செய்திகள் :

`ரொம்ப அடாவடி பண்ணினாங்க'- அனு; அக்ரிமென்ட்ல தெளிவா இருக்கு - விஜய் 'ரெசார்ட்' வெப்சீரிஸ் பஞ்சாயத்து

post image

யூ டியூபர் எருமசாணி விஜய் எழுதி நடிக்க ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் 'ரெசார்ட்' வெப் சீரிஸில் லீட் ரோலில் நடிக்க கமிட் செய்து விட்டு ஷூட்டிங்கிற்கே அழைக்கவில்லை' என கேரளாவைச் சேர்ந்த நடிகை அனுகிரஹா வீடியோ வெளியிட்டிருந்த விவகாரத்தில் விஜய்யின் மனைவி தற்போது பதில் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

அனுகிரஹா

அனுகிரஹாவிடம் நாம் பேசிய போது,

'கேரளாவுல கோழிக்கோடு பக்கம் ஒரு கிராமத்துல இருக்கிற எனக்கு இந்த வெப்சீரிஸ் பத்தி எப்படிங்க தெரியும்? என்னுடைய ஒரு குறும்படத்தைப் பார்த்துட்டு விஜய் சைடுல இருந்துதான் எங்கிட்ட பேசினாங்க. லீட் ரோல்னுதான் சொன்னாங்க. மூணு தடவை ஆடிசன் வச்சாங்க. ஒரு வருஷத்துக்கு வேற எங்கயும் நடிக்க கூடாதுனு அக்ரிமென்ட் போட்டாங்க. சம்பளம், கன்வேயன்ஸ்னு எல்லாத்தையும் பேசினாங்க.

ஆனா ஷூட்டிங் தொடங்கின பிறகும் வெறும் ஐந்து எபிசோடுலதான் நான் நடிச்சேன். பிறகு ஷூட் கூப்பிடவே இல்ல. சம்பளமும் இல்ல. விஜய் சைடுல கேட்டா, பொறுப்பா பதில் சொல்லாதது மட்டுமில்லாம, 'மலையாளத்துல இருந்து வர்ற நடிகைகளே இப்படித்தான்'னு பேசறது, `தமிழ்ல்ல இப்படிதான் இருக்கும், இஷ்டம்னா இரு இல்லாட்டி போனு' பேசறதுனு ரொம்ப அடாவடி பண்ணினாங்க. என் சார்பா என் நண்பர் பேசினப்ப அவர்கிட்ட என்னுடைய பர்சனல் விஷயங்களை டச் பன்ணி கொச்சையா பேசினாங்க விஜய்யின் மனைவி நட்சத்திரா.

எனக்கு சோஷியல் மீடியாவுல ஃபாலோயர்ஸ் குறைவா இருக்காங்கன்னு நினைச்சா, என்னை முதல்ல எதுக்கு செலக்ட் பண்ணனும்' என ஆவேசமாக ஆதங்கப் பட்டிருந்தார்.

விஜய்யிடமும் நாம் பேசினோம்.

'லீட் ரோல் இல்லைங்கிறது அந்தப் பொண்ணுக்கு தெரியும். ஏன்னா நடிக்க தொடங்கி ரெண்டு மாசம் கழிச்சுதான் அக்ரிமென்ட் போட்டாங்க. அந்த அக்ரிமென்ட்ல தெளிவா இருக்கு. அதைப் படிச்சுப் பார்த்து கையெழுத்துப் போட்டிருக்காங்க அவங்க. அதேபோல சம்பளம் தரலைங்கிறதும் உண்மையில்லை. இதுவரை அவங்க நடிச்ச எல்லா எபிசோடுக்குமே சம்பளம் கொடுத்துட்டாங்க. சொல்லப் போனா அட்வான்ஸ் பணமும் இவங்களுக்கு புரடக்ஷன் தரப்புல இருந்து தந்திருக்காங்க. செலவுக்கு சிரமமா இருக்குன்னு நடிக்கறதுக்கு முன்னாடியே கேட்டிருக்காங்க.

