Asha Bhosle: "அவர் என்னிடம் காட்டிய பாசமும் அன்பும்"- உருக்கமாக வீடியோ வெளியிட்ட...
அம்மா சேர்த்து வெச்ச கடுகு டப்பா காசு தான் இப்போது 'இது': வாழ்க்கை நிதி பிளானிங்| பணம் வளர்ப்போம்
பணம் வளர்ப்போம் - ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பது தான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும்.
அப்படி இந்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை வரை, நாம் பார்க்கப்போகும் டாபிக், 'வாழ்க்கை நிதி திட்டமிடல்'.
நம்முடைய அம்மா, அப்பா காலத்திற்கும், நம்முடைய காலத்திற்கு உணவு தொடங்கி லைஃப் ஸ்டைல் வரை பல பல மாற்றங்கள்.
அம்மா, அப்பா காலத்திற்கு 25 பைசா டு 1 ரூபாய்க்குள் விற்றுக்கொண்டிருந்த சாக்லேட்டுகளே, இப்போது ரூ.1-ல் இருந்து ரூ.1,000-ஐத் தாண்டி விற்றுக்கொண்டிருக்கிறது.

அப்போது செலவுகளை யோசித்துப்பாருங்கள். முன்பு மடுவாக இருந்த செலவுகள் இப்போது மலையைத் தாண்டி வளர்ந்திருக்கின்றன.
முன்பு, நம் அம்மா, அப்பாவிடம் இருந்த நிதி திட்டமிடல் இப்போது நம்மிடம் இல்லை. அந்த விஷயத்தில் சறுக்கி விடுகிறோம்.
அதனால், அந்த விஷயத்தை இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை நமக்குக் கற்றுக்கொடுக்க இருக்கிறார் நிதி நிபுணர் சுந்தரி ஜகதீசன்.
"இன்றைய காலக்கட்டத்தில் சராசரியாக இளைஞர்கள் 23 - 25 வயதில் வேலை பெற்றுவிடுகிறார்கள் அல்லது பிசினஸ் தொடக்கத்திற்கு பிள்ளையார் சுழி போட்டுவிடுகிறார்கள்.
அப்போதிலிருந்து தாறுமாறு செலவுகளும் முளைக்கத் தொடங்கிவிடுகின்றன.
ஆக, அது தான் 'வெல்கம் டு Manhood'.
அதனால், அப்போதிருந்து சேமிப்பு, முதலீடுகளைத் தொடங்கிவிட வேண்டும்.
அதற்கு முன், எமெர்ஜென்சி ஃபண்டைச் சேர்க்கத் தொடங்க வேண்டும்.

அந்தக் காலத்தில் அம்மா கடுகு டப்பாவிலும், உளுந்து டப்பாவிலும் கொஞ்சம் கொஞ்சம் பணம் போட்டு வைத்திருபார்கள். வீட்டில் ஏதேனும் அவசியத் தேவை ஏற்படும் போது, அந்தப் பணத்தை எடுத்துத் தருவார்கள்.
அந்தப் பணத்தின் நவீன வடிவமே, 'எமெர்ஜென்சி ஃபண்ட்'.
'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என்பது தான் இன்றைய VUCA உலகம். இதற்கு ஈரான் போரே சிறந்த உதாரணம்.
அதனால், எப்போது என்ன நடந்தாலும் தயாராக இருப்பதற்கு தான் இந்த எமெர்ஜென்சி ஃபண்ட். இது நல்லது, கெட்டது இரண்டிற்குமே உதவும்.
பொதுவாக, 3 - 6 மாதங்களுக்கு ஆகும் செலவுத் தொகையை எமெர்ஜென்சி ஃபண்டாக சேர்த்து வைக்க வேண்டும். இதை 30 வயதிற்குள் சேர்த்துவிட்டால் சூப்பர்.
வயது ஆக ஆக, செலவுகளுக்கு ஏற்ப இந்தத் தொகையை அதிகரிக்கவும் வேண்டும்.
இதில் மளிகை சாமான் தொகை முதல் வட்டிக்குப் போகும் தொகை வரை அனைத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

இந்த ஃபண்ட் சேர்க்காவிட்டால், திடீர் செலவுகளின் போது, ஒன்று முதலீட்டில் கை வைப்போம். இல்லையென்றால், கடன் வாங்குவோம். இரண்டையும் தவிர்க்கத் தான் இந்த ஃபண்ட்.
எமெர்ஜென்சி ஃபண்டில் இருந்து தேவையில்லாமல் கை வைக்கக்கூடாது. அவசர செலவுகளின் போது மட்டும் தான் கை வைக்க வேண்டும். அதில் மிக மிக கவனமாக இருங்கள்.
எமெர்ஜென்சி ஃபண்டை எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதற்கு ஒரு நெறிமுறை உண்டு.
முதல் மாதத்திற்குத் தேவைப்படும் தொகையை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும் என்கிற நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மற்ற மாதத் தொகைகளை போஸ்ட் ஆபீஸ் அல்லது வங்கியில் போட்டு வைக்கலாம்.
இந்த மொத்தத் தொகையும் ஒரே நாளிலோ, ஒரே மாதத்திலோ சேர்த்துவிட முடியாது. அதனால், சம்பாதிக்கத் தொடங்கிய உடன் சிறுக சிறுக சேமிக்கத் தொடங்குவது தான் சிறந்தது.
ஒருவேளை சம்பாதிக்கத் தொடங்கும்போது சேர்க்கத் தொடங்கவில்லை என்றாலும் பிரச்னை இல்லை. இப்போதிருந்து தொடங்குங்கள்".



















