செய்திகள் :

கோவையில் திறக்கப்படாத டாஸ்மாக் கடைகள் - காரணம் என்ன?

post image

கோவை பீளமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்க்கக் கோரி முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 100க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மதியம் 12 மணிக்குத் திறக்க வேண்டிய டாஸ்மாக் கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்காவிட்டால், சஸ்பெண்ட் செய்வோம் என் கூறியதை கண்டித்து, அதிகாரிகளை சூழ்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

அப்போது பேசிய டாஸ்மாக் ஊழியர்கள், "விற்பனை செய்யும் மதுபாட்டில்களை ஒன்றுக்கு, மூன்று முறை ஸ்கேன் செய்ய வேண்டியுள்ளது. வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடிய பாட்டில்களில் ஸ்டிக்கரை சேகரித்து, மீண்டும் பத்து ரூபாய் அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்பதால் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதமும், காலதாமதமும் ஏற்படுகிறது. ஏற்கெனவே பணியாளர் பற்றாக்குறை, இடபற்றாக்குறை போன்றவை இருப்பதால் பணிக்சுமை அதிகரிக்கிறது. இது குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை" என்றனர்.

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

இது குறித்து மண்டல மேலாளர் கோவிந்தராசிடம் கேட்டபோது, "கோவையில் இன்று 70-க்கும் மேற்பட்ட கடைகள் இதுவரை திறக்காமல் உள்ளது. கடைகளை பூட்டிக்கொண்டு கையில் சாவியை வைத்து போராட்டத்தில் ஈடுபடுவது நிர்வாகத்திற்கு எதிரானது." என்றார்

25 ஏக்கரில் கல்லூரி... வெறும் 15 மாணவர்கள்; `ரூ.289 கோடி அவ்வளவுதானா?' - PDUIA-ன் அவல நிலை!

இந்தியாவின் தொல்லியல் துறையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கில், உத்தரப்பிரதேச மாநிலத்தில், 2019-ம் ஆண்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட 'பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம்' (PDU... மேலும் பார்க்க

எல்லா பதிவுகளுக்கும் ஆதார் கார்டை கேட்கிறார்களே; ஆனால், 'இந்த' பதிவுகளுக்கு ஆதார் கார்டு செல்லாது!

வங்கி முதல் டிக்கெட் பதிவு வரை எங்கே சென்றாலும், நம்மிடம் கட்டாயம் கேட்கப்படும் ஒரு ஆவணம் - ஆதார் கார்டு அல்லது ஆதார் கார்டு எண். ஆனால், அப்படிப்பட்ட ஆதார் கார்டு இந்திய குடியுரிமைக்கான ஆவணம் அல்ல. இத... மேலும் பார்க்க

ட்ரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு; அலறிய மக்கள்... விருந்தில் நடந்தது என்ன?!

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சனிக்கிழமை இரவு 'வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்க' விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென வெடிச் ச... மேலும் பார்க்க

தமிழ்நாடு தேர்தலை நடத்தும் முதல் பெண் தலைமை அதிகாரி; யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?

2026 தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற இருக்கும் வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று... மேலும் பார்க்க

"கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்களுக்கு ரொம்பவே தொந்தரவாகிவிட்டது" - சீமான்

தமிழகமெங்கும் சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. வாக்குப்பதிவு தொடங்கியதும், முதல் ஆளாக வந்து நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான். வ... மேலும் பார்க்க

போதுமான ரயில், பேருந்து இல்லாமல் அவதிப்பட்ட மக்கள்; ஸ்தம்பித்த கிளாம்பாக்கம்; பயணியின் அனுபவம்

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியிருக்கிறது. அதே நேரம், வாக்குரிமையை நிறைவேற்ற தயாரான பெரும் திரளான மக்கள் கூட்டம் நேற்று இரவிலிருந்து அல்லோலப்பட்டு இருக்கிறது. போதுமா... மேலும் பார்க்க