இவ்வளவு விஷயங்கள் இருக்க. நான் பணமோசடி பண்ணிட்டேங்கிற ரீதியில் அழுது வீடியோ போட்டா என்ன சொல்றது?

erumasani vijay

என் மனைவி அசிங்கமா பேசிட்டதா சொன்னதுக்கும் பதில் சொல்றேன். ராத்திரி பதினோரு மணிக்கு மேல அந்தப் பொண்ணோட ஆண் நண்பர் போன் பண்ணி அநாகரிகமா கத்திகிட்டே இருந்தா யாருக்குதான் கோபம் வராது? அதனாலதான் என் மனைவியும் கொஞ்சம் கோபமா பேசினாங்க' என்கிறார் இவர்.

வெப்சீரிஸ் பெயரோ கோடையில ரிலாக்ஸா இருக்கலாம்னு போற இடமான ரெசார்ட். ஆனா இப்ப அடிக்கிற வெயிலையும் தாண்டி அனலாகக் கொதிக்கிறார்கள் இரண்டு தரப்பும்.

Jananayagan: நிறையபேர் போன் பண்ணி வாழ்த்துறப்போ சந்தோஷப்பட முடியல - சீரியல் நடிகர் அருண்

''நிறைய நண்பர்கள்கிட்ட இருந்து போன் வந்துட்டே இருக்கு. 'தளபதி படத்துல நடிச்சிருக்கேன்னு சொல்லவே இல்லயேன்னு கோபிச்சுக்கிட்டாங்க. டிவிக்கு வந்து இருபது வருஷத்துக்கு மேல ஆச்சு. இதுக்கு முன்னாடி சில சினிம... மேலும் பார்க்க

பெண் போட்டியாளரிடம் ஆபாசமாகப் பேசினாரா திவாகர்? ’குக்கு வித் கோமாளி’ செட்டில் என்ன நடந்தது?

குக்கு வித் கோமாளி ஷூட்டிங்கில் கலந்து கொள்ளச் சென்ற தன்னை அங்கிருந்த புகழ், வினோத், மாகாபா ஆனந்த் ஆகியோர் தாக்கியதாக வாட்டர்மெலன் திவாகர் போலீசில் புகார் தர, அந்தப் புகார் தொடர்பாக புகழ், வினோத், ஆனந... மேலும் பார்க்க

தவெக-வில் இணைந்தார் 'பிக்பாஸ்' தினேஷ்!

நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான தினேஷ் தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளார்.சின்னத்திரையில் சீரியல், ரியாலிட்டி ஷோ என பல ஏரியாக்களில் தலைகாட்டி வந்தவர் நடிகர் தினேஷ... மேலும் பார்க்க

'ஆடுகளம்' சீரியலில் இருந்து வெளியேறுகிறார் டெல்னா டேவிஸ் - காரணம் இதுவா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ஆடுகளம்' தொடரிலிருந்து வெளியேறுகிறார் நடிகை டெல்னா டேவிஸ்.சீனியர் நடிகர்கள் காத்தாடி ராமமூர்த்தி, நடிகை சச்சு ஆகியோருடன் நடிகை காயத்ரி ஜெயராம், டெல்னா டேவிஸ் உள்ளிட்ட ந... மேலும் பார்க்க

Azhagae Azhagu: "இப்போவே ஏன் அம்மா கேரக்டர்ல நடிக்கிறனு திட்டினாங்க" - அன்ஷித்தா பேட்டி

அழகே அழகே சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார் அன்ஷித்தா. 'செல்லம்மா' சீரியல், பிக் பாஸ், பர்சனல் எனப் பல விஷயங்கள் பற்றி அன்ஷித்தாவிடம் உரையாடினோம். மலையாளம் கலந்த தமிழில் பேசிய ... மேலும் பார்க்க

Serial Update: டிவி ஏரியாவில் பறக்கும் TVK கொடி; 'மேன்சன் குத்து' பாடலில் முதலில் ஆட மறுத்த ஆனந்தி

டிவி ஏரியாவில் டிவிகே கொடி!வரும் தேர்தலில் புதிதாகக் களம் காணூம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு சீரியல் ஏரியாவிலிருந்து பலர் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.ஷப்னம்'தெய்வ மகள்', 'மாரி' உள்... மேலும் பார்க்க