செய்திகள் :

மகளிர் விடுதிக்குள் நுழைந்து மாணவியை வன்கொடுமை செய்த மளிகைக்கடைக்காரர் - ஒடிசாவில் அதிர்ச்சி

post image

ஒடிசா மாநிலம் புபனேஷ்வரில் உள்ள கங்காபாடா என்ற இடத்தில் மளிகைக்கடை வைத்திருப்பவர் தீபக் பிரதான்(67). இவரது கடைக்கு அருகில் மகளிர் விடுதி ஒன்று இருக்கிறது. அடிக்கடி அவரது கடை வழியாக பெண்கள் மற்றும் மாணவிகள் விடுதிக்குள் செல்வது வழக்கமாக இருந்தது. இதனை தினமும் பார்த்துக்கொண்டிருந்த தீபக் இரவில் கடையை பூட்டிவிட்டு அருகில் இருந்த மகளிர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தார். அவர் அங்கு திறந்திருந்த ஒரு அறைக்குள் நுழைந்து உள்ளே இருந்த எம்.பி.ஏ. மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டார்.

பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்து போலீஸில் புகார் செய்தார். அதனை தொடர்ந்து விசாரணை நடத்தி தீபக்கை கைது செய்தனர். அவர் எப்படி மகளிர் விடுதிக்குள் சென்றார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விடுதி பாதுகாவலருக்கு இதில் எதாவது தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவி சத்தீஷ்கர் மாநிலம் பிலாஷ்பூரை சேர்ந்தவர் ஆவார். அவரை போலீஸார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

மகளிர் விடுதிக்குள் சென்று 67 வயது நபர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் டெல்லியில் வருமான வரித்துறை அதிகாரியின் வீட்டிற்குள் முன்னாள் வீட்டுவேலைக்காரன் அத்துமீறி நுழைந்து அவரது 22 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு மொபைல் போன் சார்ஜர் வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் என்ற அந்த நபர் இச்சம்பவத்திற்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் என்ற இடத்தில் தனது நண்பரின் மனைவியையும் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

'பஸ் எல்.இ.டியில் என்ன எழுதியிருக்கிறது?' - MTC பஸ் தகராறில் முதியவரை கொன்ற போதையில் இருந்த இளைஞன்

'பஸ் எல்.இ.டியில் என்ன எழுதியிருக்கிறது' என்று கேட்டு தகராறு ஆகி, சென்னையில் ஒரு கொலை நடந்துள்ளது.சென்னை தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் 25 வயதான இளைஞர் அமர்நாத் 70-G மாநகர பஸ்ஸில் ஏறியுள்ளார். அதே பஸ்ஸில் 74... மேலும் பார்க்க

மும்பையில் நள்ளிரவு டி.வி பார்ப்பதில் தகராறு: மனைவி, மகள், பேத்தியை கத்தியால் குத்திய முதியவர் கைது

மும்பை தானேயில் உள்ள ரபோடி கிராந்தி நகரில் வசிப்பவர் முகமது தாரிக் கான்(64). இவர் தனது மனைவி மற்றும் மகள், பேத்தியுடன் வசித்து வந்தார். சம்பத்தன்று முகமது தாரிக் கான் பேத்திக்கு பிறந்தநாள் ஆகும். இதனா... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேசம்: பிறந்தநாள் பார்ட்டியில் கேக்கை முகத்தில் தடவியதால் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் என்ற இடத்தில் அங்குள்ள ஜிம் ஒன்றில் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்தப் பார்ட்டிக்கு நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஜிம்மிற்கு அடிக்க... மேலும் பார்க்க

தேனி: பட்டாசு ஆலையில் வெடி விபத்து; இரு இளைஞர்கள் உயிரிழப்பு; தொடரும் விபத்துகள்

தேனி மாவட்டம் கம்பம் அடுத்துள்ள காட்டுப்பள்ளி வாசல் தெருவில் திருப்பதி என்பவருக்குச் சொந்தமான லட்சுமி பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் அய்யப்பன், நாகர்ஜுன், சூர்யா, தினேஷ் (எ) தீனா... மேலும் பார்க்க

திருவள்ளூர்: ஏசி வாங்கிக் கொடுக்காததால் மனைவி எடுத்த விபரீத முடிவு? கணவரிடம் விசாரணை; என்ன நடந்தது?

திருவள்ளூரை அடுத்த பூண்டி ஜெயராம் தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (26). திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மோனிகா (25). இவர்கள் இருவரும் பூண்டியில் உள்ள ஒரு பள்ளியில் படித்தனர். அப்போது இர... மேலும் பார்க்க

5 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு 5 மரண தண்டனை; சிவகங்கையை அதிர வைத்த போக்சோ வழக்கு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளர் சந்திரன் (49). இவருக்குத் திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஒரு சாதாரண குடும்பஸ்தனாக வலம் வந்த இ... மேலும் பார்க்க