செய்திகள் :

Labham - 1: குறைந்த ஆண்டில் அதிக பணத்தை சேர்க்க உதவும் Stepup முதலீடு... எப்படி?

post image

நம்மில் பலருக்கும் எதிர்காலத்துக்கான பணத்தை அதிலும் குறிப்பாக, ஓய்வுக் காலத்துக்குத் தேவையான பணத்தைக் கட்டாயம் சேர்த்தாக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. இன்றைய நிலையில், நிம்மதியான ஓய்வுக் காலத்துக்குக் குறைந்தது ரூ.2, 3 கோடியாவது சேர்க்க வேண்டும் என்பதுதான் உண்மையான நிலைமை.

ரூ.3 கோடி பணம் என்னால் சேர்க்க முடியுமா என்கிற கேள்விகள் உங்கள் மனதில் தோன்றலாம். ஆனால், Stepup SIP என்கிற முதலீட்டு முறையைப் பற்றி நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொண்டால், ரூ.3 கோடி பணத்தை எளிதாக சேர்க்க முடியும் என்பதுதான் உண்மை.

SIP - SWP Growth

Stepup SIP முறை பற்றி தெரிந்துகொள்வதற்குமுன், முதலில் SIP பற்றி தெரிந்துகொள்வோம்.

இன்றைய நிலையில், SIP என்று சொல்லப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் ரூ.5,000, ரூ.10,000, ரூ.20,000 என சேர்ப்பதுதான் SIP. இந்த SIP மூலம் 20 அல்லது 25 ஆண்டுகளில் எவ்வளவு சேர்க்க முடியும்?

ரூ.5 ஆயிரத்தை 20 ஆண்டுகள் சேர்த்து அதற்கு 12% லாபம் கிடைத்தால், ரூ.46 லட்சம் உங்களுக்குக் கிடைக்கும்!

ரூ.10 ஆயிரத்தை 20 ஆண்டுகள் சேர்த்து அதற்கு 12% லாபம் கிடைத்தால், ரூ.92 லட்சம் உங்களுக்குக் கிடைக்கும்!

இன்றைக்குப் பலராலும் இளம் வயதிலேயே ரூ.20 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என சேர்க்க முடிவதில்லை. 25 வயதில் வருமானமும் குறைவு, செலவும் அதிகம் என்பதால் குறைந்த அளவில்தான் அவர்களால் முதலீடு செய்ய முடிகிறது. ஆனால், இளம் வயதில் இருக்கும் Stepup முறையைப் பயன்படுத்தி முதலீடு செய்யத் தொடங்கினால், அவருடைய ஓய்வுக் காலத்தில் ரூ.2 கோடிக்கு மேலே சேர்க்க முடியும்.

investment | SIP | Happy Investor
investment | SIP | Happy Investor

Stepup முறை என்றால் என்ன?

இளம் வயதில் குறைந்த தொகையில் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடங்கி, ஒவ்வோர் ஆண்டும் 5% அல்லது 10% என உயர்த்திக்கொண்டே செல்வதுதான் Stepup முறை.

உதாரணமாக, ரமேஷ் என்பவர் 31-வது வயதில் மாதந்தோறும் ரூ.5,000 என எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யத் தொடங்குகிறார். ஆண்டுதோறும் 10% என முதலீட்டுத் தொகையை உயர்த்துவது அவர் திட்டம்.

அதாவது, முதலாம் ஆண்டில் ரூ.5,000. இரண்டாம் ஆண்டில் ரூ.5,500, மூன்றாம் ஆண்டில் ரூ.6,100, நான்காம் ஆண்டில் ரூ.6,710 என ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டுத் தொகையை உயர்த்திக்கொண்டே செல்வதுதான் Stepup முறை. இப்படி சேர்த்தால், அடுத்த 30 ஆண்டு காலத்தில் அவர் மொத்த எவ்வளவு பணத்தை சேர்த்திருப்பார்?

ரமேஷ் முதலீடாகக் கட்டிய மொத்த பணம் ரூ.98,69,641

ஆண்டு கூட்டு வட்டி வளர்ச்சியில் 12% லாபம் அடுத்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்குத் திரும்பக் கிடைக்கும் பணம் ரூ.3,99,28,881.

sip investment

இந்த Stepup SIP முறையில் எப்போது வேண்டுமானாலும் முதலீட்டை அதிகமாக்கிக் கொள்ளலாம். அதேபோல, குறைக்கவும் செய்யலாம். அதிகமான பணத்தை முதலீடு செய்தால், அதிகமான தொகை பிற்காலத்தில் கிடைக்கும் குறைவான பணத்தை முதலீடு செய்தால், குறைவான பணமே கிடைக்கும் என்பதை நாம் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்.

