செய்திகள் :

MI vs RCB: "நாங்கள் இன்னும் கூடுதல் ரன்கள் அடித்திருக்க வேண்டும்; ஆனால்..." - ஆட்டநாயகன் பில் சால்ட்

post image

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின.

இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

சிறப்பாக விளையாடிய பில் சால்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

rcb vs mi match
rcb vs mi match

விருது வென்ற பிறகு பேசிய அவர், "கிரிக்கெட்டில் சில நேரங்களில் அதீத மகிழ்ச்சியும், பல நேரங்களில் பின்னடைவுகளும் இருக்கும்.

இவை இரண்டையும் நாம் தலைக்கு ஏற்றிக்கொள்ள கூடாது. முடிந்தவரை மனநிலையைச் சமமாக வைத்திருக்க வேண்டும்.

இன்று களமிறங்கி எனது அணிக்காகச் சிறந்த பங்களிப்பை அளித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த மைதானங்கள் (பெங்களூரு) சில பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமானவை அல்ல, எனவே எதிரணியைத் தொடர்ந்து அட்டாக் செய்ய வேண்டும் என்ற மனநிலையை வைத்திருக்க வேண்டும்.

அதே சமயம், ஒரு வீரராக நமது பலத்தை மறந்துவிடக் கூடாது. போட்டியை வென்று கொடுப்பவராக இருப்பதுதான் முக்கியம்.

ஒவ்வொரு போட்டியிலும் என்னால் ரன் எடுக்க முடியாது என்று எனக்குத் தெரியும், அது யாராலும் முடியாது.

rcb vs mi match
rcb vs mi match

ஆனால், விளையாடும்போது ஆட்டத்தில் எவ்வளவு தாக்கத்தை (impact) ஏற்படுத்த முடியுமோ, அந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

உண்மையைச் சொல்லப்போனால் நேற்றையப் போட்டியில் நாங்கள் இன்னும் கூடுதல் ரன்கள் எடுத்திருக்க வேண்டும்.

எங்களது இன்னிங்ஸின் இரண்டாவது 10 ஓவர்களில், அவர்கள் சில நேரங்களில் எங்களை நன்றாகக் கட்டுப்படுத்தினார்கள்" என்று பேசியிருக்கிறார்.

RCB vs MI: "விராட் பாயும், சால்ட்டும் தொடங்கிய விதம் தான் எங்களை.."- வெற்றி குறித்து ரஜத் பட்டிதார்

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்12) நடைபெற்ற மும்பை vs பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பாயின்ட்ஸ் டேபிலில் மூன்றாவது இடத்... மேலும் பார்க்க

RCB VS MI: "எதுவுமே வேலை செய்யல, இப்படியே போனா வேலைக்கு ஆகாது.!"- ஹர்திக் பாண்டியா வேதனை

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 12) விறுவிறுப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. பந்துவீச்சில் அதிக ரன்களை வாரி வழங்கிய மும்பை அணி, இலக்கை எட்ட முடிய... மேலும் பார்க்க

"220 ரன்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு மேட்டரே இல்லை!" – SRH பந்துவீச்சை சிதறடித்த பஞ்சாப் கிங்ஸ்

போட்டியில் இன்று (ஏப்ரல் 11) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள்மோதின. தோல்வியே காணாத பஞ்சாப் அணி தனது கோட்டையில் ஹைதராபாத்தின் அதிரடியைச் சமாளித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் ஒரு இமாலய... மேலும் பார்க்க

CSK: "எங்கள் அணியின் மீது எழும் விமர்சனங்கள் நியாயமானதுதான்.!"- ஃபிளெமிங் என்ன சொல்கிறார்?

2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான தொடக்கத்தைச் சந்தித்திருக்கிறது. விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் தோல்வியைச் சந்திருக்கிறது. ஒரு வெற்றி கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் 0 பு... மேலும் பார்க்க

RR vs RCB: "களத்தில் நான் பந்துவீச்சாளர்களை கவனிக்க மாட்டேன், மாறாக.!"- சூர்யவன்ஷி சொல்லும் சீக்ரெட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.10) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் ராஜஸ்தான் அணி பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றி... மேலும் பார்க்க

RR Vs RCB: "வைபவ் பவர்பிளேயில் விளையாடிய விதம் தான்.!"- தோல்வி குறித்து கேப்டன் ரஜத் பட்டிதார்

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 10) கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இரு அணிகள் மோதியதால், ரசிக... மேலும் பார்க்க