செய்திகள் :

கரூர்: "சட்டை அவரோடது தான்; ஆனால், மாப்பிள்ளை அவரில்லை.!" - திமுக வேட்பாளரை கிண்டல் செய்த அண்ணாமலை

post image

கரூர், வெங்கமேடு பகுதியில் அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.

இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பிரச்சார வாகனத்தில் நின்றபடி பேசிய அண்ணாமலை, " கரூரில் தனி சரித்திரம் படைத்து வருகிறோம். கடந்த 5 ஆண்டுகள் அண்ணன் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல.

கரூரில் அண்ணாமலை பிரச்சாரம்
கரூரில் அண்ணாமலை பிரச்சாரம்

அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்று உங்களுக்கு தெரியும். ஆனால், எதிரணி வேட்பாளர் பெயர் தியாகராஜன் என்று கூறுகின்றனர். உண்மையான வேட்பாளர் அவரில்லை. சட்டை அவரோடது தான். ஆனால் மாப்பிள்ளை அவரில்லை. என்பது போல உள்ளது.

அவர்களுக்கு புழல் சிறையில் தனி அறை தயாராக உள்ளது. ஆட்சி மாற்றம் வந்த பிறகு அரசியலுக்கு எதற்கு வந்தோம் என்று செந்தில் பாலாஜி வருத்தப்படுவார். இந்த முறை வெறும் 441 நாள் மட்டும் கிடையாது.

'புதுசா வரவங்களுக்கு (விஜய்) ஓட்டு போடலாமான்னு இளைஞர்கள் என்னிடம் கேட்குறாங்க'. 1 கோடியே 23 லட்சம் பேர் 29 வயதுக்கு குறைவான வாக்காளர்கள் இந்த தேர்தலில் ஓட்டு போட உள்ளனர்.

உங்களுக்கான கட்சி NDA கூட்டணி கட்சிகள்தான். விளையாட்டாக இந்த தேர்தலை இங்கி, பிங்கி, பாங்கி தேர்தலாக மாற்றி விடாதீர்கள். இனாம் நில பிரச்சனை நோட்டீஸ் கொடுத்ததற்குதான், பெண்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

அண்ணாமலை
அண்ணாமலை

நாளை கரூரில் இனாம் நில பிரச்னை தொடர்பான பொதுக்கூட்டம் அண்ணன் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற உள்ளது.

நானும் இது குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்ய உள்ளேன். தெம்பு, திராணி, தைரியம் உள்ளவர்கள், கோவைக்கு சென்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கிறேன்" என்றார்.

“முதல்வர் வாகனம் முன்னே... செய்தி துறை வாகனம் பின்னே!” - செய்தி துறைக்கு செக் வைக்கும் அ.தி.மு.க!

தமிழக முதல்வரின் பிரசாரத்திற்கு தமிழக அரசின் ஊழியர்களையும், செய்தி துறையையும் தி.மு.க தரப்பு தங்களுக்காக பயன்படுத்தி வருகிறது. உடனடியாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க பரபரப்பு ப... மேலும் பார்க்க

`இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்' - பழைய நினைவில் பேசிய செங்கோட்டையன்; சட்டென சுதாரிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, அக்கட்சியின் கோபிசெட்டிபாளையம் தொகுதி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார் அ.தி.மு.க - வின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன். ஈரோடு மாவட்டம், பவான... மேலும் பார்க்க

பிரசாரத்துக்கு விடுமுறை எடுக்கும் விஜய் - கவலையில் தவெக வேட்பாளர்கள்?

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய இன்னும் சரியாக 10 நாட்களே இருக்கிறது. எல்லா கட்சித் தலைவர்களும் அதிகமான தொகுதிகளை கவர் செய்ய சுற்றி சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டு... மேலும் பார்க்க

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள... மேலும் பார்க்க

"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவ... மேலும் பார்க்க

முழுமையாக திறக்கப்படாத ஹார்முஸ் ஜலசந்தி - ஈரான் 'இதை' மறந்ததே காரணம்!

மூன்று நாள்களாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது.இருந்தும் ஈரான் அனுமதித்த கப்பல்கள் மட்டும் ஹார்முஸைக் கடந்து வருகிறது‌.ஆனால், அந்தக் கப்பல்களையும் வழக்கமான பாதையில் அல்லாமல், ஹார்முஸிலேயே வேறு பா... மேலும் பார்க்க