செய்திகள் :

Investment: என்ன பண்ணனும்னு ஓரளவு தெரியும்; ஆனா பண்ணல - இது நீங்களா?

post image

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பெருக்கெடுத்து ஓடிய காவிரி நதியின் குறுக்கே சோழ மன்னன் கரிகாலன் கல்லணையைக் காட்டினார். வெள்ளநீரைத் தடுத்து ஒரு மாபெரும் அணையைக் கட்டும் தொழில்நுட்ப அறிவும், புத்திசாலித்தனமும் அவரிடம் நிறைவாகவே இருந்தது.

கரிகாலன் அணையைக் கட்டவில்லை என்றால் அதுவொரு மாபெரும் ஐடியாவாகவே இருந்திருக்கும். ஆனால் நதியில் இறங்கி அவர் காட்டிய அந்தச் செயல்திறன் (Action) தான் இன்று வரை அவரை வரலாற்றில் நிலைக்கச் செய்துள்ளது. கல்லணை இன்று பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உணவு வழங்கும் ஆதாரமாகவும் விளங்குகிறது.

இதை ஒரு வரலாற்றுf; கதையாக மட்டும் நாம் பார்க்கக் கூடாது, இது நம் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்குமான ஒரு மாபெரும் பாடம். நமது தனிப்பட்ட நிதி நிலைமையும் (Personal Finance), எந்த நேரத்திலும் கட்டுக்கடங்காமல் ஓடும் அந்த ஆக்ரோஷமான காவிரி நதியைப் போன்றதுதான்.

பணவீக்கம் (Inflation) என்ற வெள்ளம் நம்மைச் சுற்றிலும் மிகவும் வேகமாகப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டே இருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்தி நமது குடும்பத்தின் எதிர்காலத்தைக் காக்க வேண்டிய முழுப் பொறுப்பும் நமது கைகளில் மட்டுமே உள்ளது.

நாம் வேலைபார்க்கும் அலுவலகத்திலும் நமது தினசரி வாழ்க்கையிலும் காட்டும் சுறுசுறுப்பை, சொந்தப் பணத்தை நிர்வகிப்பதில் நாம் காட்டுவதே இல்லை. அடுத்தவர்களின் கனவை நனவாக்க உழைக்கும் நாம், சொந்தக் குடும்பத்தின் எதிர்கால நிதிப் பாதுகாப்பைச் சாதாரணமாகக் கோட்டைவிட்டு விடுகிறோம்.

முதலீடு
முதலீடு

சுய நிதி நிர்வாகம் & முதலீட்டைப் பொறுத்தவரை இன்று நம்மிடையே பல்வேறு Financial Products கொட்டிக்கிடக்கின்றன. நம்மில் பலரும் மியூச்சுவல் ஃபண்ட், ரிடையர்மெண்ட் பிளானிங், காம்பவுண்டிங் (Compounding) என்று அன்றாடம் பல செய்திகளைப் பற்றிக் கேட்டும் வருகிறோம்.

ஆனால், இவற்றைப் பயன்படுத்தி எத்தனை பேர் 'முறையான முதலீட்டை'த் தொடங்கியிருக்கிறோம் என்று மனசாட்சியைக் கேட்டால், பலரின் பதில் மௌனமாகவே இருக்கும். கொட்டிக்கிடக்கும் செய்திகள் நம்மைத் திக்குமுக்காடச் செய்கின்றன. 'நாளை பார்த்துக்கொள்ளலாம்' என்று நாம் தொடர்ந்து தள்ளிப்போடும் அந்தத் தயக்கம் நமது மிகப்பெரிய நிதி எதிரியாக மாறியிருக்கிறது.

ஒரு சிறப்பான ஐடியா மூளையில் உதிக்கவும் வேண்டும், அதை உடனடியாகச் செயல்படுத்தும் வேகமும் நமக்கு வேண்டும். வரைபடத்தை வைத்துக்கொண்டு பயணத்தைத் தொடங்கினால் மட்டுமே, நாம் பாதுகாப்பாகச் சேர வேண்டிய அந்த நிதிச் சுதந்திரம் என்ற இலக்கை அடைய முடியும்.

முதலீடு செய்யச் சரியான நேரம் வரும் என்று காத்திருப்பதிலேயே, காம்பவுண்டிங் தரக்கூடிய பல லட்ச ரூபாய் லாபத்தை நாம் ஒவ்வொரு நாளும் நிரந்தரமாக இழந்து வருகிறோம். நீங்கள் இனியும் தாமதிக்காமல் முதலீட்டைத் தொடங்கி விடுங்கள், பிறகு அதனை ரிவ்யூ செய்துகொள்ளலாம்.

