செய்திகள் :

'G.P.F. மற்றும் 'போஸ்ட் ஆஃபீஸ்' வேலைக்கு ஆவாதா? 'இரண்டாவது PF' பெற என்ன செய்யணும்?

post image

காலை 9:45 மணிக்கு அவசரமாக வண்டியைப் பார்க் செய்துவிட்டு, பயோமெட்ரிக்கில் விரல் வைத்துவிட்டு, கொண்டுவந்த டிபன் கேரியரை டேபிளுக்குக் கீழே வைத்துவிட்டு சீட்டில் அமர்ந்தால்... அடுத்த விநாடி ஆரம்பமாகிறது உங்களின் ஓட்டம்.

ஊரார் கண்ணுக்கு நீங்கள் ஒரு 'அரசாங்க அதிகாரி'. "அவருக்கு என்னப்பா, லைஃப் செட்டில்ட். மாசம் பிறந்தா சம்பளம், ரிட்டையர் ஆனா பென்ஷன்" என்று உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு ஒரு பெரிய மரியாதை உண்டு. ஆனால், யாருக்கும் தெரியாத ஒரு நிஜம் உங்கள் மனதுக்கு மட்டும்தானே தெரியும்?

ஒன்றாம் தேதி பேங்கில் இருந்து 'Salary Credited' என்று மெசேஜ் வரும்போதே, பத்தாம் தேதிக்குள் ஹவுசிங் லோன் இஎம்ஐ, பர்சனல் லோன் டியூ, குழந்தைகளின் ஸ்கூல்/காலேஜ் ஃபீஸ், மளிகை, பெட்ரோல், ஏலச்சீட்டு, எல்.ஐ.சி பிரீமியம் என எல்லாமே போக, மீதமுள்ள சிறு தொகையை வைத்துக்கொண்டு அடுத்த 20 நாட்களை ஓட்டுவதற்குள் நடக்கும் அந்த மனப்போராட்டம், ஒரு குடும்பத் தலைவனாக உங்கள் பொறுப்பைக் காட்டுகிறது. நீங்கள் கடந்த 10, 15 வருடங்களாக உழைத்துக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால், மாதக்கடைசியில் 'ஏன் எப்போதுமே பண நெருக்கடியிலேயே இருக்கிறோம்?' என்ற கேள்வி உங்களை உறங்கவிடாமல் செய்கிறதா?

Investment
Confused Person | Investment

அந்த மாயையான 'பாதுகாப்பு உணர்வு'

ஒரு அரசு ஊழியராக உங்கள் முதலீடு எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். பி.எஃப் (GPF), ரெக்கரிங் டெபாசிட் (RD), போஸ்ட் ஆஃபீஸ், மற்றும் ஒன்றிரண்டு எண்டோவ்மென்ட் பாலிசிகள். இவையெல்லாம் 'பாதுகாப்பானவை' என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உங்கள் ரத்தத்தில் ஊறியிருக்கிறது. ஏனென்றால், நம் அப்பாக்களும் தாத்தாக்களும் இதைத்தான் செய்தார்கள்.

ஒரு கசப்பான உண்மையைச் சொல்லட்டுமா? அன்றைக்கு இருந்த வாழ்க்கைச் செலவுகளும், தேவைகளும் வேறு. இன்றைக்கு நிலைமை வேறு. உங்கள் பணம் அந்தப் பழைய திட்டங்களில் 'பாதுகாப்பாக' பெட்டிக்குள் தூங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் அது வளரவில்லை!

ஒவ்வொரு முறையும் அரசாங்கம் 'அகவிலைப்படி' (DA) ஏற்றும்போது நீங்கள் சந்தோஷப்படுகிறீர்கள். ஆனால், நிஜத்தில் கல்விச் செலவும், மருத்துவச் செலவும் அதைவிட இரண்டு மடங்கு வேகத்தில் எகிறிக்கொண்டிருக்கிறது. 6% முதல் 7% வரை உள்ள பணவீக்கத்தை (Inflation), உங்கள் 7.1% ரிட்டர்ன் தரும் பாரம்பரிய முதலீடுகள் எப்படிச் சமாளிக்கும்? உங்கள் கண் முன்னே உங்கள் பணத்தின் மதிப்பு தேய்ந்துகொண்டிருக்கிறது. எப்போதுமே 'சேஃப்' ஆக ஆடுகிறோம் என்று நினைத்து, உங்கள் எதிர்காலத்தையே மிகப்பெரிய ரிஸ்க்கில் தள்ளிக்கொண்டிருக்கிறீர்கள்!

