செய்திகள் :

``மாற்றம் வரும் என நம்புகிறோம்" - நடிகர் ஆதி பேட்டி

post image

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று காலை முதலே திரையுலக நட்சத்திரங்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகளான நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி ஆகியோர் இன்று சென்னை எக்மோர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இணைந்தபடி வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ``அதிக அளவிலான வாக்குப்பதிவு என்பது ஒரு மிகச்சிறந்த விஷயம். மக்கள் அனைவரும் திரண்டு வந்து வாக்களிப்பதுதான் ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம் என்று நான் நினைக்கிறேன். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

நடிகர் ஆதி - நிகிகல்ரானி
நடிகர் ஆதி - நிகிகல்ரானி

சுருக்கமாகச் சொல்லப்போனால், தமிழக மக்களுக்கும் புதிய வாக்காளர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது இதுதான். மக்கள் தங்கள் எதிர்காலத்திற்காகவும், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் வாக்களிக்க வேண்டும். நேர்மையாக இருப்பதுதான் இதில் மிக முக்கியமான விஷயம். இதுவரை வாக்களிக்காதவர்கள் தயவுசெய்து உங்கள் வாக்கைச் செலுத்துங்கள். ஒரு ஜனநாயக நாட்டில் இதுதான் மிக முக்கியமான கடமை. மாற்றம் வரும் என நம்புகிறோம். நல்லதே நடக்கும்.

வாக்களிப்பது உரிமை, அவர்களின் அதிகாரம். தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களிடம் தான் இருக்கிறது. வாக்களிக்க வராமல் இருந்துவிட்டு, பின்னர் குறைகூற நமக்கு எந்த உரிமையும் இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்த ஒரு நாள்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது, எனவே உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள். நாம் அனைவரும் 4-ம் தேதிக்காக காத்திருப்போம். வாக்களிக்கச் சென்றவகள் பாதியிலேயே சிக்கியிருப்பதாகவும் அறிந்தேன். அனைவரும் பாதுகாப்பாகச் சென்று பாதுகாப்பாக தங்கள் இடங்களுக்குத் திரும்புவீர்கள் என நம்புகிறேன்." என்றார்.

`யார் ஆட்சிக்கு வந்தாலும் அந்த நம்பிக்கை இருக்கிறது..!' - நடிகர் யோகி பாபு

தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில், சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில், நடிகர் யோகிபாபு தன் குடும்பத்துடன் மதுரவாயல் தொ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: "தாமரை எங்கும் மலரும்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்ளுக்கு.!"- மோடி வாக்குறுதி

மேற்கு வங்கத்தில் இன்று (ஏப்.23) முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், மேற்கு வங்கம் மதுராபூரில் நடைபெற்ற பேரணியில்... மேலும் பார்க்க

நெல்லை: `இரட்டைக் கொலை, கல்குவாரிக்கு எதிர்ப்பு' - தேர்தலைப் புறக்கணித்த கிராம மக்கள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் விறுவிறுப்பாக, சட்டமன்றத் தேர்தல் நடந்து வரும்போதிலும், நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி மற்றும் இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப் போட மறுத்து பொதுமக்... மேலும் பார்க்க

இன்று தமிழ்நாடு 80% வாக்கு சதவிகிதத்தை தொடுமா? - Tough போட்டி கொடுக்கும் 2021-ம் ஆண்டு தேர்தல்!

இன்னும் சில மணி நேரத்தில் 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவடைய உள்ளது. சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பிறகு, இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பிறகு, தமி... மேலும் பார்க்க

"இது வாக்குச்சாவடி, சினிமா படப்பிடிப்பு தளம் அல்ல..!" - வாக்களித்த சிம்ரன் பதிவு

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடக்கிறது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள். 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: "பாஜகவிற்குச் சாதகமாக போலீஸ்" - "TMC-க்குச் சாதகமாக அடியாட்கள்?" - TMC vs BJP புகார்

இன்று மேற்கு வங்கத்தில் முதல்கட்ட சட்டமன்றத் தேர்தல் நடந்து வருகிறது.2011-ம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்து வரும் திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி, நான்காவது முறையாக ஆட்சியைத் ... மேலும் பார்க்க