செய்திகள் :

LSG vs KKR: "தோல்விக்கு எல்லா வீரர்களும் பொறுப்பேற்க வேண்டும்" - லக்னோ கேப்டன் பண்ட் வேதனை

post image

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 26) நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையிலான போட்டி சமனில் முடிந்தது. இறுதியில் நடைபெற்ற 'சூப்பர் ஓவர்' மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

Pant
Pant

கையில் இருந்த போட்டியைத் தவற விட்ட பின்பு, லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசியதாவது, ''உண்மையைச் சொல்லப்போனால், எங்களுக்கு இப்போது ஒரு சிறிய இடைவேளை தேவை என்று நினைக்கிறேன்.

நாங்கள் எங்களை மீண்டும் புத்துணர்ச்சி ஆக்கிக் கொள்ளப் போகிறோம். கிரிக்கெட்டில் எப்போதும் ஒரு அழுத்தம் இருக்கும், அதுவும் இது போன்ற போட்டிகளில் அழுத்தம் அதிகமாகவே இருக்கும். ஆனால், அதே சமயம், தோல்விக்கான காரணங்களை நாங்கள் வெளியிலிருந்து தேடாமல், எங்களுக்குள்ளேயே தேட வேண்டும்.

Pant
Pant

அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். பல வீரர்கள் இதற்குப் பொறுப்பேற்பார்கள் என்று நம்புகிறேன். பூரனை சூப்பர் ஓவரில் இறக்கியதைப் பற்றி கேட்கிறீர்கள். அவர் தற்போது தனது ஃபார்மில் இல்லாமல் இருக்கலாம்; ஆனால், கடினமான சூழல்களில் உங்கள் முக்கிய வீரர்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்.

அவர்கள் சிறப்பாக மீண்டு வருவார்கள். எனவே, காரணங்களைச் சொல்ல விரும்பவில்லை. நேர்மறையான விஷயங்களை மட்டுமே பார்க்கிறேன். இடைவேளை எடுத்துக் கொண்டு மீண்டு வருவோம்," என்று பேசியிருந்தார்.

CSK vs GT: "கணிக்க முடியாத பிட்ச், மந்தமான ஃபீல்டிங்" - தோல்விக்கான காரணங்களை அடுக்கும் ருதுராஜ்

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 26) நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வி சென்னை ரசிகர்களுக்குப் பெரும்... மேலும் பார்க்க

CSK Vs GT: நான்கு வார காத்திருப்பு; 'தோனி விளையாடுவாரா?' - நிலவரம் என்ன?

ஐபிஎல் தொடரின் பரபரப்பான கட்டத்தில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இந்தப் போட்டியில் ரசிகர்களின் ஒட்டுமொத்... மேலும் பார்க்க

"அவன் அடிப்பான்; அவன் அடிப்பான்; அவன் அவன் கதையை முடிப்பான்" - ரெக்கார்ட் சேஸ் செய்த பஞ்சாப் கிங்ஸ்!

"எங்க ஊர்... எங்க கிரவுண்டு... நாங்கதான் முதல்ல பேட்டிங் ஆடுவோம்!" என டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்சர் பட்டேல் தைரியமாகப் பேட்டிங்கைத் தேர்வு செய்தபோதே தெரிந்தது, இன்று அருண் ஜேட்லி மைதானத்தில் ஏதோ ஒன்... மேலும் பார்க்க

RCB Vs GT: "நாங்க பயமில்லாம விளையாட இதுதான் காரணம்.!"-ஆட்டநாயகன் விராட் கோலி

ஐபிஎல் தொடரின் நேற்றையப் ( ஏப்ரல். 24) போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதின. இதில் பெங்களூரு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. குஜராத் அணிக்கு எதிரான இந்... மேலும் பார்க்க

CSK: "இந்த அணிக்காக விளையாடுவதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்!"- ஆட்ட நாயகன் சஞ்சு சாம்சன்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.23) ஆட்டத்தில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதின. இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால், மும்பை அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபார... மேலும் பார்க்க

"பவர்-பிளேல விக்கெட்டை விட்டதுதான் பெரிய அடி!" - தோல்விக்குப் பின் ஹர்திக்!

ஐபிஎல் 2026-ன்நேற்றைய (ஏப்ரல் 23)எல்-கிளாசிகோ ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்தது. 208 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி, சீரான இடைவெளியில... மேலும் பார்க்க