செய்திகள் :

மாணவர்களை அலறவிடும் அணில்: பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் காயம்!

post image

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள மோகன்லால் சுகாடியா பல்கலைக்கழகத்தில், ஒரு சிறிய அணிலின் விசித்திரமான நடத்தை ஒட்டுமொத்த வளாகத்தையே திகைக்க வைத்துள்ளது. பொதுவாக மனிதர்களைக் கண்டாலே மர உச்சிக்கு ஓடும் அணில்களுக்கு மத்தியில், இந்த அணில் மட்டும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களைத் துரத்தித் துரத்தித் தாக்கி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஒன்றரை மாதங்களாக, இந்த ஒற்றை அணில் சுமார் 20-க்கும் மேற்பட்டோரை கடித்துள்ள சம்பவம், பல்கலைக்கழக வட்டாரத்தில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.

அந்த அணில் கல்லூரியின் வராண்டாக்கள் மற்றும் ஜன்னல் திரைகளுக்குப் பின்னால் மறைந்திருந்து, அவ்வழியே செல்லும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது எதிர்பாராத விதமாகப் பாய்ந்து கடிப்பதை வழக்கமாகவே கொண்டுள்ளது . பல்கலைக்கழகத்தின் கலைக் கல்லூரி மற்றும் உளவியல் துறைகளின் நுழைவாயில் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்த அணில் , கல்லூரியின் டீன் மற்றும் பல ஆராய்ச்சி மாணவர்களையும் தாக்கியுள்ளது.

இந்த அணிலைப் பிடிப்பதற்காக வனவிலங்கு மீட்புக் குழுவினர் பலமுறை கூண்டுகள் வைத்தும், அது எதற்கும் சிக்காமல் தப்பித்து வருவது அதிகாரிகளுக்கே பெரும் சவாலாக மாறியுள்ளது.

தொடர்ச்சியாக நடக்கும் இந்தத் தாக்குதல்களால் காயமடைந்தவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அந்தப் பகுதியில் இருக்கும் நீர்நிலையை ஒட்டி அமர்ந்து புகைப்படம் எடுக்கவோ அல்லது சாதாரணமாகக் கடந்து செல்லவோ மாணவர்கள் இப்போது அச்சப்படுகின்றனர்.

தன் எல்லைக்குள் யாரும் நுழையக்கூடாது என்ற தீவிரமான தற்காப்பு உணர்வாலோ அல்லது இயற்கை மாற்றங்களாலோ இந்த அணில் இவ்வளவு ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறது என நிபுணர்கள் கருதுகின்றனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் நிலவும் பதற்றத்தைத் தணித்து இயல்பு நிலையைத் திரும்பக் கொண்டுவர, அந்த அணிலைப் பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விடுவிப்பதே தற்போதைய அவசியமாகும்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மரணத்துக்கு `தர்பூசணி காரணம் அல்ல' - இறந்தவர்கள் உடலில் விஷம்?

மும்பையில் கடந்த வாரம் தர்பூசணி சாப்பிட்டதால் அப்துல்லா என்பவரும், அவரது மனைவி மற்றும் மகள்கள் என்ற நான்கு பேர் இறந்தனர். அப்துல்லா தனது உறவினர்கள் 5 பேரை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு பிரியாணி விருந... மேலும் பார்க்க

திருமங்கலம்: உழைப்பாளர் தினத்தையொட்டி ரஜினி கோவிலில் 16 வகை அபிஷேகத்துடன் வழிபாடு செய்த ரசிகர்!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் என்பவர் ரஜினிகாந்திற்கு கோவில் கட்டியுள்ளார். இந்த கோவிலில் கருங்கற்களால் ஆன இரண்டு சிலைகளை பிரதிஷ்டை செய்து 'ரஜினி கோவில்' என பெயர் சூட... மேலும் பார்க்க

"கணவர் ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொடுத்துவிட்டுப் போய்விட்டார்" - குழந்தையுடன் ஆட்டோ ஓட்டும் மும்பைப் பெண்

மும்பை கல்யான் பகுதியைச் சேர்ந்த கோமல் கெய்க்வாட் என்ற 25 வயது பெண் தனது 3 வயது கைக்குழந்தையை கையில் வைத்துக்கொண்டு ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார். கோமல் கெய்க்வாடிற்கு 18 வயதில் திருமண... மேலும் பார்க்க

`உழைக்கும் வர்க்கமே... உலகம் உனதே!' - `May 1' தூய்மை காக்கும் தொழிலாளர்கள் | புகைப்படத் தொகுப்பு!

தூய்மை பணியாளர்களின் சேவையை பாரட்டுவோம்தூய்மை பணியாளர்களின் சேவைதூய்மை பணியாளர்களின் சேவைதூய்மை பணியாளர்களின் சேவைதூய்மை பணியாளர்களின் சேவைதூய்மை பணியாளர்களின் சேவைதூய்மை பணியாளர்களின் சேவைதூய்மை பணிய... மேலும் பார்க்க

`மராத்தி மொழி கட்டாயம் கத்துக்கணும்' - ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு கெடு நீட்டிப்பு!

மகாராஷ்டிராவில் மும்மை, புனே, நாசிக், நாக்பூர் போன்ற பகுதியில் ஆயிரக்கணக்கான ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இவர்கள் மராத்தி இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிப்... மேலும் பார்க்க

கொல்கத்தா: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திறக்க முயற்சி?திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம்!

கொல்கத்தாவில் பதிவான வாக்குகள் அங்குள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.அதில் நேதாஜி உள்விளை... மேலும் பார்க்க