செய்திகள் :

'பழைய கோச்; எடுபடாத ஸ்டைல்; க்ளிக் ஆகாத ஓப்பனிங் கூட்டணி!' - CSKவின் சொதப்பலுக்கான அந்த 3 காரணங்கள்!

post image

சென்னை அணி நடப்பு சீசனிலும் மிக மோசமாக ஆடிக்கொண்டிருக்கிறது. இதுவரை ஆடியிருக்கும் 8 போட்டிகளில் 3 போட்டிகளை மட்டுமே வென்றிருக்கிறது. சென்னை அணி ஆடும் விதத்தை பார்க்கையில் 7 அல்லது 8 போட்டிகளை வென்று ப்ளே ஆப்ஸூக்கு முன்னேறும் நம்பிக்கையும் பெரிதாக இல்லை.

CSK
சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்த சீசனிலும் சென்னை அணி ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை இழக்குமெனில், தொடர்ச்சியாக 3 சீசன்களில் ப்ளே ஆப்ஸூக்கு தகுதிபெறவில்லை எனும் சூழல் ஏற்படும். இத்தகு மோசமான நிலைக்கு யார் காரணம்?

பழமைவாத அணுகுமுறை:

சென்னை அணியின் அணுகுமுறையே கொரோனாவுக்கு முந்தைய காலக்கட்டத்துடையதாக இருக்கிறது. முதல் பந்திலிருந்தே அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடுவதுதான் நவீன டி20 பாணி. ஆனால், சென்னை அணி பாணிக்கு மாறவே இல்லை. இன்னமும் முதல் சில ஓவர்களை பார்த்து ஆடுவது, மிடில் ஓவர்களில் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது, ஒரு பேட்டர் அதிரடியாக ஆடினால் இன்னொரு பேட்டர் சிங்கிள் தட்டி கொடுப்பது என முழுக்க முழுக்க காலாவதியான அணுகுமுறையையே கொண்டிருக்கிறது.

Flemming
Flemming

சென்னை அணியின் 'Think tank' உம் முழுக்க முழுக்க மரபார்ந்த அணுகுமுறைகளின் மீதே நம்பிக்கைக் கொண்டிருக்கிறது. 18 வருடத்திற்கும் மேலாக ப்ளெம்மிங்தான் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்தார். ப்ளெம்மிங்கின் வழிகாட்டுதலில் சென்னை அணி 5 கோப்பைகளை வென்றதுதான். ஆனால், ப்ளெம்மிங் தோனிக்கான ஆள். தோனிதான் சென்னை அணியின் மாஸ்டர். அவர் வைத்ததுதான் அங்கே சட்டம். அப்படியிருக்க அவருக்கு குறுக்கே நிற்காமல் ஒத்திசைந்து செல்லும் குணாதிசயம் கொண்டவராக இருந்ததால் மட்டுமே ப்ளெம்மிங் இத்தனை ஆண்டுகளாக சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்தார்.

Stephen Flemming - Dhoni
Stephen Flemming - Dhoni

ஆனால், ப்ளெம்மிங் நிச்சயமாக ருத்துராஜூக்கான ஆள் இல்லை. இளம் அணியை வழிகாட்டுவதற்கான ஆள் இல்லை. சொல்லப்போனால், இளம் வீரர்களைப் பற்றி ப்ளெம்மிங்குக்கு நல்ல மதிப்பீடு இருக்கிறதா என்பதே கேள்விதான். ஆக, அவரின் 'Old School' சிந்தனைகள் சென்னை அணி அட்டாக்கிங் கிரிக்கெட்டை ஆட மாபெரும் பின்னடைவாக இருக்கிறது.

கேப்டன்சி சிக்கல்:

கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு இது மூன்றாவது சீசன். ஆனால், இன்னமும் களத்தில் தன்னுடைய ஆளுமையை ருத்துராஜ் நிரூபிக்கவில்லை. 25 போட்டிகளுக்கு மேல் கேப்டனாக செயல்பட்டு விட்டார். ருத்துராஜின் கேப்டன்சியால் அவர் எடுத்த முடிவுகளால் போட்டியே தலைகீழாக மாறியது என ஒரு போட்டியையும் நம்மால் சொல்ல முடியாது. மாறாக, எக்கச்சக்கமான தவறான முடிவுகளை எடுத்திருக்கிறார்.

ருதுராஜ் கெய்க்வாட்
ருதுராஜ் கெய்க்வாட்

அதில், முதன்மையானது கடந்த சீசனில் அடம்பிடித்து அவர் நம்பர் 3 இல் இறங்கியது. நம்பர் 3 செட்டே ஆகாத போதும் வம்படியாக அங்கே இறங்கினார். கடந்த சீசனில் மிக மோசமாக தோற்றதற்கு அந்த முடிவு முக்கிய காரணமாக அமைந்தது. சொந்த மைதானமான சேப்பாக்கத்தின் பிட்ச்சை கணிக்க முடியவில்லை என்கிறார். சேப்பாக்கத்தில் சென்னையை விட மற்ற அணிகள் சூழலை உணர்ந்து மிகச்சிறப்பாக ஆடிவிட்டு செல்கின்றனர். தோனி மாதிரியான பெரும் சகாப்தம் உடைய வீரரை ரீப்ளேஸ் செய்வது கடினம்தான். ஆனால், கிடைத்த வாய்ப்பில் நன்றாக செயல்படுவதற்காக சிறு அறிகுறியையாவது ருத்துராஜ் காட்டியிருக்க வேண்டும். அந்த இண்டண்ட்டும் உத்வேகமும் கூட ருத்துராஜிடம் இல்லை. சீசனின் தொடக்கத்திலேயே சீசனையே இழந்ததைப் போல பேசிக்கொண்டிருக்கிறார்.