NPS - Pension - பென்ஷன்

'கூடுதல் பென்ஷன்' என்ற மாற்று வழி!

இன்னும் சில வருடங்களில் உங்கள் மகளின்/மகனின் திருமணமோ, உயர்கல்வியோ வரும்போது, 15 வருடங்கள் அரசாங்கத்தில் வேலை பார்த்தும் ஒரு பர்சனல்/எஜுகேஷன் லோனுக்காக பேங்கில் போய் நிற்கப் போகிறோமா? அல்லது நீங்கள் சேர்த்த வாய்த்த பணத்திலேயே காரியத்தை சிறப்பாக செய்திட முடியுமா?

60 வயதில் ரிட்டையர் ஆகும்போது, வரும் அந்த ஒற்றைப் பென்ஷனை (Pension) வைத்துக்கொண்டு, மருத்துவச் செலவுகளையும் சமாளித்து, யாருடைய தயவும் இல்லாமல் தலைநிமிர்ந்து வாழ முடியுமா?

கண்டிப்பாக முடியும்! ஆனால், அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். உங்களின் மிகப்பெரிய பலமான 'மாதாந்திர முதலீட்டு ஒழுங்கை' சரியான திசையில் திருப்புவது.

பங்குச்சந்தை என்றாலே ஏதோ சூதாட்டம், அது நமக்கு செட் ஆகாது என்ற பயத்தை விடுங்கள். உங்கள் மாதச் சம்பளத்தில் ஒரு சிறு தொகையை, நல்ல தரமான மியூச்சுவல் ஃபண்டுகளில் (Mutual Funds) SIP முறையில், எந்த ஆரவாரமும் இல்லாமல் தொடர்ந்து முதலீடு செய்து வாருங்கள்.

'கூட்டுவட்டி' (Power of Compounding) என்னும் மேஜிக் உங்கள் பணத்தை பல மடங்காகப் பெருக்கும். 60 வயதில் அரசாங்கம் தரும் பென்ஷனை விட, உங்கள் முதலீடு உங்களுக்குத் தரும் 'இரண்டாவது பென்ஷன்' மிகப் பெரியதாக இருக்கும்!

இந்த ரகசியத்தை எப்படிக் கற்றுக்கொள்வது?

நிதி ஆலோசனைகள் என்றாலே புரியாத ஆங்கில வார்த்தைகளில் குழப்புவார்கள் என்ற கவலை வேண்டாம். நீங்கள் எந்தப் பின்னணியில் இருந்து வந்தாலும், மிக எளிமையாக, ஒரு நண்பனைப் போல, வரும் ஏப்ரல் 22, மாலை 7 மணிக்கு வழிகாட்டப் போகிறோம்.

தலைப்பு: 60 வயதில் அமைதியான ஓய்வுக்காலம் - அரசு ஊழியர்களுக்கான 'கூடுதல் பென்ஷன்' உருவாக்கும் வழிகாட்டல்

நாள்: ஏப்ரல் 22, 2026, புதன்

நேரம்: மாலை 07:00 மணி - இந்திய நேரம்

பேச்சாளர்: டீம் லாபம்

100 பேருக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்: https://labham.money/events/webinar-apr22-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_apr22_2026

Labham Workshop for Government Employees, April 22 2026

இந்த ஆன்லைன் வழிகாட்டலில் நீங்கள் என்ன தெரிந்துகொள்வீர்கள்?

வெறும் சேமிப்பு ஏன் உங்களைக் கோடீஸ்வரன் ஆக்காது என்பதற்கான கணிதம்.

60 வயதில் நீங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ, உண்மையாகவே எவ்வளவு கார்பஸ் (Corpus) தேவை?

ஒரு சாமானிய அரசு ஊழியரின் சிறிய முதலீடு, எப்படி 15-20 வருடங்களில் மிகப்பெரிய செல்வமாக மாறுகிறது?

எந்தவித ரிஸ்க்கும் இன்றி, உங்கள் வயது மற்றும் பொறுப்புகளுக்கு ஏற்ற பாதுகாப்பான மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

எகுழந்தைகளின் உயர்கல்வி, திருமணம் மற்றும் உங்கள் ஓய்வுக்காலம்... மூன்றையும் ஒரே சம்பளத்தில் எப்படிக் கையாளுவது?

SWP Benefits |Happy Retirement
SWP Benefits |Happy Retirement

இது யாருக்கான நிகழ்ச்சி?

