செய்திகள் :

"இன்றும் கோயிலுக்குள் எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது!" - 'பஞ்சாயத்' சீரிஸ் நடிகர் ஆதங்கம்

post image

அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியான 'பஞ்சாயத்' வெப் சீரிஸில் நடித்துப் பிரபலமானவர் வினோத் சூர்யவன்ஷி.

வினோத் சூர்யவன்ஷி - பஞ்சாயத் வெப் சீரிஸ்
வினோத் சூர்யவன்ஷி - பஞ்சாயத் வெப் சீரிஸ்

சமீபத்திய பேட்டி ஒன்றில், நிஜ வாழ்க்கையில் இன்றைய தேதியிலும் அவர் எதிர்கொண்டு வரும் சாதியப் பாகுபாடுகள் மற்றும் தீண்டாமை குறித்து வேதனையுடன் பேசியிருக்கிறார்.

அவர், "ஒரு நடிகராக மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்றிருந்தாலும், எனது சொந்த ஊரில் இன்னும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை.

நாங்கள் இப்போதும் கோயில்களுக்கு வெளியே நின்றுதான் கடவுளை வணங்குகிறோம். உள்ளே நுழைய எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது.

கோயில்கள் மட்டுமல்லாது, சலூன் கடைகளிலும் எங்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது.

எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தலைமுடி வெட்ட அங்குள்ளவர்கள் மறுக்கிறார்கள். இதற்காக நாங்கள் பல மைல் தூரம் பயணித்து வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.

வினோத் சூர்யவன்ஷி - பஞ்சாயத் வெப் சீரிஸ்
வினோத் சூர்யவன்ஷி - பஞ்சாயத் வெப் சீரிஸ்

திரைப்படங்களில் நாம் ஒரு கதாபாத்திரமாகக் கொண்டாடப்படலாம், ஆனால் நிஜத்தில் என் சாதிதான் பலரின் கண்களுக்குத் தெரிகிறது.

கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் நாடு முன்னேறிவிட்டதாகச் சொன்னாலும், கிராமப்புறங்களில் இன்னும் இத்தகைய பிற்போக்குத்தனமான சாதியக் கட்டமைப்புகள் வலுவாக உள்ளன.

இந்த வேதனை எப்போது மாறும் என்று தெரியவில்லை" எனப் பேட்டியில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் வினோத் சூர்யவன்ஷி.

Bollywood: ``சுஷாந்த் மரணத்திற்கு பாலிவுட் மாஃபியாதான் காரணம்" - உடைத்துப் பேசும் நடிகை தனுஸ்ரீ!

பாலிவுட் திரையுலகில் நிலவும் அசாத்தியமான சூழல்கள் மற்றும் "பாலிவுட் மாஃபியா" (Bollywood Mafia) குறித்தும், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் நடிகை ஜியா கான் ஆகியோரின் மரணங்களுக்குப் பின்னால் இருக்... மேலும் பார்க்க

மனைவி குறித்து பேசிய ரித்தேஷ் தேஷ்முக்; தேம்பி அழுத ஜெனிலியா - வைரலாகும் வீடியோ!

சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் 'ராஜா சிவாஜி'. ரித்தேஷ் தேஷ்முக் இப்படத்தை இயக்கியிருக்கிறார். 'ராஜா சிவாஜி' படத்தில் அபிஷேக் பச்சன் நடித்திருக்கிறார்... மேலும் பார்க்க

Hansika: 'காஸ்டிங் கௌச்' குறித்த கேள்விக்கு நடிகை ஹன்சிகாவின் பதில் - விவாதிக்கும் நெட்டிசன்கள்!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்த செய்தியைத் தொடர்ந்து மீண்டும் தலைப்புச் செய்திக... மேலும் பார்க்க

"சினிமா வேண்டாம் என்று ரூ.4500 சம்பளத்தில் வேலை செய்கிறார்" - மகன் குறித்து நடிகர் அக்‌ஷய் குமார்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் நடிகை டிவிங்கிள் கண்ணா தம்பதியின் மகன் ஆரவ் தனது 15 வயதில் லண்டன் சென்று பேஷன் டிசைனிங் கற்றுக்கொண்டு வந்தார். லண்டனில் படிக்கச் சென்றபோது தனக்கு தேவையான சாப்பாட... மேலும் பார்க்க

சுகேஷின் ரூ.200 கோடி மோசடி வழக்கு; அப்ரூவராக மாற நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விருப்பம்

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவிந்தர் சிங் சிறையில் இருந்தபோது அவரை வெளியில் கொண்டு வருவதாக தொழிலதிபர் மனைவியிடம் கூறி ரூ.200 கோடி பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திர சேகர் என்பவர் கைது செய்யப்பட்டு சிற... மேலும் பார்க்க

'சிராக் பஸ்வானுடன் காதல்?' - கங்கனா ரனாவத்தின் விளக்கம் என்ன?

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்று, நாடாளுமன்றம் சென்றுவிட்டார். ஆனால் சிறிது நாட்களில் தனக்கு அரசியல் பிடிக்கவில்லை என்று பேட்டியளிக்க ஆரம்பித்தார். இப்போது நாடா... மேலும் பார்க்க