செய்திகள் :

AI-யின் மேஜிக்: கிபி 79-ல் இத்தாலியில் எரிமலை வெடித்த போது ஓடிய நபர்; கண்முன்னே கொண்டு வந்த AI

post image

வளர்ந்து வரும் இந்த நவீன யுகத்தில் ஏஐ என்கிற செயற்கை நுண்ணறிவு நினைத்துப் பார்க்காதவற்றையும் நிகழ்த்திக் காட்டி வருகிறது.

தற்போது மீண்டும் அதை நிரூபிக்கும் வகையில் இத்தாலிய நாட்டு பாம்பே நகரில் கிபி 79-ல் மவுண்டு வெசுவியஸ் எரிமலை வெடித்தபோது எரிமலையிலிருந்து வெளியான எரிமலை குழம்புகளில் சிக்கி உயிரிழந்த பலருடைய எச்சங்கள் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டன.

இரண்டு ஆண்களின் எலும்புக்கூடுகள் போர்ட்டா ஸ்டேபியா நெக்ரோ போலிஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. அப்போது கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் இறுதி வாழ்க்கை நிகழ்வுகளை ஏஐ தொழில்நுட்பம் மூலம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மீட்டுருவாக்கம் செய்திருக்கின்றனர்.

AI மீட்டுருவாக்கம் செய்த உருவம்
AI மீட்டுருவாக்கம் செய்த உருவம்

இதில் ஒரு நபர் தன்னுடைய தலையில் 'டெரகோட்டா மோர்டார்' என்ற பெரிய மண் பாத்திரத்தை கவசமாக பயன்படுத்தியதையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எலும்புக்கூட்டின் அளவீடு, தொல்பொருள் தரவுகள் மற்றும் புகைப்பட எடிட்டிங் நுட்பங்களைச் சேர்த்து பயன்படுத்தி ஏஐ மூலம் மனித உருவமாக வடிவம் கொடுத்துள்ளனர். எலும்புக்கூட்டை வெறும் எலும்புக்கூடாக மட்டும் பார்க்காமல், எரிமலை வெடித்தபோது அருகில் இருந்த மனிதர் எப்படி உணர்ந்திருப்பார், என்ன வகையான மனநிலையில் இருந்திருப்பார் என்பதையெல்லாம் ஒரு காட்சியாக வடிவமைத்து ஏஐ உருவாக்கியுள்ளது.

வடிவமைப்பு:

முதலில் டிஜிட்டல் வடிவில் எலும்புக்கூட்டை 3டி ஸ்கேனிங் செய்துள்ளனர். அந்த எலும்புக் கூட்டின் வயது, இனம், உடல், ஆரோக்கியம் மற்றும் மரபணு சார்ந்த தகவல்களை ஏ.ஐ அல்காரிதம்கள் பகுப்பாய்வு செய்துள்ளது.

சேகரிக்கப்பட்ட வரலாற்றுத் தகவல்கள் மூலம் எதார்த்தமான மனித தோற்றம் பின்னர் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏஐ
ஏஐ

இது தொல்பொருள் ஆய்வில் புதிய விஷயமாகவும், நேரடியாக வரலாற்றைக் காண்பதற்குரிய அனுபவத்தையும் தருகிறது.

இந்தத் தொழில்நுட்பம் மூலம் வரலாற்றை எளிமையாகப் புரிந்துகொண்டு, அனுபவமாக மாற்ற இது பெரிதும் உதவுவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் வரலாற்று தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ளவும், அழிந்துபோன நாகரீக வாழ்க்கையை டிஜிட்டல் முறையின் மூலம் மீட்டுருவாக்கம் செய்யவும் சிறந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

Whatsapp-க்கு செக்?! 'டிராக்கிங் இல்லை, விளம்பரம் இல்லை' - எலான் மஸ்கின் XChat; அப்படி என்ன ஸ்பெஷல்?

'XChat' என்ற புதிய செயலிமெசேஜிங் செயலிகள் உலகில் முடிசூடா மன்னனாக வலம்வரும் வாட்ஸ்அப்பிற்கு நேரடிப் போட்டியாக, எலான் மஸ்கின் X நிறுவனம் 'XChat' என்ற புதிய செயலியை களமிறக்கியுள்ளது. பயனர்களின் தனியுரிம... மேலும் பார்க்க

ஆன்லைன் கேம்களுக்கு மே 1-ம் தேதி முதல் செக்; வயது, பதிவு வங்கி - எல்லா பக்கமுமே 'கேட்' |Full Summary

பணம் இழப்பு, கடன், தற்கொலை என இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்ந்து பெரும் தொல்லையாகவும், பிரச்னையாகவும் இருந்தது... இருந்து வருகிறது. 'சரி... பிரச்னையாகத்தான் இருக்கிறதே... அப்போது அந்த விளையாட... மேலும் பார்க்க

Meta: 8000 பேரைப் பணிநீக்கம் செய்யும் மெட்டா; விருப்ப ஓய்வு தரும் மைக்ரோசாஃப்ட்; காரணம் என்ன?

தனது நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மொத்த பணியாளர்களில் 10 சதவிகித ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக மெட்டா நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதே சமயம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தனது நிறுவனத்தின் ஊழியர்கள் ஆயி... மேலும் பார்க்க

John Ternus: ஆப்பிள் சிஇஓ பதவியிலிருந்து விலகும் டிம் குக்; புதிய தலைவராக ஜான் டெர்னஸ் நியமனம்!

டிம் குக் ஓய்வுஆப்பிள் நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத் தலைமைச் செயலதிகாரியாகப் பணியாற்றி வரும் டிம் குக், வரும் செப்டம்பர் 1, 2026 அன்று அப்பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ளார். அவருக்குப் பதிலாக, நிறுவ... மேலும் பார்க்க

AI மீது 'மாயக் காதல்': அமெரிக்கத் தொழிலதிபர் தற்கொலை - கூகுள் மீது வழக்கு

இன்று உலகமே உள்ளங்கையில் சுருங்கிவிட்டதாக நம்பும்படி ஏஐ உலகம் உருவாகியிருக்கிறது. குறிப்பாக ஜெமினி, சாட் ஜிபிடி போன்ற நேரடி உரையாடல் அனுபவம் பெரும் அளவில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அவை இன்னொரு ஆபத்... மேலும் பார்க்க

வாகனத்தின் டயர் தேய்ந்துவிட்டதா... கண்டுபிடிப்பது எப்படி? - இது தெரியாமப் போச்சே?! - 18

புதிதாக டயர் வாங்கும்போது அல்லது காரைச் சுத்தம் செய்யும்போது, டயரின் இடுக்குகளில் சிறிய ரப்பர் கோடுகள் அல்லது மேடுகளை நீங்கள் கவனித்திருக்கலாம். இவை வெறும் அலங்காரத்திற்காக உருவாக்கப்பட்டவை அல்ல.டயரின... மேலும் பார்க்க