செய்திகள் :

'முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகள்; ஐ.பி.எல் வரலாற்றிலேயே நிகழாத சம்பவம்!' - யார் இந்த பிரபுல் ஹிங்கே?

post image

ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிய அறிமுக வீரர் பிரபுல் ஹிங்கே வீசிய முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார்

Praful Hinge
Praful Hinge

ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் ஹர்ஷல் படேல், உனத்கட் என சீனியர்களை பென்ச்சில் வைத்துவிட்டு அறிமுக வீரர்களான பிரபுல் ஹிங்கேவையும் சகிப் ஹூசைனையும் பௌலிங்கிற்கு பயன்படுத்தியது சன்ரைசர்ஸ். சன்ரைசர்ஸ் முதலில் பேட் செய்து 216 ரன்களை எடுத்திருந்தது. ராஜஸ்தான் சேஸை தொடங்கியது. ஜெய்ஸ்வாலும் சூர்யவன்ஷியும் ஓப்பனிங் இறங்கினார்கள்.

சூர்யவன்ஷி உச்சக்கட்ட பார்மில் இருக்கிறார். மும்பை, பெங்களூரு என எல்லா போட்டிகளிலும் அசத்தியிருந்தார். ஆனால், இங்கே பிரபுல் ஹிங்கே வீசிய இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே வைபவ் சூர்யவன்ஷி டக் அவுட் ஆகினார். டைட்டான லெந்தில் ஷார்ட்டாக வீசிய பந்தை சரியாக கனெக்ட் செய்ய முடியாமல் அவுட் ஆகியிருந்தார். இதே ஓவரில் துருவ் ஜூரேல் மற்றும் ப்ரெட்டோரியஸின் விக்கெட்டுகளையும் ஹிங்கே வீழ்த்தினார்.

Praful Hinge
Praful Hinge

ஐ.பி.எல் வரலாற்றிலேயே இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே எந்த பௌலரும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இல்லை. அப்படியொரு அசாத்திய சாதனையை அறிமுக வீரரான ஹிங்கே செய்திருந்தார். மேலும், ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்கின் விக்கெட்டையும் ஹிங்கே வீழ்த்தியிருந்தார்.

அறிமுக போட்டியிலேயே மிரட்டலான பெர்பார்மென்ஸை கொடுத்த ஹிங்கே, விதர்பா அணிக்காக ஆடி வரும் வேகப்பந்து வீச்சாளர். கடந்த சீசனில் ரஞ்சி போட்டியில் தமிழ்நாட்டுக்கு எதிராக ஹிங்கே பந்துவீசிய விதத்தை பார்த்து வியந்த வருண் ஆரோன் அவரை சன்ரைசர்ஸின் ட்ரையல்ஸூக்கு அழைத்திருந்தார். ட்ரையல்ஸில் சில Match Situation களில் ஹிங்கே சிறப்பாக வீச அவரை 30 லட்ச ரூபாய்க்கு வாங்கியது சன்ரைசர்ஸ் அணி. சீனியர் பௌலர்கள் சரியாக சோபிக்காததால் அறிமுக வீரரை நம்பி சன்ரைசர்ஸ் வாய்ப்பு கொடுத்தது. அந்த வாய்ப்பை ஹிங்கே ஆகச்சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

'அடிச்ச அடி அப்படி.!' - வான்கடேவிலேயே மும்பையை சம்பவம் செய்த ஆர்.சி.பி!

வான்கடேவில் வைத்தே மும்பை அணி மீது அதிரடி தாக்குதலை நடத்தி வென்றிருக்கிறது பெங்களூரு அணி.MI vs RCB``எல்லாப் போட்டியும் போட்டியல்ல ஐபிஎல் ரசிகர்களுக்கு ரோ-கோ மோதிக் கொள்ளும் போட்டியே போட்டி"னு புது திர... மேலும் பார்க்க

CSK vs DC: "எங்களிடம் பந்துவீச்சில் மிரட்டும் வீரர்கள் இல்லை; அதனால்..." - வெற்றி குறித்து ருதுராஜ்

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 11) ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. தொடர் சரிவுகளுக்குப் பிறகு கிடைத்த இந்த வெற்றி குறித்து... மேலும் பார்க்க

CSK vs DC : 'கால் நூற்றாண்டுக்கு பிறகு ஒரு கபிகபி! - சேப்பாக்கத்தில் எப்படி வென்றது சி.எஸ்.கே

நீண்ட காலம் கழித்து சி.எஸ்.கே ரசிகர்களின் வாழ்க்கையில் ஒரு கபிகபி நடந்திருக்கிறது. 'இதையெல்லாம் பார்த்து எவ்வளவு நாளாச்சுல்ல...' என்பது போல ஆர்ப்பரிப்பில் துள்ளிக் குதிக்கின்றனர் சேப்பாக்கத்தில் குழும... மேலும் பார்க்க

'சேப்பாக்கத்தில் சேட்டனின் வெறியாட்டம்!' - எப்படி சதமடித்தார் சஞ்சு சாம்சன்?

சேப்பாக்கத்தில் நடந்து வரும் டெல்லிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் அசத்தலான சதம் ஒன்றை அடித்திருக்கிறார்.Samsonசென்னை அணி இந்த சீசனில் மிக மோசமாக ஆடி வருகிறது. முதல் 3 போட்டிகளிலும் சென்னை அணி தோ... மேலும் பார்க்க

'ஒரே ஒருத்தன்.!' - மாஸ் காட்டிய சூர்யவன்ஷி; ஆர்.சி.பி-யின் முதல் தோல்வி

ஐபிஎல் தொடரில் நேற்று ( ஏப்ரல் 10)நடைபெற்ற பெங்களூரு vs ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே காணாத அணிகளாக இந்த இரண்டு அணிகளும் களம் இற... மேலும் பார்க்க

`அவ்வளவுதான் முடிந்துவிட்டது நினைக்கும்போது.!' - வெளுத்தெடுத்த முகுல்; மீண்டும் ஒரு திரில்லர்

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோ vs கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி, ஒரு த்ரில்லர் போட்டியாக மாறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தே... மேலும் பார்க்க