செய்திகள் :

NRI Corner - வரிக்கு பயந்து முதலீடு செய்யாமல் இருப்பது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு சரியா?

post image

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ( NRI - Non-Resident Indian) மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்போது எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்கிற கேள்விக்கான பதிலை அவசியம் தெரிந்துகொள்ள நினைப்பார்கள்.

காரணம், முதலீட்டாளர்களுக்கு லாபமாகக் கிடைக்கும் பணத்தில் கணிசமான பங்கு வரி கட்டுவதற்கே போய்விட்டால், முதலீடு செய்து என்ன பயன் என்பது அவர்கள் எழுப்பும் கேள்வியாக இருக்கிறது. இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ளும் முன் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எவ்வளவு கட்ட வேண்டும் என்பதை பார்ப்போம்.

debt

கடன் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்கள்...

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இருந்து வரும் லாபத்துக்கு கடன் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்களில் ஒரு மாதிரியாகவும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால், அதற்கு வேறு விதமாகவும் வரி விதிக்கப்படுகிறது. எனவே, முதலில் கடன் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்களில் வரி விதிப்பைப் பார்த்துவிடுவோம்.

உங்கள் பணத்தை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து, ஆண்டுக்கு 7% - 8% வரை லாபம் தருகிற கடன் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்தக் கடன் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்களின் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு 30% வரி கட்ட வேண்டும்.

MF Equity Funds

பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்கள்...

அடுத்து, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பற்றி பார்ப்போம். இதில் இரண்டு வகையில் வரி விதிக்கப்படும். ஒன்று, குறுகிய கால ஆதாய வரி (Short Term Capital Gain - STCG); மற்றொன்று, நீண்ட கால ஆதாய வரி (Long Term Capital Gain -LTCG).

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்து, ஒரே ஆண்டுக்குள் முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுத்தால், 1.25 ரூபாய் லாபத்துக்கு எந்த வரியும் கட்ட வேண்டியதில்லை. 1.25 லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைக்கும் லாபத்துக்கு 20% குறுகிய கால மூலதன ஆதாய வரியாகக் கட்ட வேண்டும்.

உதாரணமாக, நீங்கள் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள். ஓராண்டுக்குள் இது 12 லட்சம் ரூபாயாக மாறுகிறது. நீங்கள் மொத்தமாகப் பணத்தைத் திரும்ப எடுக்க நினைக்கிறீர்கள். உங்களுக்குக் கிடைக்கும் லாபம் 2 லட்சத்தில் 1.25 லட்சம் ரூபாய்க்கு எந்த வரியும் கட்டத் தேவை இல்லை. மீதமுள்ள 75 ஆயிரம் ரூபாய்க்கு 20% என 15,000 ரூபாயை நீங்கள் வரியாகக் கட்ட வேண்டும்.

ஒரு வேளை, நீங்கள் முதலீடு செய்த பணத்தை 12 மாதங்களுக்குப் பிறகு எடுத்தால், நீண்ட கால மூலதன ஆதாய வரியாக 12.5% வரி கட்ட வேண்டும். உதாரணமாக, நீங்கள் 10 லட்சம் ரூபாயை பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறீர்கள். ஓராண்டுக்கு மேற்பட்ட காலத்தில் அது 12 லட்சம் ரூபாயாக மாறிவிடுகிறது. அப்போது நீங்கள் மொத்த பணத்தையும் திரும்ப எடுக்க நினைத்தால், 1.25 ரூபாய் லாபத்துக்கு எந்த வரியும் கட்ட வேண்டியதில்லை. 1.25 லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைக்கும் லாபத்துக்கு 12.5% என 9375 ரூபாய் நீண்ட கால மூலதன ஆதாய வரியாகக் கட்ட வேண்டும்.

இந்த வரி அதிகமா?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு விதிக்கப்படும் வரி மிக மிக அதிகம் என்று வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் நினைக்கத் தேவை இல்லை. காரணம், ரியல் எஸ்டேட் முதலீடாக இருந்தாலும், தங்கத்தில் செய்யப்படும் முதலீடாக இருந்தாலும் சரி அல்லது பங்குச் சந்தை, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செய்யப்படும் முதலீடாக இருந்தாலும் சரி, நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு 12.5% வரி விதிக்கப்படுகிறது.

ரியல் எஸ்டேட் அல்லது தங்கத்தில் செய்யப்படும் முதலீடு 50% ரொக்கமாகவும் 50% கணக்கிலும் காட்டப்படுவதால், அதற்குக் குறைவான வரியை மட்டுமே நாம் கட்டுவது போன்ற ஒரு உணர்வு நமக்கு வருகிறது. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடானது முழுக்கவுமே கணக்கில் வந்துவிடுவதால், அதற்குக் கிடைக்கும் லாபம் முழுவதுக்குமே நாம் வரி கட்டுவது போன்ற உணர்வு நமக்கு வருகிறது.

மேலும், ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் போன்ற முதலீடுகள் பணவீக்கத்தைவிட ஒன்றிரண்டு சதவிகிதம் அளவுக்கே லாபம் தருபவையாக உள்ளன. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு 10 ஆண்டு என நீண்ட காலத்தில் ஆண்டுதோறும் 12% வரை லாபம் தரத்தக்கதாக உள்ளன. இதில் வரியாக 1% அல்லது 2% குறைந்தாலும், பணவீக்கத்தைவிட 3% அல்லது 4% மேல் லாபம் தரத்தக்கதாக உள்ளது.

