செய்திகள் :

`யார் ஆட்சிக்கு வந்தாலும் அந்த நம்பிக்கை இருக்கிறது..!' - நடிகர் யோகி பாபு

post image

தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில், சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில், நடிகர் யோகிபாபு தன் குடும்பத்துடன் மதுரவாயல் தொகுதியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ஓட்டுப்போடுவதன் வலியும் அதன் முக்கியத்துவமும் நமக்குத் தெரிய வேண்டும். பணத்திற்காக ஓட்டை விற்பது என்பது மிகப்பெரிய தவறு. 'மண்டேலா' திரைப்படத்தைப் பார்த்தால் ஒரு வாக்கின் வலிமை என்ன என்பது அனைவருக்கும் புரியும்.

நடிகர் யோகிபாபு
நடிகர் யோகிபாபு

இளைஞர்கள் பலர் வாக்களிக்க வருவதில்லை என்ற கருத்து நிலவுகிறது. அவர்கள் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும். ஓட்டு என்பது மிகவும் முக்கியமானது. இந்த ஜனநாயக நாட்டில் நமது நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிப்பது இளைஞர்கள்தான். எனவே, அனைவரும் திரண்டு வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம் நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் இந்த ஜனநாயகக் கடமையில் பங்கெடுக்க வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டார்.

``மீண்டும் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும்... ஏனென்றால்" - ப.சிதம்பரம் சொல்லும் விளக்கம்

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று காரைக்குடியில் தனது வாக்கினைப் பதிவு செய்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ``தமிழ்நாட்டு மக்கள் மீண... மேலும் பார்க்க

தமிழகத் தேர்தல் களம்: எடப்பாடியில் வாக்குப்பதிவு சாதனை; ஸ்டாலின், விஜய், சீமான் தொகுதிகளின் நிலவரம்?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய அரசியல் தலைவர்களின் தொகுதிகளில் மாலை 5 மணிவரை பதிவான வாக்குப்பதிவு சதவிகித விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ப... மேலும் பார்க்க

சேலம் 88%, ஈரோடு 87%... மாலை 5 மணிக்கே உச்சம் தொட்ட வாக்கு சதவிகிதம்! காரணம் என்ன?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிகத்து வர... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: "தாமரை எங்கும் மலரும்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்ளுக்கு.!"- மோடி வாக்குறுதி

மேற்கு வங்கத்தில் இன்று (ஏப்.23) முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், மேற்கு வங்கம் மதுராபூரில் நடைபெற்ற பேரணியில்... மேலும் பார்க்க

``மாற்றம் வரும் என நம்புகிறோம்" - நடிகர் ஆதி பேட்டி

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று காலை முதலே திரையுலக நட்சத்திரங்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகளான நடி... மேலும் பார்க்க

நெல்லை: `இரட்டைக் கொலை, கல்குவாரிக்கு எதிர்ப்பு' - தேர்தலைப் புறக்கணித்த கிராம மக்கள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் விறுவிறுப்பாக, சட்டமன்றத் தேர்தல் நடந்து வரும்போதிலும், நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி மற்றும் இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப் போட மறுத்து பொதுமக்... மேலும் பார்க்க