செய்திகள் :

'துருக்கியின் அழகான பெண் எனக்கு மனைவியாக வேண்டும்' - வரம்பு மீறிய உகாண்டா அதிபர் மகன்

post image

துருக்கி மற்றும் உகாண்டா உறவில் தற்போது விரிசல் விழுந்திருக்கிறது.

இதையொட்டி துருக்கி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை உகாண்டாவின் பாதுகாப்புப் படைகளின் தலைவர் முஹூசி கைனெருகபா அடுக்கியுள்ளார்.

இவர் உகாண்டா பாதுகாப்புப் படைகளின் தலைவர் மட்டுமல்ல... உகாண்டாவின் அதிபர் யோவேரி முசெவேனியின் மகனும் கூட.

துருக்கி தங்கள் மூலம் பலன்களைப் பெற்றுக்கொண்டு, அதற்கான எந்த அங்கீகாரத்தைத் தரவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். மேலும், இவர்களுக்கு துருக்கியிடம் இருந்து வரும் நிதியும் இன்னும் வரவில்லை என்று கூறுகிறார்.

முஹூசி கைனெருகபா பதிவுகள்
முஹூசி கைனெருகபா பதிவுகள்

அவை 30 நாள்களுக்குள் வந்து சேரவில்லை என்றால், உகாண்டாவில் உள்ள துருக்கி தூதரகம் மூடப்படும் என்றும், இரு நாடுகளுக்கும் உள்ள உறவு முறிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவர் துருக்கி தர வேண்டிய தொகை என்று 1 பில்லியன் டாலரைக் குறிப்பிடுகிறார். இத்துடன் துருக்கியின் மிக அழகான பெண் எனக்கு மனைவியாக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இவரது இந்தப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

'எப்படி ஹாலோகிராம் ஐடியாவை பிடிச்சீங்க?' - வாழ்த்திய தலைமை; குஷியில் கும்பகோணம் தவெக வேட்பாளர்!

தவெக சார்பில் கும்பகோணம் தொகுதியில் போட்டியிடும் வினோத், ஹாலோகிராம் தொழில்நுட்பத்தில் விஜய்யை தத்ரூபமாக நேரில் கொண்டு வந்ததை போல செய்திருந்த பிரசாரம், இணையத்தில் பயங்கர வைரலாகியிருக்கிறது.Vinothவினோத்... மேலும் பார்க்க

’உங்கள் நம்பிக்கையே என் மருந்து’ - உடல்நிலை குறித்த அப்டேட் தந்த வானதி சீனிவாசன்

கோவை வடக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு, தேர்தல் பரப்புரையின் இடையே திடீரென கால் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.... மேலும் பார்க்க

``மத்திய அரசை விமர்சிப்பதில் நேரத்தை வீணடிக்காதீங்க" - முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் பதில்

"நெல் சாகுபடிக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டாம் என்று தமிழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது,” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது திசை திருப்பும் செயல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் க... மேலும் பார்க்க

`எங்கள் ஆதரவு இவர்களுக்குத்தான்!' - Gen Z தலைமுறை வாக்காளர்களுடன் ஓர் உரையாடல்! | TN Polls 2026

தமிழகத்தில் தேர்தல் நாள் நெருங்க நெருங்க, பிரசாரக் களம் சூடுபிடித்து வருகிறது. தமிழக வாக்காளர்களில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் பேர் இளம் வாக்காளர்கள் (20–21 வயது). அதிலும் முதல் முறை வாக்காளர்களின் எண்ண... மேலும் பார்க்க

எத்தனை நாள்களுக்கு டாஸ்மாக் மூடப்படுகிறது? தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி வெளியான அறிவிப்பு

வருகிற 23-ம் தேதி, தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி தமிழ்நாட்டில் ரூ.50,000-க்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்துச் செல்லக்கூடாது என்பதுபோல பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய தேர்தல்... மேலும் பார்க்க