இந்தியா போன்ற வளரும் நிலையில் உள்ள பொருளாதாரமானது அடுத்த 20 ஆண்டுகளுக்கு நல்ல வளர்ச்சியைக் காணும் என்பதால், இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளில் தாராளமாக முதலீடு செய்யலாம். அதிகம் வரி கட்டவேண்டி இருக்கிறதே என்று கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை!

லாபம் டீமுடன் நேரடியாகப் பேசுங்கள்...

நேரடியாகப் பேச...

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது தொடர்பாக முதலீட்டு ஆலோசனை பெற நினைத்தால், பின்வரும் காலண்டி லிங்க்கை கிளிக் செய்து தங்கள் பெயரை உடனடியாகப் பதிவு செய்துகொள்ளலாம். NRI Calendly - https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

இது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு சிறப்பு ஏற்பாடு என்பதால், அவர்கள் மட்டுமே இந்த காலண்டி லிங்க்கில் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.

வாட்ஸ் அப் குரூப்...

இது போன்ற சுவாரஸ்யமான/முக்கிய முதலீடு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய, லாபம் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள் - https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o

மிஸ்டுகால்...

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விருப்பமா? இன்றே AMFI பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்'-ஐத் தொர்புகொள்ளுங்கள் - மிஸ்டு கால்: 9600296001

குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் திட்ட ஆவணங்களைப் படித்து பார்ப்பது அவசியம்.

11 நாளில் பணம் டபுளாகும்; மோசடி கும்பலிடம் 12 கோடி இழந்த டாக்டர்; அவசியம் அறிய வேண்டிய CAGR

யாரெல்லாம் அதிகப் பணம் சம்பாதிக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் பணம் செயல்படும் விதம் பற்றி ஓரளவுக்கே தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்கிற உண்மை மீண்டும் மீண்டும் நிருபிக்கிற மாதிரி பல சம்பவங்கள் நடந்துகொண்... மேலும் பார்க்க

வாழ்நாள் முழுவதும் உழைக்கப் போகிறீர்களா? உண்மையான செல்வத்தை உருவாக்கும் 6 ரகசியங்கள்!

பணக்காரராக இருப்பதற்கும், உண்மையான செல்வந்தராக (Wealthy) இருப்பதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. 'The Psychology of Money' புத்தகத்தின் ஆசிரியர் மார்கன் ஹௌசல் சொல்வது போல, "நீங்கள் செலவு செய்த பணம்... மேலும் பார்க்க

NRI Corner - 5: இந்த `3'-ம் இல்லாமல் எதில் முதலீடு செய்தும் எந்தப் பயனும் இல்லை... அந்த `3' என்ன?

சமீபத்தில் என்னைச் சந்திக்க 'லாபம்' அலுவலகத்திற்கு வந்திருந்தார் அஜ்மல். குவைத்தில் இருந்து ஒரு வார அவசரப் பயணத்தில் சென்னைக்கு வந்திருந்தவர், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு என்னை சந்திக்க வந... மேலும் பார்க்க

கிரெடிட் கார்டை பயன்படுத்தி கெத்தா, சூப்பரா, ஓஹோனு இருக்கணுமா? #CreditCard A-Z | பணம் வளர்ப்போம்

நாள் 5நேற்றைய அத்தியாயத்தில் எப்படி பாசிட்டிவ் மற்றும் பாதுகாப்பைப் பார்த்தோமோ... அது மாதிரி இன்று கிரெடிட் கார்டிற்கு இருக்கும் செக்குகளைப் பார்த்துவிடுவோம். கிரெடிட் கார்டு பற்றி நமக்கு விளக்குபவர் ... மேலும் பார்க்க

NRI-களே... ஊர் திரும்பியதும் உங்கள் மாதாந்திர பென்ஷனுக்கு என்ன கேரண்டி?!

வெளிநாடுகளில் குடும்பத்தைப் பிரிந்து, இரவு பகலாக உழைத்துச் சம்பாதிக்கிறீர்கள். இன்று கை நிறையச் சம்பளம் வரலாம். ஆனால், ரிட்டயர்மென்ட் முடிந்து சொந்த ஊருக்குத் திரும்பும்போது, ஒவ்வொரு மாதமும் குடும்பச்... மேலும் பார்க்க

'ஒரு லிட்டர் பெட்ரோல் 265 ரூபாய்' - அதிரவைக்கும் புள்ளிவிவரம்! - எப்படிச் சமாளிக்கப் போகிறோம்?

''அவனுக்கென்னப்பா, கோடீஸ்வரன். எந்தக் கவலையும் இல்லாம ஜாலியா இருக்கான்'' என்று சில நண்பர்களைப் பற்றி சிலர் கொஞ்சம் பொறாமையுடன் பேசுவதைக் கேட்டு இருப்பீர்கள். கோடீஸ்வரன் என்பது இன்றைக்கு ஒரு கெத்து ஃபீ... மேலும் பார்க்க