Path to financial Freedom

ஆனால் அதற்கு முன் இன்னும் தெளிவு வேண்டுமா? நீங்க முதலீட்டில் ஆக்ஷன் எடுக்க வேண்டும் என்று நினைப்பவரா? லாபம் வழங்கும் ஆன்லைன் ஒர்க் ஷாப்பில் கலந்துகொள்ளுங்கள்:

பிசினஸ் ஓனர்களுக்கான 3 பண விதிகள்: கையிருப்பு. பணப்புழக்கம். சேமிப்பு

யாருக்கு: பிசினஸ் ஓனர்கள்

நாள் & நேரம்: ஏப்ரல் 15, புதன் | இரவு 7:00 மணி (IST)

இன்றே பதிவு செய்ய

செல்வத்தைப் பெருக்குவது எப்படி? திட்டங்கள் + யுக்திகள்

யாருக்கு: NRI சிறப்பு நிகழ்ச்சி

நாள் & நேரம்: ஏப்ரல் 18, சனி | மதியம் 12:30 மணி (IST)

இன்றே பதிவு செய்ய

இனிமையான ஓய்வுக்காலம் - மாதாந்திர பென்ஷன் வழிகள்

யாருக்கு: 50+ வயதினருக்கான சிறப்பு நிகழ்ச்சி

நாள் & நேரம்: ஏப்ரல் 19, ஞாயிறு | காலை 11:00 மணி (IST)

இன்றே பதிவு செய்ய

அம்மா சேர்த்து வெச்ச கடுகு டப்பா காசு தான் இப்போது 'இது': வாழ்க்கை நிதி பிளானிங்| பணம் வளர்ப்போம்

பணம் வளர்ப்போம் - ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பது தான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும். அப்படி இ... மேலும் பார்க்க

NRI Corner - வரிக்கு பயந்து முதலீடு செய்யாமல் இருப்பது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு சரியா?

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ( NRI - Non-Resident Indian) மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்போது எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்கிற கேள்விக்கான பதிலை அவசியம் தெரிந்துகொள்ள நினைப்பார்க... மேலும் பார்க்க

11 நாளில் பணம் டபுளாகும்; மோசடி கும்பலிடம் 12 கோடி இழந்த டாக்டர்; அவசியம் அறிய வேண்டிய CAGR

யாரெல்லாம் அதிகப் பணம் சம்பாதிக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் பணம் செயல்படும் விதம் பற்றி ஓரளவுக்கே தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்கிற உண்மை மீண்டும் மீண்டும் நிருபிக்கிற மாதிரி பல சம்பவங்கள் நடந்துகொண்... மேலும் பார்க்க

வாழ்நாள் முழுவதும் உழைக்கப் போகிறீர்களா? உண்மையான செல்வத்தை உருவாக்கும் 6 ரகசியங்கள்!

பணக்காரராக இருப்பதற்கும், உண்மையான செல்வந்தராக (Wealthy) இருப்பதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. 'The Psychology of Money' புத்தகத்தின் ஆசிரியர் மார்கன் ஹௌசல் சொல்வது போல, "நீங்கள் செலவு செய்த பணம்... மேலும் பார்க்க

NRI Corner - 5: இந்த `3'-ம் இல்லாமல் எதில் முதலீடு செய்தும் எந்தப் பயனும் இல்லை... அந்த `3' என்ன?

சமீபத்தில் என்னைச் சந்திக்க 'லாபம்' அலுவலகத்திற்கு வந்திருந்தார் அஜ்மல். குவைத்தில் இருந்து ஒரு வார அவசரப் பயணத்தில் சென்னைக்கு வந்திருந்தவர், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு என்னை சந்திக்க வந... மேலும் பார்க்க

கிரெடிட் கார்டை பயன்படுத்தி கெத்தா, சூப்பரா, ஓஹோனு இருக்கணுமா? #CreditCard A-Z | பணம் வளர்ப்போம்

நாள் 5நேற்றைய அத்தியாயத்தில் எப்படி பாசிட்டிவ் மற்றும் பாதுகாப்பைப் பார்த்தோமோ... அது மாதிரி இன்று கிரெடிட் கார்டிற்கு இருக்கும் செக்குகளைப் பார்த்துவிடுவோம். கிரெடிட் கார்டு பற்றி நமக்கு விளக்குபவர் ... மேலும் பார்க்க