செய்திகள் :

RCB vs MI: "விராட் பாயும், சால்ட்டும் தொடங்கிய விதம் தான் எங்களை.."- வெற்றி குறித்து ரஜத் பட்டிதார்

post image

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்12) நடைபெற்ற மும்பை vs பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பாயின்ட்ஸ் டேபிலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

rcb vs mi match
rcb vs mi match

இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய பெங்களூரு அணி கேப்டன் ரஜத் பட்டிதார், "இப்போது நான் மிகவும் அற்புதமாக உணர்கிறேன். நாங்கள் எப்போது மும்பை வந்தாலும், குறிப்பாக இந்த மைதானத்தில் விளையாடும்போது, இங்கிருக்கும் சூழல், ரசிகர்கள் நிறைந்திருக்கிற ஸ்டேடியத்தில் விளையாடுவது ஒரு தனி உணர்வைத் தருகிறது.

ஒவ்வொரு வீரருக்கும் ஒரு தெளிவு இருந்தது என்றுதான் நான் சொல்வேன். விராட் பாயும், சால்ட்டும் இன்னிங்ஸைத் தொடங்கிய விதம் எங்களை முன்னிலையில் கொண்டு சென்றது.

அதன்பிறகு நானும் டிம் டேவிட்டும் ஆடிய கேமியோ ஆட்டம் ஒரு சிறந்த கூட்டு முயற்சி. உண்மையைச் சொல்லப்போனால், எனக்கு சுழற்பந்து வீச்சுதான் பிடிக்கும் என்று மக்கள் சொல்வார்கள். ஆனால் என்னிடம் கேட்டால், எனக்கு வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதுதான் பிடிக்கும் என்று சொல்வேன்.

rcb vs mi match
rcb vs mi match

இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள மிகவும் சாதகமாக இருந்தது. விராட் கோலியின் காயம் பற்றி எனக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை, ஆனால் அவர் இப்போது நலமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன்" என்று பேசியிருந்தார்.

MI vs RCB: "நாங்கள் இன்னும் கூடுதல் ரன்கள் அடித்திருக்க வேண்டும்; ஆனால்..." - ஆட்டநாயகன் பில் சால்ட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின. இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.சிறப்பாக விளையாடிய பில் சால்ட் ஆட்டநாயகன் ... மேலும் பார்க்க

RCB VS MI: "எதுவுமே வேலை செய்யல, இப்படியே போனா வேலைக்கு ஆகாது.!"- ஹர்திக் பாண்டியா வேதனை

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 12) விறுவிறுப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. பந்துவீச்சில் அதிக ரன்களை வாரி வழங்கிய மும்பை அணி, இலக்கை எட்ட முடிய... மேலும் பார்க்க

"220 ரன்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு மேட்டரே இல்லை!" – SRH பந்துவீச்சை சிதறடித்த பஞ்சாப் கிங்ஸ்

போட்டியில் இன்று (ஏப்ரல் 11) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள்மோதின. தோல்வியே காணாத பஞ்சாப் அணி தனது கோட்டையில் ஹைதராபாத்தின் அதிரடியைச் சமாளித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் ஒரு இமாலய... மேலும் பார்க்க

CSK: "எங்கள் அணியின் மீது எழும் விமர்சனங்கள் நியாயமானதுதான்.!"- ஃபிளெமிங் என்ன சொல்கிறார்?

2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான தொடக்கத்தைச் சந்தித்திருக்கிறது. விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் தோல்வியைச் சந்திருக்கிறது. ஒரு வெற்றி கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் 0 பு... மேலும் பார்க்க

RR vs RCB: "களத்தில் நான் பந்துவீச்சாளர்களை கவனிக்க மாட்டேன், மாறாக.!"- சூர்யவன்ஷி சொல்லும் சீக்ரெட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.10) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் ராஜஸ்தான் அணி பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றி... மேலும் பார்க்க

RR Vs RCB: "வைபவ் பவர்பிளேயில் விளையாடிய விதம் தான்.!"- தோல்வி குறித்து கேப்டன் ரஜத் பட்டிதார்

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 10) கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இரு அணிகள் மோதியதால், ரசிக... மேலும் பார்க்க