செய்திகள் :

"யாரும் ஈரானுக்கு சுங்க வரி கட்டக்கூடாது" - ஹார்முஸைச் சுற்றி வளைக்கும் ட்ரம்ப்; எச்சரிக்கும் ஈரான்

post image

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடந்த அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தை கைக்கூடவில்லை.

'பேச்சுவார்த்தையின் முதல் கூட்டம் எப்போதும் வெற்றிப் பெறாது' என்று பேச்சுவார்த்தை குறித்து ஈரான் பாசிட்டிவாகவே தெரிவித்திருந்தது.

அமெரிக்க அதிபர் ட்ரம்புமே, ''பேச்சுவார்த்தை நன்றாகத்தான் சென்றது. பேச்சுவார்த்தையின் இறுதியில் நிறைய விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன'' என்று ஆரம்பத்தில் பாசிட்டிவாகவே சொன்னார்.

ஆனால், திடீர் என்று பேச்சை மாற்றி, இப்போது ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"ஹார்முஸ் ஜலசந்தியில் நுழையும் மற்றும் அதில் இருந்து வெளிவரும் கப்பல்களைத் தடுக்க அங்கே உடனடியாக அமெரிக்க கப்பற்படை நிறுத்தப்படுகிறது.

அப்போதுதான் ஒருகட்டத்தில் அனைத்து கப்பல்களுமே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உள்ளே செல்லவும், வெளியே வரவும் முடியும்.

சட்டத்திற்குப் புறம்பாக, ஈரானுக்கு சுங்க வரி கட்டி ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்களைத் தடுக்க அமெரிக்க கப்பற்படைக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.

மேலும், ஈரான் புதைத்து வைத்திருப்பதாகக் கூறும் கடல் கண்ணிவெடிகளை அகற்றவும் கூறியிருக்கிறேன்.

எங்கள் மீதோ, அமைதியாகப் பயணிக்கும் கப்பல்கள் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டால், அவர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள்" என்று தனது ட்ரூத் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ஈரானால் பல கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. இப்போது இதில் அமெரிக்காவும் சேர்கிறது. இதனால், கப்பல் போக்குவரத்து பெரிய தலைவலியாக மாறி உள்ளது.

இதற்கு பதிலடியாக, ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே இருக்கும் எரிவாயு நிலையங்களின் புகைப்படத்தைப் பகிர்ந்து, "இப்போதிருக்கும் பம்ப் (எரிவாயு) விலைகளை என்ஜாய் செய்யுங்கள்.

இந்தத் தடுப்பிற்குப் பிறகு, 4 - 5 டாலர் எரிவாயு விலை உங்கள் பழைய கால நினைவாக விரைவில் மாறும்" என்று ஹார்முஸ் ஜலசந்தியில் நடக்கும் பயணம் தடுக்கப்பட்டால், எரிவாயு விலை உயரும் என்று எச்சரித்துள்ளார்.

ஹார்முஸை முடக்கும் அமெரிக்க முடிவு: `எதிர்க்கும் உலக நாடுகள்' - மீண்டும் பின்னடைவில் ட்ரம்ப்!

ஈரான் - இஸ்ரேலுக்கு இடையிலான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியது அமெரிக்கா. இறுதியில் இது ஈரான் - அமெரிக்கா போர் எனப் பேசும் அளவு இரு நாடுகளும் கடுமையாக மோதிக்கொண்டன. இதன் உச்சமாக உலக நாடுகளுக்கு எ... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் தாயார் மறைவு; அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கரின் தாயார் கமலா, வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்ற... மேலும் பார்க்க

அதிர வைத்த விஜய்; எச்சரித்த முதல்வர் தரப்பு - தூத்துக்குடி அஜிதா திமுக-வில் இணைந்த பின்னணி!

தூத்துக்குடி தவெக நிர்வாகியான அஜிதா நேற்று திடீரென திமுக-வில் இணைந்திருக்கிறார். இதன் பின்னால் லோக்கல் அமைச்சர் ஒருவரின் தீவிர காய் நகர்த்தலும் கனிமொழியின் விருப்பமும் இருப்பதாக கிசுகிசுக்கின்றனர் விவ... மேலும் பார்க்க

தவெக: ``தபால் வாக்கு செலுத்துவதில் முறைகேடு நடந்திருக்கிறது" - சிடிஆர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேர்தலுக்கான பிரசாரமும் சுறுசுறுப்பாக நடந்துவருகிறது. இதற்கிடையில், 85 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலை... மேலும் பார்க்க

அறிஞர் அண்ணா டு விஜயகாந்த் - தலைவர்கள் தேர்தலில் முதன் முதலில் வெற்றி பெற்ற தொகுதி எது தெரியுமா?

தமிழக அரசியலில் கோலோச்சிய முக்கிய தலைவர்கள் எந்த தொகுதியில் முதன் முதலில் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்கள் என்று தெரியுமா? திமுக-வை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா, 1957-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் த... மேலும் பார்க்க

`திமுக வெற்றிபெற உதவிய ஜெயலலிதா' - 1989 தேர்தல் களம் சொல்லும் அரசியல் | Vote Vibes

தமிழக அரசியல் வரலாற்றில் 1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஒரு திருப்புமுனை. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க சந்தித்த முதல் தேர்தல். ஆனால், அசைக்க முடியாத சக்தியாக இருந்த அந்த இயக்கம... மேலும் பார்க்க