செய்திகள் :

RCB VS MI: "எதுவுமே வேலை செய்யல, இப்படியே போனா வேலைக்கு ஆகாது.!"- ஹர்திக் பாண்டியா வேதனை

post image

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 12) விறுவிறுப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

பந்துவீச்சில் அதிக ரன்களை வாரி வழங்கிய மும்பை அணி, இலக்கை எட்ட முடியாமல் தோல்வியைத் தழுவியது. போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, அணியின் தற்போதைய பின்னடைவு குறித்து மிகவும் கவலையுடன் பேசியிருக்கிறார்.

rcb vs mi match
rcb vs mi match

"நாங்கள் பந்துவீச்சில் அதிக ரன்களைக் கொடுத்துவிட்டோம் என்றுதான் நினைக்கிறேன். ஆரம்பத்திலிருந்தே நாங்கள் ஆட்டத்தைத் துரத்த வேண்டிய கட்டாயத்திலேயே இருந்தோம்.

கடந்த சில போட்டிகளாகவே பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி, ஆட்டத்தை வழிநடத்துவதற்குப் பதிலாக, பின் தங்கியிருந்து ஆட்டத்தைப் பிடிக்கவே போராடிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்கே தவறு செய்கிறோம் என்று உட்கார்ந்து யோசிக்க வேண்டும். எங்களுக்குத் தேவையான அந்த வெற்றியும், வேகமும் எப்படி கிடைக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்.

உண்மையைச் சொல்லப்போனால், இப்போது பல விஷயங்களை நாங்கள் மறுபரிசீலணை செய்ய வேண்டியிருக்கிறது. இப்போது இருக்கும் முறைகள் வேலை செய்யவில்லை. சில போட்டிகளில் நாங்கள் டாஸ் வென்றும் கூட, பேட்டிங் அல்லது பந்துவீச்சில் சரியான முடிவுகளை எடுக்கத் தவறிவிட்டோம்.

மைதானத்தின் தன்மையைப் பொறுத்தவரை, நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். குறிப்பாக, பவர் பிளே-வில் நாங்கள் தடுமாறுகிறோம்.

rcb vs mi match
rcb vs mi match

பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே பவர் பிளே-வில் பின்னடைவைச் சந்தித்துவிட்டு, பிறகு மீண்டு வரப் போராடுகிறோம். அடுத்த போட்டியில் என்ன செய்யலாம் என்பது குறித்து நிறைய ஆலோசனைகள் செய்ய வேண்டியிருக்கிறது.

இருப்பினும், ரூதர்ஃபோர்ட் ஆடிய விதம் எங்களுக்கு உற்சாகத்தைத் தந்துள்ளது. அவரிடம் இருக்கும் திறமையும், சக்தியும் எங்களுக்குத் தெரியும். அவர் ஆடிய விதம் அணிக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது. அணியில் மாற்றங்கள் செய்ய விரும்பினால், அவர் போன்ற வீரர்கள் இருப்பது எங்களுக்குப் பெரிய பலம்," என்று ஹர்திக் பாண்டியா எதார்த்தமாகப் பேசியிருக்கிறார்.

RCB vs MI: "விராட் பாயும், சால்ட்டும் தொடங்கிய விதம் தான் எங்களை.."- வெற்றி குறித்து ரஜத் பட்டிதார்

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்12) நடைபெற்ற மும்பை vs பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பாயின்ட்ஸ் டேபிலில் மூன்றாவது இடத்... மேலும் பார்க்க

"220 ரன்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு மேட்டரே இல்லை!" – SRH பந்துவீச்சை சிதறடித்த பஞ்சாப் கிங்ஸ்

போட்டியில் இன்று (ஏப்ரல் 11) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள்மோதின. தோல்வியே காணாத பஞ்சாப் அணி தனது கோட்டையில் ஹைதராபாத்தின் அதிரடியைச் சமாளித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் ஒரு இமாலய... மேலும் பார்க்க

CSK: "எங்கள் அணியின் மீது எழும் விமர்சனங்கள் நியாயமானதுதான்.!"- ஃபிளெமிங் என்ன சொல்கிறார்?

2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான தொடக்கத்தைச் சந்தித்திருக்கிறது. விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் தோல்வியைச் சந்திருக்கிறது. ஒரு வெற்றி கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் 0 பு... மேலும் பார்க்க

RR vs RCB: "களத்தில் நான் பந்துவீச்சாளர்களை கவனிக்க மாட்டேன், மாறாக.!"- சூர்யவன்ஷி சொல்லும் சீக்ரெட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.10) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் ராஜஸ்தான் அணி பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றி... மேலும் பார்க்க

RR Vs RCB: "வைபவ் பவர்பிளேயில் விளையாடிய விதம் தான்.!"- தோல்வி குறித்து கேப்டன் ரஜத் பட்டிதார்

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 10) கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இரு அணிகள் மோதியதால், ரசிக... மேலும் பார்க்க

RR Vs RCB: `கேப்டனாக நான் எடுத்த தவறான முடிவுகளால் 20 ரன்கள் கூடிவிட்டது!' - கேப்டன் ரியான் பராக்

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 10)16-வது லீக் போட்டியில், பெங்களூரு அணி நிர்ணயித்த 202 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18 ஓவர்களிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு ப... மேலும் பார்க்க