செய்திகள் :

NRI Corner 11: வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களே, உஷார்! நீங்கள் சம்பாதிக்கும் பணம் இழப்பதற்கல்ல!

post image

வளைகுடா நாட்டில் வசிக்கும் தமிழர் ஒருவருடன் சில நாள்களுக்கு முன்பு பேசிக்கொண்டிருந்தேன். ''கடந்த 20 ஆண்டுகளில் எத்தனையோ திட்டங்களில் பணத்தைப் போட்டுவிட்டேன். ஆனால், அத்தனையும் தவறானவை என்று இப்போதுதான் புரிகிறது'' என்று, அவர் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்

''வெளிநாடுகளில் வசிக்கும் நாங்கள் தமிழகத்தில் வசிக்கும் குடும்பத்தினருக்குப் பணம் அனுப்பவும், பணத்தைப் பத்திரமாக வைத்துக்கொள்ளவும் நம் நாட்டு வங்கிகளைத்தான் பெரிதும் நம்புகிறோம். ஆனால், வங்கிகள் என்ன செய்கின்றன? நம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு தவறான திட்டங்களில் பணம் போடும்படி சொல்லி வற்புறுத்துகின்றன. உதாரணமாக, யூலிப் பாலிசிகள். 15, 20 ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல லாபம் கிடைக்கும் என்று சொல்லி யூலிப் பாலிசிகளை நம் தலையில் கட்டிவிடுகிறார்கள். ஆனால், இப்போது போய்க் கேட்டால், கட்டிய பணத்தைவிட மிகக் குறைவாகத்தான் கிடைக்கும் என்கிறார்கள். அவர்கள் சொன்ன லாபம் எதுவும் கிடைக்கிற மாதிரி தெரியவில்லை.

இது ஒரு பக்கம் என்றால், வருஷத்துக்கு ஒருமுறை ஊருக்கு வரும்போது எங்களை இன்ஷுரன்ஸ் ஏஜென்டுகள், சீட்டுக் கம்பெனி நடத்துபவர்கள் மொய்த்துக்கொள்கிறார்கள். இந்தத் திட்டத்தில் உங்களுக்கு அருமையான லாபம் கிடைக்கும். அந்தத் திட்டங்களில் எக்கச்சக்க லாபம் கிடைக்கும் என்றெல்லாம் சொல்லி, ஏதோ ஒரு திட்டத்தில் பணத்தைப் போட வைத்துவிடுகிறார்கள். ஆனால், ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு போய்க் கேட்டால், கடைசி வரை பணம் கட்டினால்தான் பணம் கிடைக்கும் என்கிறார்கள். ஒரு திட்டத்தில் எவ்வளவு காலத்துக்குப் பிறகு பணம் எடுக்க முடியும் என்கிற மாதிரியான 'லாக் இன்' விவரங்களைக்கூட எங்களிடம் சொல்லாமல் பணத்தை வாங்கிவிடுகிறார்கள். நாங்களும் நண்பரின் மகன், உறவினரின் மகன் என்பதற்காகப் பணத்தைப் போட்டுவிடுகிறோம். கடைசியில் அந்தத் திட்டங்களில் பணம் போட்டதால், பெரிய பிரயோஜனம் இல்லாமலே போகிறது.

இது மாதிரியான பல தவறுகளை செய்துவிட்டு, சரியான திட்டங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் எங்களுக்கு 55 வயது ஆகிவிடுகிறது. சரியாக முதலீடு செய்து செல்வம் சேர்க்க வேண்டிய 15 ஆண்டு காலத்தை நாங்கள் இழந்துவிடுகிறோம். மீதமிருக்கும் 5 அல்லது 10 ஆண்டுகளில் எங்களால் எவ்வளவு பணத்தை சேர்த்துவிட முடியும்? ஆக, வெளிநாட்டில் கஷ்டப்பட்டு வேலை பார்த்து, கொஞ்சம் அதிகமாகவே சம்பாதித்தாலும், அதை சரியாக முதலீடு செய்யாததால், மிகக் குறைந்த பணத்துடன்தான் மீண்டும் தமிழகத்திற்கு வந்து செட்டில் ஆகிறோம்'' என்று தன் சோகத்தைக் கொட்டித் தீர்த்தார் அவர்.

போனில் பேசிய இவர் மட்டுமல்ல, இன்றைக்கு வெளிநாடுகளில் வசிக்கும் பலருக்கும் பெரும் கவலை தரும் விஷயமாக இருப்பது இதுதான். அதாவது, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எதில் முதலீடு செய்தால், ஓரளவுக்கு நல்ல லாபமும் கிடைக்கும்; அதே நேரத்தில் பணம் மோசம் போகாமல் பத்திரமாக இருக்கும் என்பதே அவர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது. காரணம், அவர்களால் கஷ்டப்பட்டு சம்பாதிக்கத்தான் முடிகிறதே தவிர, எது சரியான முதலீடு, எது தவறான முதலீடு என்பதைத் துல்லியமாக ஆராய்ந்து பார்த்து, கச்சிதமான முடிவை எடுக்கத் தெரிவதில்லை. இந்த நிலையில், அவர்களிடம் ஏதேதோ திட்டங்கள் பற்றிய கவர்ச்சிகரமான விஷயங்களை மட்டும் எடுத்துச் சொல்லி, அதன் இன்னொரு பக்கத்தை சொல்லாமலே விட்டுவிடுவதால், பிற்பாடு அவர்கள் மிகவும் கவலைக்குள்ளாகிறார்கள்.

