செய்திகள் :

பிரியாணி... அதிகாலையில் தர்பூசணி; ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு - மும்பையில் அதிர்ச்சி!

post image

மும்பை பைதோனி பகுதியில் வசிக்கும் அப்துல்லா தொகாடியா (40) என்பவரும் அவரின் உறவினர்களும் ஒரே வீட்டில் கூடி விருந்து சாப்பிட்டனர். அதன் பிறகு அவர்கள் தங்களது வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். அதிகாலை 1 மணிக்கு அவர்களில் அப்துல்லா உட்பட 4 பேர் தர்ப்பூசணி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அடுத்த சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனே அவர்கள் உள்ளூர் டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டனர். ஆனாலும் அவர்களுக்கு உடல்நிலை சரியாகவில்லை. இதனால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக ஜெ.ஜெ., மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் முதலில் ஒரு பெண் சிகிச்சை பலனலிக்காமல் இறந்தார்.

அதனைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அவர்கள் இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள் சாப்பிட்ட சாப்பாடு விஷமாகி இருக்கவேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த மற்றவர்கள் முறையே நஸ்ரின் டொகாடியா (35) மற்றும் அவர்களது மகள்களான ஆயிஷா (16), ஜைனப் (13) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் போலீஸில் அளித்துள்ள வாக்குமூலத்தில், அந்தக் குடும்பத்தினர் பிரியாணி சாப்பிட்டதாகவும், பின்னர் இரவில் தர்பூசணி சாப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவர்களது உயிரிழப்புக்கான உண்மையான காரணம் என்னவென்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியாணியும், தர்ப்பூசணியும் ஒரே நேரத்தில் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்து இருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

'அசைவ உணவுக்கு எதிரானவர்கள் அல்ல' - மம்தா புகாருக்கு மீன்குழம்பு சாப்பிட்டு சத்தியம் செய்த பாஜகவினர்

மேற்கு வங்கத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடிகிறது. இத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிடவேண்டும் என்ற தீவிரத்துடன் பா.ஜ.க பிரசாரம் செய்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க ஆ... மேலும் பார்க்க

ராகுல், அகிலேஷ் கொடும்பாவி எரிப்பு; சட்டென பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ-வுக்கு நேர்ந்த விபரீதம்!

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் என்ற இடத்தில் பா.ஜ.கவினர் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் கொடும்பாவியை எரிக்கும் நிகழ்வுக்கு ஏற... மேலும் பார்க்க

ஆம்ஆத்மியைத் தொடர்ந்து தாக்கரேயின் சேனாவிற்கு BJP குறி: டெல்லியில் உத்தவ் MP-கள் தனியாக ஆலோசனை?!

மகாராஷ்டிராவில் ஏற்கெனவே சிவசேனா இரண்டாக உடைந்துள்ளது. இப்போது துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தான் உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ... மேலும் பார்க்க

600 ஊழியர்கள், தினமும் 4000 சப்பாத்தி: சமையல்காரருக்கு ரூ.24 லட்சம் சம்பளம் கொடுக்கும் அம்பானி

தொழிலதிபர் முகேஷ் அம்பானி இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்காரராக திகழ்கிறார். அவரது வீடு மும்பையின் தென்பகுதியில் இருக்கிறது. அண்டிலியா என்ற அந்த வீடு மும்பையில் அனைவராலும் பார்க்க விரும்பும் ஒரு இடமா... மேலும் பார்க்க

அச்சுறுத்தும் Claude Mythos: சைபர் பாதுகாப்பை உறுதிசெய்ய நிர்மலா சீதாராமன் ஆலோசனை

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில் நுட்பம் மிகப்பெரிய அளவில் தொழில் துறையில் புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வந்த பிறகு மனிதர்கள் செய்யவேண்டிய வேலையின் அளவு... மேலும் பார்க்க

தயாராகும் 11,000 வீடுகள்: மும்பை தாராவி கட்டடங்களில் வசிப்பவர்களுக்கு 754 சதுர அடி வீடு

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவியில் உள்ள குடிசைகள் அனைத்தையும் அகற்றிவிட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பொறுப்பு அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த... மேலும் பார்க்க