VBJ: ரூ.5,000 கோடி வருவாயை நோக்கி 125 ஆண்டுகள் பழைமையான நகைக் கடை நிறுவனம்!
சென்னை: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - விலை உயர்ந்த பைக்கால் சிக்கிய இளைஞர்கள்
சென்னை, வேளச்சேரி பகுதியில் வசித்து வரும் 32 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனியார் வணிக வளாகத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 25.04.2026-ம் தேதி இரவு, வேலை முடந்து வீட்டிற்கு செல்ல வேளச்சேரி, நேரு நகர், திரு.வி.க. தெருவில் தனியாக நடந்துச் சென்றார். அப்போது இளம்பெண்ணை பின்தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு நபர்கள், திடீரென அவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தனர். அதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், கூச்சலிட்டார். உடனே பைக்கில் வந்த இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து இளம்பெண், வேளச்சேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞர்களின் பதிவு நம்பர் கிடைத்தது. அதன்அடிப்படையில் விசாரித்தபோது பாலியல் தொல்லைக் கொடுத்தது வேளச்சேரியைச் சேர்ந்த உதயகுமார் (30), அவரின் நண்பர் சிவதாஸ் எனத் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய விலை உயர்ந்த பைக்கையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

















