செய்திகள் :

Labham 4: தங்கத்தில் கிடைத்த லாபத்தை பங்கில் கிடைத்த நஷ்டத்துடன் சரிசெய்து வரியை மிச்சப்படுத்தலாமா?

post image

கடந்த ஆண்டில் தங்கத்தில் பெரும் பணத்தை முதலீடு செய்தவர்கள் ஏறக்குறைய 75% வரை லாபம் பார்த்தார்கள். அதாவது, 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒருவர் தங்க இ.டி.எஃப் திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், 2026 மார்ச் மாதத்தில் அவர் செய்த முதலீடு ரூ.1.75 லட்சமாக வளர்ந்திருக்கும். ஒரு முதலீட்டில் ஒரே ஆண்டில் 75% லாபம் கிடைப்பது பெரிய விஷயம்தான்.

ஆனால், அதே காலகட்டத்தில் அதாவது, 2025 ஏப்ரல் மாதம் தொடங்கி, பங்குச் சந்தையில் நேரடியாகவோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக முதலீடு செய்து, அதை 2026 மார்ச் வரை வைத்திருந்தால், அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக 10 சதவிகிதத்துக்கு மேல் நஷ்டம் அடைந்திருப்பார். அதாவது, ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அவருடைய முதலீடு ரூ.90 ஆயிரமாகக் குறைந்திருக்கலாம்.

இந்த நிலையில், தங்க இ.டி.எஃப்-ல் அடைந்த லாபத்தைப் பங்குச் சந்தை முதலீட்டின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்துடன் சரிசெய்து, லாபத்துக்குக் கட்டவேண்டிய வரியைக் கட்டாமல் இருக்கலாமா என்பதுதான் பலரது கேள்வி.

வரி வருமானம்

இந்தக் கேள்விக்கான பதில், ஆம், தங்கத்தில் கிடைத்த லாபத்தைப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்துடன் சரிசெய்து, லாபத்துக்கான மூலதன ஆதாய வரியைக் கட்டாமல் இருக்க முடியும். வரித் துறையினர் இதனை 'லாஸ் செட் ஆஃப்' (Loss Setoff) என்று அழைக்கின்றனர். இதற்கான விதிமுறைகள் என்ன என்று பார்ப்போம்.

பொதுவாக, வரிக் கணக்கீடு என்று வரும்போது, முதலீட்டுக் காலத்தைப் பொறுத்து இரு வகையாகப் பிரிப்பார்கள். ஒன்று, குறுகிய காலம் (Short term) முதலீடு. இரண்டாவது, நீண்ட கால (Long term) முதலீடு. இந்தக் கால அளவு என்பது எதில் முதலீடு செய்கிறோம் என்பதைப் பார்த்து, மாறுபடும். உதாரணமாக, பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்திருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்திருந்தாலும், குறுகிய காலம் என்பது ஒரு ஆண்டுதான். ஒரு ஆண்டைத் தாண்டிவிட்டால் அந்த முதலீடு நீண்ட காலமாகக் கருதப்படும். ஆனால், தங்கத்தைப் பொறுத்தவரை கோல்டு இ.டி.எஃப் என்பது பங்குச் சந்தையில் வர்த்தகமாவதால், குறுகிய காலம் என்பது ஒரு ஆண்டுதான். ஆனால், கோல்டு இ.டி.எஃப் ஃபண்ட் ஆப் ஃபண்ட் என்பவை மியூச்சுவல் ஃபண்ட் வகையைச் சேர்ந்தது என்பதால், அதற்குக் குறுகிய காலம் என்பது 2 ஆண்டுகள் ஆகும். நீண்ட காலம் என்பது 2 ஆண்டுக்கு மேற்பட்ட காலம் ஆகும்.

சரி, இனி எதில் கிடைத்த லாபத்தை எதில் ஏற்பட்ட நஷ்டத்துடன் ஒப்பிட்டு சரிசெய்யலாம் என்று பார்ப்போம்.

தங்கம் முதல் பங்குச் சந்தை வரை...