இவர் போல வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு உதவுவதற்காகவே ஒரு சிறப்பு ஏற்பாட்டினை செய்திருக்கிறது 'லாபம்' மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம். எந்த முதலீடு உங்களுக்கு ஏற்றது, எதில் முதலீடு செய்தால், பணம் பத்திரமாகவும் இருக்கும்; நீண்ட காலத்தில் நல்ல லாபமும் கிடைக்கும், நினைத்த நேரத்தில் அந்த முதலீட்டில் இருந்து பணத்தைத் திரும்ப எடுக்க முடியுமா, பாதகமான விஷயங்கள் என்னென்ன என்பதை எடுத்துச் சொல்லி, வழிகாட்டுவதற்கென 'ஒன் டு ஒன் மிட்டிங்' ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது 'லாபம்' மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம். இதில் நீங்களும் கலந்துகொண்டு உங்களுக்கான முதலீட்டு ஆலோசனையைப் பெற வேண்டும் எனில், பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...

NRI Calendly - https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

இது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கான சிறப்பு ஏற்பாடு என்பதால், அவர்கள் மட்டுமே இந்த காலண்டி லிங்க்கில் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். இந்தியாவில் வசிப்பவர்கள் இதில் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டாம் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்!

நிதிச் சுதந்திரம் வேண்டுமா?

உங்களுக்கு நிதிச் சுதந்திரம் வேண்டுமா? நிதிச் சுதந்திரம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்லும் வீடியோவை நீங்களும் பார்த்து பயன் பெற வேண்டுமா? இதோ இந்த லிங்க்கை கிளிக் செய்து, உங்கள் பெயரைப் பதிவு செய்து, வீடியோவைப் பாருங்கள்...

https://labham.money/live-webinar/financial-independence?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=auto_webinar_fin_ind

லாபம் வாட்ஸ் அப் குரூப்பில் இணைய விருப்பமா? இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்!

https://labham.money/events/webinar-apr18-2026?utm_source=labham_whatsapp&utm_medium=whatsapp_group&utm_campaign=webinar_apr18_2026

Labham Youtube Video: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

Labham 4: தங்கத்தில் கிடைத்த லாபத்தை பங்கில் கிடைத்த நஷ்டத்துடன் சரிசெய்து வரியை மிச்சப்படுத்தலாமா?

கடந்த ஆண்டில் தங்கத்தில் பெரும் பணத்தை முதலீடு செய்தவர்கள் ஏறக்குறைய 75% வரை லாபம் பார்த்தார்கள். அதாவது, 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒருவர் தங்க இ.டி.எஃப் திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திரு... மேலும் பார்க்க

'சிறப்புக் குழந்தை'! எங்களுக்குப் பின் யாரு பாத்துப்பா? கேள்விக்கு பதில்| பணம் வளர்ப்போம்

'நமக்குப் பின் யார்?' என்கிற கேள்வி, சிறப்புக் குழந்தைகளை வைத்திருக்கும் அனைத்து பெற்றோர்களுக்குமே உண்டு. அந்தக் குழந்தைகளுக்கான நிதி பாதுகாப்பு திட்டமிடலைப் பற்றி கூறுகிறார் நிதி ஆலோசகர் முனைவர் A.V ... மேலும் பார்க்க

₹25 லட்சம் கையில் இருக்கிறதா? மாதம் ₹10000 பெறலாம் + 25 வருடம் கழித்து ₹45 லட்சம்! எப்படி?

ஒருவரிடம் ₹25 லட்சம் மொத்தமாக (Lumpsum) கிடைத்தால், முதல் எண்ணம் என்னவாக இருக்கும்? "இதை எங்கும் விட்டுவிடக் கூடாது, பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்" என்பதுதான். முதலீட்டு உலகில் இதை 'Loss Aversion' ... மேலும் பார்க்க

'என் மகன்/மகளுக்கு 18 வயசு; ஆனால்...' - கல்யாண செலவு நிதியைத் திட்டமிட வழிகாட்டி | பணம் வளர்ப்போம்

குழந்தைகளின் திருமணம் என்பது அனைத்து பெற்றோர்களின் ஆசை. 'அப்படி செய்யணும்... இப்படி செய்யணும்' என்று ஏகப்பட்ட கனவுகள் வேறு இருக்கும். ஆனால், பெரும்பாலான திருமணங்கள் கடன் வாங்கித்தான் செய்யப்படுகின்றன.... மேலும் பார்க்க

உங்க குழந்தைகளோட School, College Fees சமாளிக்க இது ஒரு 'சூப்பர்' வழி! | பணம் வளர்ப்போம்

குழந்தை பிறந்தாச்சு... இதன் பிறகு, பெற்றோர்களுக்கு இருக்கும் அடுத்த மிகப்பெரிய செலவு, 'கல்விக் கட்டணம்'. எந்தத் திட்டமிடலில் கவனமாக இருக்கிறோமோ... இல்லையோ... கல்வி நிதி திட்டமிடல் மிகத் தெளிவாக இருக்க... மேலும் பார்க்க

'G.P.F. மற்றும் 'போஸ்ட் ஆஃபீஸ்' வேலைக்கு ஆவாதா? 'இரண்டாவது PF' பெற என்ன செய்யணும்?

காலை 9:45 மணிக்கு அவசரமாக வண்டியைப் பார்க் செய்துவிட்டு, பயோமெட்ரிக்கில் விரல் வைத்துவிட்டு, கொண்டுவந்த டிபன் கேரியரை டேபிளுக்குக் கீழே வைத்துவிட்டு சீட்டில் அமர்ந்தால்... அடுத்த விநாடி ஆரம்பமாகிறது உ... மேலும் பார்க்க