நாளுக்கு நாள் அதிகரிக்கும் செலவுகளைப் பார்த்து, எதிர்காலம் குறித்து உள்ளுக்குள் பயந்துகொண்டிருக்கும் அரசு ஊழியர்கள்.

தன் பிள்ளைகளுக்குத் தன்னைப்போல ஒரு நடுத்தர வர்க்கப் போராட்டத்தைக் கொடுக்காமல், மிகப்பெரிய நிதிப் பாதுகாப்பை உருவாக்கத் துடிக்கும் பொறுப்பான தந்தைகள்.

"பழைய பென்ஷன் திட்டம் வருமா, வராதா?" என்று மற்றவர்களை நம்பிக் காத்துக்கொண்டிருக்காமல், தன் ஓய்வுக்காலச் செல்வத்தைத் தன் கைகளாலேயே உருவாக்க நினைக்கும் சுயமரியாதை உள்ளவர்கள்.

உங்கள் குடும்பத்தின் அஸ்திவாரம் நீங்கள். உங்கள் நிதிச் சுதந்திரத்திற்கான முதல் படியை இன்றே எடுத்து வையுங்கள்!

(இது அரசு ஊழியர்களுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நேரலை வெபினார். உங்கள் அலுவலக நண்பர்களுக்கும் இதைப் பகிர்ந்து, அவர்களையும் முன்பதிவு செய்யச் சொல்லுங்கள். அனுமதி இலவசம்!)

நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-apr22-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_apr22_2026

'பெற்றொர்' அத்தியாயத்தை கடனாளியாக இல்லாமல் மகிழ்ச்சியாகத் தொடங்க 'பிளான்'! | பணம் வளர்ப்போம்

பணம் வளர்ப்போம் - ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பதுதான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும். அப்படி இந... மேலும் பார்க்க

Labham - 3: EMI + SIP... வீட்டுக் கடனை எளிதாகக் கட்டி முடிக்கும் சூப்பர் ஃபார்முலா

35 வயதானாலே போதும், 'சொந்தமா இன்னும் வீடு வாங்கலையா...? கடனைக் கிடனை வாங்கி, மொதல்ல, ஒரு வீடு வாங்குப்பா...' என்று நெருக்குதலைத் தர இன்று பல வீடுகளில் 'பெரியவர்கள்' தயாராக இருக்கிறார்கள். இன்றுள்ள நில... மேலும் பார்க்க

NRI - 10: ரிஸ்க்கே எடுக்க மாட்டேன் என்பவரா நீங்கள்? எத்தனை லட்சங்களை நீங்கள் இழப்பீர்கள் தெரியுமா?

மனிதர்கள் இரண்டு வகை. 'எந்த விஷயத்திலும் நான் ரிஸ்க்கே எடுக்க மாட்டேன்' என்பவர்கள் ஒரு வகை. 8 மணிக்கு ரயில் என்றால், 7.30 மணிக்கே ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்விடுவார்கள். 40 கிலோ மீட்டருக்கு மேல் வண்டிய... மேலும் பார்க்க

`25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம்' புதுச்சேரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி; அனுமதி இலவசம்; பரிசு உண்டு

சம்மர் வந்துவிட்டது. கொளுத்தும் வெயிலில் எல்லோரும் ஏசி, குளிர் சாதனங்களை அதிகம் பயன்படுத்துவோம். இதனால் மின்கட்டணமும் எகிறும். ஆனால், இந்த வெயில் காலத்திலும் இலவச மின்சாரம் மூலம் மின் கட்டணத்திலிருந்த... மேலும் பார்க்க

கையில் பணம் புழங்கிக்கொண்டே இருக்க செய்யக் கூடாத தவறுகளின் லிஸ்ட் | பணம் வளர்ப்போம் - 4

என்ன தான் பார்த்து பார்த்து நிதி திட்டமிடல் செய்தாலும், சில நேரங்களில் சில தவறுகளும் நடந்துவிடும். அவை தெரிந்து செய்யும் தவறுகள் அல்ல... தெரியாமல் செய்யும் தவறுகள் தான். அவை என்னென்ன என்பதை பட்டியலிடு... மேலும் பார்க்க

Labham - 2: தங்கம் விலை இந்த 10 ஆண்டில் எத்தனை மடங்கு உயரும்? #அக்‌ஷய திருதியை #Akshaya Tritiya

தங்கம் என்பது நம் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். இதனால் நமக்கு மொத்தமாக எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கம் வாங்கிக் குவிக்கிறார்கள் நம் மக்கள். இன்னும் சில நாள்களில் அக்ஷய திருதியை ப... மேலும் பார்க்க