தங்க முதலீட்டில் குறுகிய காலத்தில் கிடைத்த லாபத்தைப் பங்குச் சந்தையில் கிடைத்த குறுகிய கால மற்றும் நீண்ட கால நஷ்டத்துடன் சரிசெய்யலாம். அதாவது, லாபத்துக்குக் கட்ட வேண்டிய மூலதன ஆதாய வரியை நஷ்டத்துடன் சரிசெய்து, மூலதன ஆதாய வரியைக் கட்டாமல் இருக்கலாம்! உதாரணமாக, ஒருவர் தங்கத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்து, ஒரே ஆண்டில் 50% லாபம் அதாவது, ரூ.5 லட்சம் லாபம் பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த ரூ.5 லட்சத்திற்கு 20% வரி கட்ட வேண்டும். ரூ.5 லட்சம் லாபத்தில் ரூ.1.25 லட்சத்திற்கு எந்த வரியும் கட்டத் தேவை இல்லை. மீதமுள்ள ரூ.3.75 லட்சத்துக்கு 20% என ரூ.75 ஆயிரத்தை மூலதன ஆதாய வரியாகக் கட்ட வேண்டும்.

ஆனால், உங்களுக்குப் பங்குச் சந்தையில் நஷ்டம் வந்திருக்கிறது. உதாரணமாக, பங்குச் சந்தையில் ரூ.10 லட்சத்தை நீங்கள் முதலீடு செய்திருக்கிறீர்கள். சந்தை இறக்கம் காரணமாக, உங்கள் முதலீடு 15% நஷ்டம் கண்டுள்ளது. இதன் காரணமாக, உங்கள் முதலீடு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.8.50 லட்சமாகக் குறைந்துள்ளது. ஆக, உங்களுக்கு ரூ.1.50 லட்சம் நஷ்டம். இந்த நஷ்டத்தைத் தங்கத்தில் கிடைத்த லாபத்துடன் சரிசெய்யலாம். எப்படி?

தங்கத்தில் உங்களுக்குக் கிடைத்த லாபம் ரூ.3.75 லட்சம். பங்குச் சந்தையில் உங்களுக்குக் கிடைத்த நஷ்டம் ரூ.1.50 லட்சம். லாபத்தில் இருந்து நஷ்டத்தைக் கழித்தால், மீதமிருப்பது ரூ.2.25 லட்சம். இந்த ரூ.2.25 லட்சத்துக்குக் குறுகிய கால மூலதன ஆதாய வரி 20% அதாவது, ரூ.45 ஆயிரம் மூலதன ஆதாய வரியைக் கட்டினால் போதும். ரூ.30 ஆயிரம் வரியை மிச்சப்படுத்த முடிகிறது என்பது பெரிய விஷயம்தானே!

ஆனால், இதில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், நீண்ட கால முதலீட்டின் மூலம் கிடைத்த லாபத்தை நீண்ட கால நஷ்டத்துடன் மட்டுமே சரிசெய்ய முடியும். குறுகிய காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்துடன் சரிசெய்ய முடியாது.

பங்குச் சந்தை

சரி, தங்கத்தில் எந்த முதலீடும் செய்யவில்லை. பங்குச் சந்தையில் மட்டுமே செய்த முதலீடு நஷ்டத்தைத் தந்துள்ளது எனில், என்ன செய்வது? கவலை வேண்டாம். குறுகிய காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை அடுத்த 8 ஆண்டுகள் வரை கிடைக்கும் லாபத்துடன் சரிசெய்து, மூலதன ஆதாய வரியைக் கட்டாமல் தவிர்க்கலாம். அதாவது, இந்த ஆண்டில் ஏற்பட்ட நஷ்டத்தை அடுத்த ஆண்டில் கிடைக்கும் லாபத்துடன் சரிசெய்யலாம்! இப்படி அடுத்தடுத்த 8 ஆண்டுகளில் கிடைக்கும் லாபத்துடன் சரிசெய்யலாம்!

பலருக்கும் இந்த உண்மை விவரம் தெரியாததால், இந்த நன்மையைப் பயன்படுத்தாமலேயே இருந்துவிடுகின்றனர். இப்போது இந்த உண்மையை நீங்கள் தெரிந்துகொண்டதால், இனியாவது லாபத்துடன் நஷ்டத்தை கழித்து, அதற்கான மூலதன ஆதாய வரியை மட்டுமே கட்ட முற்படுங்கள்!

