அளவிலான காட்டு யானைகள் உள்ளன. இந்த நிலையில் இன்று அதிகாலையில் சிறுமுகை லிங்காபுரம் பகுதியில் உள்ள பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதிக்கு தண்ணீர் குடிக்க ஒரு யானைக் கூட்டம் வந்துள்ளது.

குட்டி யானை
குட்டி யானை

அந்தக் கூட்டத்தில் இருந்து சுமார் 3 மாதமான ஒரு குட்டி யானை தனியாகப் பிரிந்துள்ளது. தனது தாயையும், கூட்டத்தையும் தேடி அந்தக் குட்டி யானை பரிதவிப்புடன் சாலையோரங்களில் சுற்றி திரிந்தது.

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் சிறுமுகை வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அந்தக் குட்டி யானையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் அதன் கூட்டத்தைக் கண்டறிந்து குட்டி யானையை மீண்டும் சேர்த்து வைக்க வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். குட்டி யானையின் கூட்டத்தைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கண்டறிந்து வருவதாகவும், விரைவில் குட்டி யானையை அதன் தாய் யானையுடன் சேர்க்கப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

"பொருளாதார வளர்ச்சியா? மக்கள் வாழ்வாதாரமா?" - கனிம அகழ்வாராய்ச்சி விதிகளில் அதிரடி விலக்கு|அலசல்

இந்தியாவில் காணப்படும் 24 வகையான முக்கிய கனிமங்களையும், 6 வகையான அணுக் கனிமங்களையும் அகழ்ந்தெடுக்கும் பணிகளைப் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமலே மேற்கொள்ளலாம் என ஒன்றிய சுற்றுச்சூழல் அமை... மேலும் பார்க்க

சஹாரா பாலைவனத்தை வென்ற 54 வயது சென்னைவாசி: ‘மாரத்தான் டெஸ் சேபிள்ஸ்’ சாதனையும் சமூக சேவையும்!

உலகின் மிகக் கடினமான ஓட்டப்பந்தயமாகக் கருதப்படுவது ‘மாரத்தான் டெஸ் சேபிள்ஸ்’ (Marathon des Sables - MDS). வெறும் ஓட்டம் மட்டுமல்ல, சுட்டெரிக்கும் சஹாரா பாலைவனத்தில், மணல் குன்றுகளுக்கு இடையே ஏழு நாட்க... மேலும் பார்க்க

Pablo Escobar-ன் 80 நீர்யானைகளைக் கொல்லும் கொலம்பியா அரசு - அதிரடி முடிவின் பின்னணி என்ன?!

கொலம்பியாவின் மறைந்த போதைப்பொருள் மன்னன் பாப்லோ எஸ்கோபார், 1980-களில் தனது பண்ணைக்காக ஆப்பிரிக்காவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்த ஓர் ஆண் மற்றும் மூன்று பெண் நீர்யானைகள், இன்று அந்த நாட்டின் சு... மேலும் பார்க்க

`இனி 10 மாதங்கள் வெயில்?'- தமிழ்நாட்டைச் சுட்டெரிக்க வரும் 'சூப்பர் எல் நினோ' - தப்பிக்க வழி என்ன?

பசிபிக் பெருங்கடலில் மிக வேகமாக உருவாகி வரும் 'சூப்பர் எல் நினோ', இந்த நூற்றாண்டின் மிக வலிமையான இயற்கை நிகழ்வாக மாறக்கூடும் என சர்வதேச வானிலை அமைப்புகள் எச்சரித்துள்ளன. பசிபிக் பெருங்கடலின் மத்திய மற... மேலும் பார்க்க

கூடங்குளம் முதல் கல்பாக்கம் வரை: அணுக்கழிவுகளின் குப்பைத் தொட்டியாக மாறுகிறதா தமிழ்நாடு?

கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட மாதிரி வேக ஈனுலை, ஏப்ரல் 6-ம் தேதி அன்று இரவு 08:25 மணிக்கு முதலாவது அணுப்பிளவு செயல்பாட்டு நிலையை எட்டியுள்ளது. `இந்தியாவின் அணுசக்தி திட்... மேலும் பார்க்க