செய்திகள் :

ஆன்லைன் கேம்களுக்கு மே 1-ம் தேதி முதல் செக்; வயது, பதிவு வங்கி - எல்லா பக்கமுமே 'கேட்' |Full Summary

post image

பணம் இழப்பு, கடன், தற்கொலை என இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்ந்து பெரும் தொல்லையாகவும், பிரச்னையாகவும் இருந்தது... இருந்து வருகிறது.

'சரி... பிரச்னையாகத்தான் இருக்கிறதே... அப்போது அந்த விளையாட்டுகளை விளையாடாமல் இருக்கலாமே?' என்கிற விவாதம் எழுவதற்கு முன்பே, இந்தியாவில் இந்த விளையாட்டுகளுக்கு அடிமையாக பலர் மாறிவிட்டனர்.

இதனால், இந்த அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் செக் வைப்பதுபோல, மத்திய அரசு, இணையவழி சூதாட்டத்தை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல், 2025-ஐ (Promotion and Regulation of Online Gaming (PROG) Act) கொண்டு வந்துள்ளது.

ஆன்லைன் கேமிங்
ஆன்லைன் கேமிங்

இந்தச் சட்டம் வருகிற மே 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்தச் சட்டத்தின் மூலம் என்னென்ன நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன என்பதை இங்கே பார்ப்போம்.

பணம் சம்பந்தப்பட்ட விளையாட்டா?

> முதலில், இந்தச் சட்டத்தின் படி, குறிப்பிட்ட ஆன்லைன் விளையாட்டு பணத்தைப் பயன்படுத்தி விளையாடும் விளையாட்டா... இ-விளையாட்டா, பொழுதுபோக்கு விளையாட்டா, சமூக விளையாட்டா என்று பார்க்கப்படும்.

இ-விளையாட்டு என்றால் நிஜ போட்டிகள்போல ஆன்லைனில் நடக்கும் போட்டிகள். உதாரணம், ஆன்லைன் செஸ் போட்டி.

சமூக விளையாட்டு என்றால் ஒன்றிற்கும் மேற்பட்டோர் பணம் இல்லாமல் ஆன்லைனில் குழுவாக விளையாடும் விளையாட்டு.

பணத்தை உட்படுத்தி விளையாடும் விளையாட்டு என்றால், அந்த விளையாட்டிற்கு அனுமதி இல்லை... தடை செய்யப்படும். மற்றப்படி, பிற விளையாட்டுகள் வழக்கம் போல தொடரும்.

இந்த விளையாட்டுகளில் பாதுகாப்பு வசதி மற்றும் பயனர் புகாரளிப்பதற்கான வசதியும் இருக்க வேண்டும்.

இங்கே பாதுகாப்பு வசதி என்று கூறப்படுவது, வயது வரம்பு சரிபார்ப்பு, குறிப்பிட்ட நேரம் மட்டுமே விளையாட முடியும் என்று நேரத்தை நிர்ணயிப்பது, பேரண்டல் கன்ட்ரோல் இருப்பது, ஒருவேளை விளையாட்டிற்கு அடிமையானால் கவுன்சலிங் சப்போர்ட் கொடுப்பது போன்றவை ஆகும்.

குறிப்பிட்ட விளையாட்டு பயனரின் பணம், மனம், சமூகம், பாதுகாப்பு போன்றவற்றிற்கு பாதிப்பு இல்லாமல் இருக்கவேண்டும்.

புகார்
புகார்

மூன்று அடுக்கு புகார்

அடுத்ததாக, பயனர் புகாரளிப்பதற்கான வசதி என்று வரும்போது, ஆன்லைன் விளையாட்டுகளில் புகாரளிப்பதற்கான வசதி இருக்க வேண்டும்.

ஒருவேளை, அங்கே திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என்றால், இந்திய ஆன்லைன் கேமிங் ஆணையத்திடம் 30 நாள்களுக்குள் புகாரளிக்கலாம். இவர்கள் உங்களுக்கான பதிலை 30 நாள்களுக்குள் தருவார்கள்.

இங்கே இருந்து வரும் பதிலும் திருப்திகரமாக இல்லையென்றால், தகவல் தொழில்நுட்ப செயலாளரிடம் புகாரளிக்கலாம்.

ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது...

> மேலே சொன்ன 'இந்திய ஆன்லைன் கேமிங் ஆணையம்' இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்படும்.

இந்த ஆணையத்தின் தலைவராக இந்த அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் செயல்படுவார். மேலும், இந்த ஆணையத்தில் உள்துறை, நிதி, விளையாட்டு, சட்டம், தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆகிய அமைச்சகங்களின் பிரதிநிதிகளும் இந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இவர்கள் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையும் 'சட்டப்படி தான் இயங்குகிறதா' என்பதைத் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள்.

பணம்
பணம்

மூன்று வழிகள்...

> ஒரு ஆன்லைன் கேம் பணம் சம்பந்தமான விளையாட்டா... இல்லையா என்பது மூன்று வழிகளில் நிர்ணயிக்கப்படும்.

1. இந்திய ஆன்லைன் கேமிங் ஆணையம் தானாகவே ஆன்லைன் விளையாட்டுகளைச் சரிபார்க்கும்.

2. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் இந்த ஆணையத்திடம் விண்ணப்பம் சமர்பிக்கும்.

3. அரசு வெளியிடும் விதிமுறைகளின்படி, ஆன்லைன் விளையாட்டுகள் உள்ளதா என்பது படியும் நிர்ணயமாகும்.