எச்சரிக்கை: இது ஒரு விழிப்புணர்வுக் கட்டுரை. வரி தொடர்பான விஷயங்களை உங்கள் ஆடிட்டரிடம் கலந்தாலோசித்து, கட்ட வேண்டிய வரியைக் கட்டுங்கள்!

labham
labham

லம்சம் முதலீடு செய்து நல்ல லாபம் பெறத் தயாரா?

நீங்கள் ₹ 25 லட்சம் அல்லது அதற்கு மேல் மொத்த பணம் (லம்சம்) வைத்துள்ளீர்களா? அதை எங்கு, எவ்வாறு முதலீடு செய்யலாம்? மாத பென்ஷன் பெறுவது எப்படி?

அனைத்தையும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் வரும் ஞாயிறு, ஏப்ரல் 26, காலை 11 மணிக்கு, மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்' வழங்கும் ஒர்க் ஷாப்பில் கலந்துகொள்ளலாம். முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-apr26-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_apr26_2026

'சிறப்புக் குழந்தை'! எங்களுக்குப் பின் யாரு பாத்துப்பா? கேள்விக்கு பதில்| பணம் வளர்ப்போம்

'நமக்குப் பின் யார்?' என்கிற கேள்வி, சிறப்புக் குழந்தைகளை வைத்திருக்கும் அனைத்து பெற்றோர்களுக்குமே உண்டு. அந்தக் குழந்தைகளுக்கான நிதி பாதுகாப்பு திட்டமிடலைப் பற்றி கூறுகிறார் நிதி ஆலோசகர் முனைவர் A.V ... மேலும் பார்க்க

₹25 லட்சம் கையில் இருக்கிறதா? மாதம் ₹10000 பெறலாம் + 25 வருடம் கழித்து ₹45 லட்சம்! எப்படி?

ஒருவரிடம் ₹25 லட்சம் மொத்தமாக (Lumpsum) கிடைத்தால், முதல் எண்ணம் என்னவாக இருக்கும்? "இதை எங்கும் விட்டுவிடக் கூடாது, பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்" என்பதுதான். முதலீட்டு உலகில் இதை 'Loss Aversion' ... மேலும் பார்க்க

'என் மகன்/மகளுக்கு 18 வயசு; ஆனால்...' - கல்யாண செலவு நிதியைத் திட்டமிட வழிகாட்டி | பணம் வளர்ப்போம்

குழந்தைகளின் திருமணம் என்பது அனைத்து பெற்றோர்களின் ஆசை. 'அப்படி செய்யணும்... இப்படி செய்யணும்' என்று ஏகப்பட்ட கனவுகள் வேறு இருக்கும். ஆனால், பெரும்பாலான திருமணங்கள் கடன் வாங்கித்தான் செய்யப்படுகின்றன.... மேலும் பார்க்க

உங்க குழந்தைகளோட School, College Fees சமாளிக்க இது ஒரு 'சூப்பர்' வழி! | பணம் வளர்ப்போம்

குழந்தை பிறந்தாச்சு... இதன் பிறகு, பெற்றோர்களுக்கு இருக்கும் அடுத்த மிகப்பெரிய செலவு, 'கல்விக் கட்டணம்'. எந்தத் திட்டமிடலில் கவனமாக இருக்கிறோமோ... இல்லையோ... கல்வி நிதி திட்டமிடல் மிகத் தெளிவாக இருக்க... மேலும் பார்க்க

'G.P.F. மற்றும் 'போஸ்ட் ஆஃபீஸ்' வேலைக்கு ஆவாதா? 'இரண்டாவது PF' பெற என்ன செய்யணும்?

காலை 9:45 மணிக்கு அவசரமாக வண்டியைப் பார்க் செய்துவிட்டு, பயோமெட்ரிக்கில் விரல் வைத்துவிட்டு, கொண்டுவந்த டிபன் கேரியரை டேபிளுக்குக் கீழே வைத்துவிட்டு சீட்டில் அமர்ந்தால்... அடுத்த விநாடி ஆரம்பமாகிறது உ... மேலும் பார்க்க

'பெற்றொர்' அத்தியாயத்தை கடனாளியாக இல்லாமல் மகிழ்ச்சியாகத் தொடங்க 'பிளான்'! | பணம் வளர்ப்போம்

பணம் வளர்ப்போம் - ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பதுதான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும். அப்படி இந... மேலும் பார்க்க