Ruturaj
Ruturaj

தோனி ஜடேஜாவிடம் ஒரு முறை கேப்டன்சியை கொடுத்திருந்தார். 6-7 போட்டிகள் பார்த்துவிட்டு 'தலைமைப் பண்பை ஸ்பூனில் வைத்து ஊட்டி விட முடியாது' எனக் கூறி மீண்டும் தோனியே கேப்டனாகிவிட்டார். ஆனால், ருத்துராஜின் நிலை அப்படியில்லை. இன்னமும் அணி நிர்வாகம் அவரை நம்புகிறது. அந்த நம்பிக்கையை ருத்துராஜ் இப்போது வரை காப்பாற்றவில்லை.

எடுபடாத ஓப்பனிங் கூட்டணி:

சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்ற சீசன்களில் எல்லாம் அணியின் ஓப்பனிங் கூட்டணி மிகச் சிறப்பாக ஆடியிருக்கும். ஓப்பனர்கள் இருவரும் தலா 500+ ரன்களை அடித்திருப்பார்கள். வாட்சன் - ராயுடு, ருத்து - டூப்ளெஸ்சிஸ், ருத்து - கான்வே என சென்னைக்கு எப்போதுமே ஒரு பட்டாசான ஓப்பனிங் கூட்டணி அமைந்துவிடும். கடந்த 3 சீசன்களாக அப்படியொரு காம்பினேஷன் மிஸ்ஸிங்.

Faf
Faf du plessis

இந்த சீசனில் சாம்சன், ருத்துராஜ் ஆளாளுக்கு ஒரு போட்டியில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட்டணியாக இன்னும் எடுபடவே இல்லை. சாம்சனும் ருத்துராஜூம் இணைந்து கூட்டணியாக ஜொலித்தாலே அணியின் பலவீனங்கள் பலவும் மறைந்துவிடும்.

சபாஸ்டியன் சாவே: மாரத்தான் வரலாற்றை மாற்றி எழுதிய நாயகன்! 42 கி.மீ-ஐ 1:59:30 நேரத்தில் கடந்து சாதனை!

மனித உடலின் தாங்கும் திறனுக்கு ஓர் எல்லை உண்டா? 42.195 கிலோமீட்டர் தூரம் கொண்ட மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில், இரண்டு மணி நேரத்திற்குள் பந்தய தூரத்தைக் கடக்க முடியுமா? என்ற நீண்ட காலக் கேள்விக்கு, 2026, ... மேலும் பார்க்க

CSK vs GT: "சென்னையில் சிஎஸ்கே-வை வீழ்த்துவது எளிதல்ல" - வெற்றிக்குப் பின் சுப்மன் கில் பெருமிதம்!

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 26) விறுவிறுப்பான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி பெற்றது. 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி, சாய் சுதர்சனின்... மேலும் பார்க்க

நல்ல முயற்சி ருத்து; ஆனால் மீண்டும் முயற்சிக்காதீர்கள்! - கடுப்பேற்றிய சி.எஸ்.கே; வெறியான ரசிகர்கள்!

மும்பைக்கு எதிராக அவ்வளவு சிறப்பாக வென்ற பிறகு சேப்பாக்கத்தில் சொந்த மண்ணில் சென்னை மிக மோசமாக தோற்றிருக்கிறது. வான்கடேவில் வென்ற பிறகு அதிர்ச்சியடைந்த ப்ளெம்மிங், 'உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லும் ந... மேலும் பார்க்க

'எவ்வளவு அடிச்சாலும் பத்தல; ஒண்ணுமே புரியலங்கய்யா!' - குழம்பிய ராஜஸ்தான்; அடிதடி சன்ரைசர்ஸ்!

"என்னதான் ஆச்சு நம்ம ஐபிஎல்லுக்கு?" - இதுதான் இப்போதிருக்கும் பழைய ஐபிஎல் ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது. ஒரு காலத்தில் 150 ரன்கள் எடுத்தாலே "கெத்தா" டிஃபெண்ட் செய்யலாம் என்று நினைத்த காலம் போய்... மேலும் பார்க்க

'எல்லாத்துக்கும் காரணம் பீல்டிங்தான்!' - தோல்வி குறித்து அக்சர் படேல்!

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 25) ஆட்டத்தில், சிக்ஸர் மழை பொழிந்த டெல்லி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 264 ரன்கள் என்ற இமாலய இலக்கை டெல்லி அணி நிர்ணயித்த போதிலும், பஞ்சாப் வீரர்... மேலும் பார்க்க

'டெல்லியால முடியும்னா எங்களாலயும் முடியும்!' - ரெக்கார்ட் சேஸின் ரகசியம் பகிரும் ஸ்ரேயாஸ்

பஞ்சாப் vs டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி 264 என்ற இமாலய இலக்கை அடிக்க, அதை 19வது ஓவரிலேயே எட்டி பிடித்து சாதனை படைத்துள்ளது ஷ்ரேயா... மேலும் பார்க்க