ஆணையமே ஒரு விளையாட்டை எடுத்து சரிபார்க்கும்போது, 90 நாள்களுக்குள் ரிவ்யூ நடைமுறை முடிய வேண்டும்.

பதிவு முக்கியம் பிகிலு

> இந்தியாவில் ஒரு இ-விளையாட்டு நடத்தப்படுகிறது என்றால், கண்டிப்பாக ஆணையத்திடம் பதிவு செய்திருக்கவேண்டும்.

ஒரு சில பொழுதுபோக்கு மற்றும் சமூக விளையாட்டுகளுக்கும் பதிவு செய்வது அவசியம் ஆகும். இந்தப் பதிவு என்பது அரசு கட்டாயமாக வலியுறுத்தியிருந்தால் மட்டும் தேவையானது.

இ-விளையாட்டு பதிவிற்காக விண்ணப்பிக்கப்படும்போது, விளையாட்டு நடத்தும் நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது, அந்த நிறுவனத்தின் தலைமையகம் எங்கு இருக்கிறது என்பது முற்றிலும் செக் செய்யப்படும்.

ஒருமுறை, மத்திய அரசு பதிவை வழங்கினால், அது 10 ஆண்டுகளுக்குச் செல்லும்.

வங்கி
வங்கி

வங்கிகள்தான் பொறுப்பு

> இந்தச் சட்டத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. ஒரு குறிப்பிட்ட விளையாட்டிற்கு சந்தேகம்படும் படியோ, தொடர்ந்து பண பரிவர்த்தனை ஆகிக்கொண்டிருந்தால், வங்கிகள் அந்த விளையாட்டு நிறுவனங்களிடம் பதிவு சான்றிதழை கேட்கலாம்.

ஆணையம் தடைசெய்த விளையாட்டுகளுக்கு பணம் செல்வது... பணம் பரிவர்த்தனை ஆவதைத் தடுப்பது... நிறுத்துவது அனைத்தும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கைகளில்தான்.

ஆக, மக்களே... இந்த விதிமுறைகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்... இன்னும் ஏதேனும் விதிமுறை இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அது எது?

Meta: 8000 பேரைப் பணிநீக்கம் செய்யும் மெட்டா; விருப்ப ஓய்வு தரும் மைக்ரோசாஃப்ட்; காரணம் என்ன?

தனது நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மொத்த பணியாளர்களில் 10 சதவிகித ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக மெட்டா நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதே சமயம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தனது நிறுவனத்தின் ஊழியர்கள் ஆயி... மேலும் பார்க்க

John Ternus: ஆப்பிள் சிஇஓ பதவியிலிருந்து விலகும் டிம் குக்; புதிய தலைவராக ஜான் டெர்னஸ் நியமனம்!

டிம் குக் ஓய்வுஆப்பிள் நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத் தலைமைச் செயலதிகாரியாகப் பணியாற்றி வரும் டிம் குக், வரும் செப்டம்பர் 1, 2026 அன்று அப்பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ளார். அவருக்குப் பதிலாக, நிறுவ... மேலும் பார்க்க

AI மீது 'மாயக் காதல்': அமெரிக்கத் தொழிலதிபர் தற்கொலை - கூகுள் மீது வழக்கு

இன்று உலகமே உள்ளங்கையில் சுருங்கிவிட்டதாக நம்பும்படி ஏஐ உலகம் உருவாகியிருக்கிறது. குறிப்பாக ஜெமினி, சாட் ஜிபிடி போன்ற நேரடி உரையாடல் அனுபவம் பெரும் அளவில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அவை இன்னொரு ஆபத்... மேலும் பார்க்க

வாகனத்தின் டயர் தேய்ந்துவிட்டதா... கண்டுபிடிப்பது எப்படி? - இது தெரியாமப் போச்சே?! - 18

புதிதாக டயர் வாங்கும்போது அல்லது காரைச் சுத்தம் செய்யும்போது, டயரின் இடுக்குகளில் சிறிய ரப்பர் கோடுகள் அல்லது மேடுகளை நீங்கள் கவனித்திருக்கலாம். இவை வெறும் அலங்காரத்திற்காக உருவாக்கப்பட்டவை அல்ல.டயரின... மேலும் பார்க்க

Google Pay-ல் 'Pocket Money' ஆப்ஷன்: க்ளிக் செய்தால் மொத்த பணமும் காலியா? |Explainer & Fact Check

லேட்டஸ்ட் அப்டேட் 'கூகுள் பே'-யில் இப்போது 'People' பிரிவில், முதல் வரிசையில் முதல் ஐகானே, 'Pocket Money' என்ற ஒன்று புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஐகான் குறித்து தற்போது ஆடியோ ஒன்று பகிரப்பட்டு வர... மேலும் பார்க்க

1972 Vs 2026: தொழில்நுட்பம் மாறினாலும் மாறாத பூமியின் வசீகரம் - நாசாவின் வரலாற்றுப் பதிவு!

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, 'அப்போலோ' விண்கலத்தில் சென்ற வீரர்கள் நிலவில் கால் தடம் பதித்தபோது, ஒட்டுமொத்த உலகமே வியப்பில் உறைந்து போனது. அந்த வரலாற்றுத் தருணத்திற்குப் பிறகு, மீண்டும் மனிதர்களை நி... மேலும் பார்க்க