செய்திகள் :

``மீண்டும் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும்... ஏனென்றால்" - ப.சிதம்பரம் சொல்லும் விளக்கம்

post image

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று காரைக்குடியில் தனது வாக்கினைப் பதிவு செய்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ``தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. ஏனென்றால் மாநிலம் முழுவதும் நிலையான அரசு, வளர்ச்சி, மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் ஆகிய மூன்று கோரிக்கைகளே எதிரொலிக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் இந்த மூன்றையும் சிறப்பாக வழங்கிய திராவிட முன்னேற்றக் கழக அரசு, மீண்டும் ஆட்சியை அமைக்கும்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

கடன் வாங்குவது என்பது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் ஒரு விஷயம். அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசு நாடுகளே கடன் வாங்குகின்றன. கடனுக்கான வட்டியைத் திருப்பச் செலுத்தும் வருவாய் (Service the loan) இருந்தால் கடன் வாங்குவதில் தவறில்லை. திறமையான அமைச்சர்களும் அதிகாரிகளும் இருக்கும்போது வரவு செலவுத் திட்டத்தில் எந்தச் சிக்கலும் ஏற்படாது.

அரசு வழங்கும் நலத்திட்டங்கள், அவை இலவசங்கள் அல்ல. இவை 'அனைவருக்குமான அடிப்படை வருமானம்' என்பதன் ஒரு பகுதி. விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் மக்கள் அனைவருக்கும் ஒரு குறைந்தபட்ச வருமானத்தை அரசு உறுதி செய்கிறது. இது பொருளாதார ரீதியாக மக்களை உயர்த்துவதற்கான ஒரு படிநிலையே ஒழிய, இலவசம் கிடையாது" என விளக்கம் அளித்தார்.

தமிழகத் தேர்தல் களம்: எடப்பாடியில் வாக்குப்பதிவு சாதனை; ஸ்டாலின், விஜய், சீமான் தொகுதிகளின் நிலவரம்?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய அரசியல் தலைவர்களின் தொகுதிகளில் மாலை 5 மணிவரை பதிவான வாக்குப்பதிவு சதவிகித விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ப... மேலும் பார்க்க

சேலம் 88%, ஈரோடு 87%... மாலை 5 மணிக்கே உச்சம் தொட்ட வாக்கு சதவிகிதம்! காரணம் என்ன?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிகத்து வர... மேலும் பார்க்க

`யார் ஆட்சிக்கு வந்தாலும் அந்த நம்பிக்கை இருக்கிறது..!' - நடிகர் யோகி பாபு

தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில், சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில், நடிகர் யோகிபாபு தன் குடும்பத்துடன் மதுரவாயல் தொ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: "தாமரை எங்கும் மலரும்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்ளுக்கு.!"- மோடி வாக்குறுதி

மேற்கு வங்கத்தில் இன்று (ஏப்.23) முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், மேற்கு வங்கம் மதுராபூரில் நடைபெற்ற பேரணியில்... மேலும் பார்க்க

``மாற்றம் வரும் என நம்புகிறோம்" - நடிகர் ஆதி பேட்டி

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று காலை முதலே திரையுலக நட்சத்திரங்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகளான நடி... மேலும் பார்க்க

நெல்லை: `இரட்டைக் கொலை, கல்குவாரிக்கு எதிர்ப்பு' - தேர்தலைப் புறக்கணித்த கிராம மக்கள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் விறுவிறுப்பாக, சட்டமன்றத் தேர்தல் நடந்து வரும்போதிலும், நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி மற்றும் இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப் போட மறுத்து பொதுமக்... மேலும் பார்க்க