தவிர, இளம் வயதில் குறைந்த அளவில் பணத்தை முதலீடு செய்யத் தொடங்குபவர்கள், காலம் செல்லச் செல்ல அதிகமான பணத்தை முதலீடு செய்ய வேண்டி இருக்கும் என்பதையும் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். இளம் வயதிலேயே முடிந்த அளவு அதிகமான பணத்தை முதலீடு செய்தால், காலம் செல்லச் செல்ல முதலீட்டின் அளவை ஒன்றிரண்டு சதவிகிதம் என குறைத்துக்கொண்டே வந்தாலும், பிற்பாடு கிடைக்கும் பணம் பெரிய அளவில் குறையாது.

ஆக, Stepup SIP முறையை இதுவரை பயன்படுத்தாதவர்கள் இனியாவது பயன்படுத்தத் தொடங்கினால், குறைந்த ஆண்டுகளில் அதிகமான பணத்தை சேர்க்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை!

வருகிற 19-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 11 மணி முதல் 1 மணி நடக்கும் ஆன்லைன் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புகிறீர்களா? இந்த லிங்க்கை கிளிக் செய்து உங்கள் பெயரை உடனே பதிவு செய்துகொள்ளுங்கள்!

https://labham.money/events/webinar-apr19-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_apr19_2026

வாட்ஸ் அப் குருப்பில் சேர...

https://labham.money/events/webinar-apr19-2026?utm_source=labham_whatsapp&utm_medium=whatsapp_group&utm_campaign=webinar_apr19_2026

NRI Corner-6: முதலீட்டில் வெளிநாடு வாழ் தமிழர்கள் செய்யும் 3 முக்கியத் தவறுகள்! எப்படி சரிசெய்யலாம்?

இன்றைய தேதியில் உலகத்தின் பல நாடுகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள். தாயகத்தை விட்டு பல ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் புதிய மொழி, புதிய கலாசாரம், புதிய உணவு, புதிய சுற்றுச்சூழல் என எல்லா விதத்திலும் ... மேலும் பார்க்க

Investment: என்ன பண்ணனும்னு ஓரளவு தெரியும்; ஆனா பண்ணல - இது நீங்களா?

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பெருக்கெடுத்து ஓடிய காவிரி நதியின் குறுக்கே சோழ மன்னன் கரிகாலன் கல்லணையைக் காட்டினார். வெள்ளநீரைத் தடுத்து ஒரு மாபெரும் அணையைக் கட்டும் தொழில்நுட்ப அறிவும், புத... மேலும் பார்க்க

அம்மா சேர்த்து வெச்ச கடுகு டப்பா காசு தான் இப்போது 'இது': வாழ்க்கை நிதி பிளானிங்| பணம் வளர்ப்போம்

பணம் வளர்ப்போம் - ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பது தான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும். அப்படி இ... மேலும் பார்க்க

NRI Corner - வரிக்கு பயந்து முதலீடு செய்யாமல் இருப்பது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு சரியா?

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ( NRI - Non-Resident Indian) மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்போது எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்கிற கேள்விக்கான பதிலை அவசியம் தெரிந்துகொள்ள நினைப்பார்க... மேலும் பார்க்க

11 நாளில் பணம் டபுளாகும்; மோசடி கும்பலிடம் 12 கோடி இழந்த டாக்டர்; அவசியம் அறிய வேண்டிய CAGR

யாரெல்லாம் அதிகப் பணம் சம்பாதிக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் பணம் செயல்படும் விதம் பற்றி ஓரளவுக்கே தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்கிற உண்மை மீண்டும் மீண்டும் நிருபிக்கிற மாதிரி பல சம்பவங்கள் நடந்துகொண்... மேலும் பார்க்க

வாழ்நாள் முழுவதும் உழைக்கப் போகிறீர்களா? உண்மையான செல்வத்தை உருவாக்கும் 6 ரகசியங்கள்!

பணக்காரராக இருப்பதற்கும், உண்மையான செல்வந்தராக (Wealthy) இருப்பதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. 'The Psychology of Money' புத்தகத்தின் ஆசிரியர் மார்கன் ஹௌசல் சொல்வது போல, "நீங்கள் செலவு செய்த பணம்... மேலும் பார்க்க