"சில தொகுதிகளில் விசிக தோழர்களிடம் ஒற்றுமை குறைவு" - திருமாவளவன் வருத்தம்
திருமங்கலம்: உழைப்பாளர் தினத்தையொட்டி ரஜினி கோவிலில் 16 வகை அபிஷேகத்துடன் வழிபாடு செய்த ரசிகர்!
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் என்பவர் ரஜினிகாந்திற்கு கோவில் கட்டியுள்ளார். இந்த கோவிலில் கருங்கற்களால் ஆன இரண்டு சிலைகளை பிரதிஷ்டை செய்து 'ரஜினி கோவில்' என பெயர் சூட்டி வழிபாடு நடத்தி வருகிறார். இங்கு தினந்தோறும் காலை, மாலை என இரு வேளைகளிலும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், மே தினத்தில் உழைப்பின் உன்னதத்தை போற்றும் வகையில் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' படத்தில் அவர் ஆட்டோ ஓட்டுநராக வரும் கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும் வகையில், ஆட்டோ அருகில் ரஜினி நிற்பது போன்ற கட்-அவுட் கோவிலில் வைக்கப்பட்டிருந்தது. அந்த கட்டவுட்டிற்கு ,பால், பன்னீர், தயிர், இளநீர்,சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

அபிஷேகத்தை தொடர்ந்து, உழைப்பாளர்கள் அனைவரும் வாழ்வில் எல்லா வளமும் பெற வேண்டும் என வேண்டி தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, ரஜினி சிலைக்கு முன்பாக அவரது 'கூலி' படத்தின் புகைப்படத்தோடு, தொழிலாளர்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய கட்டிங் பிளேடு, திருப்புலி, நட்டு, போல்டு உள்ளிட்ட கருவிகளைக் கொண்டு "உழைப்பாளர் தினம்" என்ற எழுத்து வடிவத்தில் அலங்கரிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதனை தொடர்ந்து ரஜினி ரசிகரான கார்த்திக் பேசியபோது, நாங்கள் ஐந்தாவது ஆண்டாக மே தினத்தை ரஜினி கோயிலில் கொண்டாடுகிறோம். உழைப்பாளர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்பேனர், போல்ட் மற்றும் நட் போன்ற இரும்பு கருவிகளைக் கொண்டே 'உழைப்பாளர் தினம்' என்ற எழுத்து வடிவிலான அலங்காரத்தை இந்த ஆண்டு கோவிலில் அமைத்துள்ளோம்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் வாழ்வில் மேலோங்க வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை" என்றார்.



















