செய்திகள் :

`ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால் உள்ளிட்டோரும்...' - பாஜகவில் இணைந்த ராகவ் சதா தகவல்!

post image

ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகவ் சதா மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி இருக்கின்றனர்.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராகவ் சதா, ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால், சந்தீப் பாடக், அசோக் மிட்டல், ராஜேந்தர் குப்தா, விக்ரம் சாஹ்னி ஆகிய 7 எம்.பி-க்கள் ஆம் ஆத்மியில் இருந்து விலகியிருக்கின்றனர்.

ராகவ் சதா
ராகவ் சதா

இதில் எம்பி ராகவ் சதா ஆம் ஆத்மியில் இருந்து விலகி , பாஜகவில் இணைந்திருக்கிறார்.

தவிர ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால் இருவரும் பாஜகவில் இணையயிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் இது தொடர்பாகப் பேசிய ராகவ் சதா, "ரத்தம், வியர்வையை சிந்தி, 15 ஆண்டுகளாக நான் வளர்த்தெடுத்த கட்சி அறநெறிகளில் இருந்து விலகிவிட்டது.

ஆம் ஆத்மி கட்சி நாட்டின் நலனுக்காக செயல்படாமல் தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவே செயல்படுகிறது.

தவறான கட்சியில் சிக்கிக் கொண்ட சரியான நபர் என்ற மனநிலை சில ஆண்டுகளாக எனக்குத் தோன்றியது.

ஊழலை ஒழிக்க வந்த கட்சி, இப்போது ஊழல் கட்சியாகிவிட்டதால் விலகுகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

ஒரே நேரத்தில் ஏழு எம்.பி.க்கள் அக்கட்சியை விட்டு வெளியேறி பா.ஜ.க-வில் இணைந்திருப்பது, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமைக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தத் திடீர் அரசியல் மாற்றம் நாடாளுமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியின் பலத்தையும் கணிசமாகக் குறைத்திருக்கிறது.

இது வரவிருக்கும் தேர்தல்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

``ரத்தம், வியர்வை சிந்தி நான் வளர்த்த கட்சி, இன்று..!"- ஆம் ஆத்மியிலிருந்து ராகவ் சதா விலகல்

ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகவ் சதா மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி இருக்கின்றனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற... மேலும் பார்க்க

"மாயாஜாலக் கணக்குகளை மக்கள் உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள்"- வாக்குப்பதிவு குறித்து தவெக விஜய்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வாக்கு சதவிகிதம் பதிவாகியிருக்கும் நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "குறிப்பி... மேலும் பார்க்க

"சோதனை நடத்துவது தப்பு கிடையாது; உண்மையை மறைப்பது ஏன்?"- ஆதாரத்தை காட்டிய செல்வப்பெருந்தகை

ராகுல் காந்தி பிரசாரத்திற்காக தமிழகம் வந்திருக்கும் வேளையில் தன்னை 'சோதனை' என்ற பெயரில் முடக்கி வைத்திருப்பதாகத் செல்வப்பெருந்தகை கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் வருமான வரித்து... மேலும் பார்க்க

நேபாள அரசியல் மாற்றம்: `அமைச்சர்களின் வெளியேற்றமும் மக்களின் கொந்தளிப்பும்!' - Gen Z அரசியல்| அலசல்

Gen Z அரசியல்நேபாளத்தில் கடந்த மார்ச் 5-ம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில், காத்மாண்டு முன்னாள் மேயரும் ராப் பாடகருமான பாலன் ஷா (பாலேந்திர ஷா) வெற்றிபெற்று மார்ச் 27 அன்று பிரதமராகப் பதவியேற்றார். இந்த... மேலும் பார்க்க

"ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி" - பாஜக தலைவர் நிதின் நபின் விமர்சனம்

ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் விமர்சித்திருக்கிறார்.சத்தீஸ்கர் மாநிலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய நிதின் நபினிடம் எதிர்க்கட்சித் தலைவர் ... மேலும் பார்க்க

இந்தியா குறித்து ட்ரம்பின் சர்ச்சைக்குரிய பதிவு: "அறியாமை, பொருத்தமற்றது'' - இந்தியா கடும் கண்டனம்

இந்தியா மற்றும் சீனாவை "நரகக் குழி" (Hellholes) என்று அமெரிக்க வானொலி தொகுப்பாளர் மைக்கேல் சாவேஜ் வர்ணித்து, நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு நீண்ட கட்டுரையைத் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார். இது இந்... மேலும் பார்க்க