செய்திகள் :

மேற்கு வங்கம்: "பாஜகவிற்குச் சாதகமாக போலீஸ்" - "TMC-க்குச் சாதகமாக அடியாட்கள்?" - TMC vs BJP புகார்

post image

இன்று மேற்கு வங்கத்தில் முதல்கட்ட சட்டமன்றத் தேர்தல் நடந்து வருகிறது.

2011-ம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்து வரும் திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி, நான்காவது முறையாக ஆட்சியைத் தக்க வைப்பாரா என்கிற கேள்வி இருந்து வருகிறது.

இந்த நிலையில், மேற்கு வங்க அமைச்சர் சசி பாஞ்சா செய்தியாளர்கள் சந்திப்பில், "பூர்வா மேதினிபூர் மாவட்டக் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றனர். அவர்கள் பாஜகவிற்குச் சாதகமாக நடந்துகொள்கின்றனர்" என்று பேசியுள்ளார்.

சுவேந்து அதிகாரி
சுவேந்து அதிகாரி

மேலும், இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கும் இரண்டு போலீஸ் அதிகாரிகளை நீக்குமாறு திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் புகாரளித்திருக்கின்றனர்.

இதற்கு பதில் தருவது போல, பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ சுவேந்து அதிகாரி, "வாக்காளர்களை திரிணாமுல் காங்கிரஸின் அடியாட்கள் மிரட்டுகின்றனர்.

பயங்கரக் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் மிக சுதந்திரமாக நடனமாடுகிறார்கள்... சில வாக்குச்சாவடிகளில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால், வாக்காளர்களுக்கு நம்பிக்கை கொடுக்க அந்த இடங்களுக்கு நான் சென்று கொண்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இன்று தமிழ்நாடு 80% வாக்கு சதவிகிதத்தை தொடுமா? - Tough போட்டி கொடுக்கும் 2021-ம் ஆண்டு தேர்தல்!

இன்னும் சில மணி நேரத்தில் 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவடைய உள்ளது. சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பிறகு, இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பிறகு, தமி... மேலும் பார்க்க

"இது வாக்குச்சாவடி, சினிமா படப்பிடிப்பு தளம் அல்ல..!" - வாக்களித்த சிம்ரன் பதிவு

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடக்கிறது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள். 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.... மேலும் பார்க்க

"முன்பு வாரம் ஒருவரை அடித்து தூக்கிலிட்டுவிட்டு தற்கொலை என்பார்கள்" - மேற்கு வங்கத்தில் மோடி பேச்சு

மேற்கு வங்கத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் இரண்டாம் கட்ட தேர்தலுக்காகப் பரப்புரை செய்து வருகிறார் பிரதமர் மோடி. மேற்கு வங்கத்தில் இன்று நடந்து வரும் முதல் கட்ட தேர்தல் குறித்து மோடி பிரசாரத்தில் பேசியதாவத... மேலும் பார்க்க

'நீதி கிடைக்கவில்லை' - தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் இறங்கிய வேங்கைவயல் மக்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பகுதி பட்டியலின சமூக மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் எனும் கிராமத்தில் வசிக்கும் பட்டியல் இன மக்கள... மேலும் பார்க்க

'நேற்று இரவு கிளம்பிய பஸ் இன்று மாலை 6 மணிக்குத்தான்.!' - EC மீதான அண்ணாமலையின் 'தனிப்பட்ட' கருத்து

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை கவுண்டம்பாளையத்தில் வாக்களித்தார். அதன் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "சென்னையில் இருந்து தென் தமிழகத்த... மேலும் பார்க்க