செய்திகள் :

எழுத்தாளர் நிஜந்தன் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

post image

கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நிஜந்தன் (31). இவர் ’பிறழ்’ என்ற சிறுவயது பாலியல் அத்துமீறல் காரணமாக அகச்சிதைவு ஏற்படும் ஒரு இளைஞன் எதிர்கொள்ளும் வலிகளை பேசும் குறுநாவல் மூலமாக கவனத்தைப் பெற்றவர். தொடர் வாசிப்பு மற்றும் எழுத்து என இலக்கிய தளத்தில் செயல்பட்டு வந்த இவர், தனது அடுத்தடுத்த நாவல்களை எழுதும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.

இதனிடையே நிஜந்தனின் சிறு வயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக சுமார் 12 ஆண்டுகளாக தற்கொலை எண்ணத்தை அதிகம் தூண்டும் ‘ஹாலோசினேசன்’ என்ற மனசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு, தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்றிரவு கோவை அரசு மருத்துவமனையில் நிஜந்தன் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிஜந்தன்
நிஜந்தன்

இது குறித்து அவரது நெருங்கிய நண்பர்களிடம் பேசிய போது, ‘’ ஹலோசினேசன் என்ற மனசிதைவு தற்கொலை எண்ணத்தை அதிகமாக தூண்டும். அதனால் நிஜந்தனின் காதுக்குள் தற்கொலை செய்துகொள் என்ற குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். இதற்காக அவர் தொடர் சிகிச்சை எடுத்த நிலையில், அவரது இளவயது வாழ்க்கை பெரும்பாலும் மருத்துவமனைகளிலும், மருந்து வாசங்களுடனும் கழித்தன. பல இடங்களில் மருத்துவ சிகிச்சை எடுத்தும் பயனில்லை.

இந்த மன வாதைகளிலிருந்து தீவிரமான வாசிப்பு மற்றும் எழுத்தின் மூலம் வெளியே வர முடியும் என நம்பியிருந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கமாக சாப்பிடும் மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு, படுத்தவரால் மீண்டும் எழ முடியவில்லை. அவருக்கு சுய நினைவு திரும்பாததால், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்தார். பல ஆண்டுகளாக தொடர்ந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்ததால் கிட்னி பாதிக்கப்பட்டதே அவரது உயிரிழப்பிற்குக் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்” என்றனர். எழுத்தாளர் நிஜந்தனின் இளவயது மரணம் தமிழ் இலக்கிய உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் பெஸ்ட் சிட்டி, பெரிய குயிலி ரோடு, செட்டிபாளையம் என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நிஜந்தனின் இறுதிமரியாதை இன்று பிற்பகல் நஞ்சுண்டாபுரம் மின்மயானத்தில் நடைபெற உள்ளது.

எங்களுக்கான பெரிய திருப்புமுனையா இந்தக்கண்காட்சி அமைஞ்சிருக்கு - நெகிழும் கவின்கலை மாணவர்கள்

சென்னை கவின்கலைக் கல்லூரியில் துகிலியல் துறையில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களின்படாம் என்ற டெக்ஸ்டைல் கண்காட்சி கடந்த ஒருவாரமாக ஏப்ரல் 1ந்தேதி முதல் 7ந்தேதி வரை கல்லூரி வளாகத்திலேயே நடைபெற்றது. இதில் ... மேலும் பார்க்க

'இந்த சமூகம் பார்க்க மறுக்கிற மனிதர்களை அவங்க ரியல் தன்மையோட காட்டணும்' - ஓவியர் சத்ய பிரியா!

மதுரையைச் சேர்ந்த ஓவியர் சத்ய பிரியா இன்ஸ்டாகிராமில் ‘மேகதூதம்’ என்ற பெயரில் அறியப்படுபவர். இவருடைய உழைக்கும் மக்கள் சார்ந்த ஓவியங்கள் மிக முக்கியமானவை. ஆகவே, இவரின் கலைச் சார்ந்த செயல்பாடுகள் குறித்த... மேலும் பார்க்க

ரூ.167 கோடிக்கு விற்பனையான ராஜா ரவிவர்மா ஓவியம்: இந்தியக் கலை உலகில் புதிய சாதனை!

அது ஒரு விறுவிறுப்பான கலைப்பொருள் ஏலக் கூடம். அனைவரின் பார்வையும் ஒரு குறிப்பிட்ட ஓவியத்தின் மீதுதான் நிலைத்திருந்தது. அது சாதாரண ஓவியம் அல்ல, இந்தியாவின் ஈடு இணையற்ற ஓவியரான ராஜா ரவிவர்மா தனது தூரிகை... மேலும் பார்க்க

சாகித்ய அகாதமி: `இந்த' நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு விருது!

இந்திய மொழிகளில் சிறந்த படைப்புக்காக வழங்கப்படும் உயரிய விருது சாகித்ய அகாடமி. கவிதை, நாவல், சிறுகதை, இலக்​கிய ஆய்வுகள் அடிப்படையில் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.2025-ம் ஆண்டு... மேலும் பார்க்க