செய்திகள் :

தவெக-வில் இணைந்தார் 'பிக்பாஸ்' தினேஷ்!

post image

நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான தினேஷ் தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளார்.

சின்னத்திரையில் சீரியல், ரியாலிட்டி ஷோ என பல ஏரியாக்களில் தலைகாட்டி வந்தவர் நடிகர் தினேஷ். சொந்த ஊர் திருவில்லிபுத்தூர்.

சென்னை வந்து லயோலா கல்லூரியில் மீடியா படிப்பை முடித்த தினேஷ் தொடர்ந்து சின்னத்திரையில் நுழைந்தார்.

விஜய் டிவியின் பல ஹிட் சீரியல்களில் நடித்திருக்கும் இவர் பிக்பாஸ் சீசன் 7 ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று வரை வந்தார்.

சீரியல் நடிகர்களுக்கான சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தேர்தலில் நின்று ஒரு முறை இணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டவர்.

கடந்தாண்டு மீண்டும் சங்கத்தின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

சென்னையில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்தைச் சந்தித்த பின் திருவில்லிபுத்தூர் சென்று கட்சியின் மாவட்டச் செயலாளர் மாரி செல்வத்திடம் உறுப்பினர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டார். விருதுநகர் மாவட்ட தவெக வேட்பாளர்கள் சிலர் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர்களை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கின்றனர் எனச் செய்திகள் வெளியான நிலையில் மாவட்டச் செயலாளர் முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்து கொண்டிருக்கிறார்.

தினேஷிடம் பேசினோம்.

''நடிப்புக்காக சென்னை வந்துட்ட போதும் இன்னும் நான் ஓட்டு போடுறது ஊரில்தான். அதனாலதான் சொந்த ஊரிலிருந்தே அரசியல் பயணத்தைத் தொடங்கலாம்னு நினைச்சேன். நான் சிறுவனாக இருந்த போது என் தாத்தா ஒரு விவசாயியா இந்தப் பகுதியில் அழகர் அணை கொண்டு வர எடுத்த முயற்சியையெல்லாம் பக்கத்துல இருந்து பாத்திருக்கேன். என் உடன்பிறந்த அண்ணன் ஒரு ஈழத்து தமிழ்ப் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன்னு சொல்லி அதை செய்தும் காட்டிய கொள்கை

வாதி. ஆனாலும் இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியிலும் நேரடி தொடர்பு கிடையாது. முதல் தடவையா அரசியலுக்கு வர்றேன். தவெகவைத் தேர்ந்தெடுத்ததுக்குக் காரணம் தளபதி விஜய் சார் ஒரு தலைவனாக ஆவதற்குச் செய்த தியாகம், ஒரு எழுச்சிமிகு அரசியலை அவர் முன்னெடுக்கும் போது வரும் தடைகளைத் தாண்டி மக்களிடம் அதை கொண்டு செல்லும் கான்ஃபிடன்ஸ் ரெண்டும்தான்.

தமிழக மக்கள் நலனுக்காக தலைவர் விஜய் கண்ட அந்த தூய அரசியலமைப்பு அமையும் வரை அதற்காக உழைக்கும் பலரின் உழைப்போடு எனது உழைப்பும் தொடரும்’’ என்கிறார் தினேஷ்.

'ஆடுகளம்' சீரியலில் இருந்து வெளியேறுகிறார் டெல்னா டேவிஸ் - காரணம் இதுவா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ஆடுகளம்' தொடரிலிருந்து வெளியேறுகிறார் நடிகை டெல்னா டேவிஸ்.சீனியர் நடிகர்கள் காத்தாடி ராமமூர்த்தி, நடிகை சச்சு ஆகியோருடன் நடிகை காயத்ரி ஜெயராம், டெல்னா டேவிஸ் உள்ளிட்ட ந... மேலும் பார்க்க

Azhagae Azhagu: "இப்போவே ஏன் அம்மா கேரக்டர்ல நடிக்கிறனு திட்டினாங்க" - அன்ஷித்தா பேட்டி

அழகே அழகே சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார் அன்ஷித்தா. 'செல்லம்மா' சீரியல், பிக் பாஸ், பர்சனல் எனப் பல விஷயங்கள் பற்றி அன்ஷித்தாவிடம் உரையாடினோம். மலையாளம் கலந்த தமிழில் பேசிய ... மேலும் பார்க்க

Serial Update: டிவி ஏரியாவில் பறக்கும் TVK கொடி; 'மேன்சன் குத்து' பாடலில் முதலில் ஆட மறுத்த ஆனந்தி

டிவி ஏரியாவில் டிவிகே கொடி!வரும் தேர்தலில் புதிதாகக் களம் காணூம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு சீரியல் ஏரியாவிலிருந்து பலர் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.ஷப்னம்'தெய்வ மகள்', 'மாரி' உள்... மேலும் பார்க்க

சீரியல் நடிகை திடீர் மரணம்; அதிர்ச்சியில் சின்னத்திரை!

கயல் சீரியலில் நடித்த நடிகை சுபாஷினி திடீரென உயிரிழந்த செய்தி, சின்னத்திரை ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ஸ்ரீலங்காவை சேர்ந்த நடிகை சுபாஷினி, திரைத்துறை மீதான காதலால் இந்தியாவில் தஞ்சம... மேலும் பார்க்க

`அந்த ஷோ பிக் அப் ஆகிடுச்சு; ஆனா நான் மாட்டிகிட்டேன்' - 'சமையல் சூப்பர் ஸ்டார்' மேடையில் சாய் சக்தி

அவள் விகடன் நடத்திய 'சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3' நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. பிரபல செஃப் தீனா நடுவராக வந்து வெற்றி பெற்ற போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்தார். இ... மேலும் பார்க்க

ஜாய் கிறிசில்டா குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை - டிஎன்ஏ சோதனையில் உறுதி?

ந‌டிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்ததாகவும், அந்த பந்தத்தின் மூலம் தனக்குக் குழந்தை பிறந்ததும், சேர்ந்து வாழ மறுக்கிறார் எனவும் மகளிர் ஆணையம், நீதிமன்றம் என பல இ... மேலும் பார்க்க